October 18, 2019

பரம்பொருள்-பதிவு-74


             பரம்பொருள்-பதிவு-74

நாரதர் :
“நாராயணனால்
வதம் செய்யப்பட்ட
இரண்யகசிபுவின்
பேரன்களான
சுந்தன், உபசுந்தன் ஆகிய
இரண்டு சகோதரர்களும்
பிரிக்க முடியாத
அன்புடன் திகழ்ந்தனர். “

“இரண்டு சகோதரர்களும்
ஒற்றுமையின்
இலக்கணமாகத்
திகழ்ந்தார்கள் ;
சகோதரர்கள் என்றால்
இப்படித் தான் இருக்க
வேண்டும் என்று
அனைவரும் வியக்கும்
வண்ணம் வாழ்ந்ததோடு
மட்டுமல்லாமல்
சகோதரர்களின் ஒற்றுமைக்கு
ஒரே எடுத்துக் காட்டாய்
திகழ்ந்தார்கள் ;
பார்த்தவர்கள் அனைவரும்
பொறாமைப்படும் அளவிற்கு
சகோதர பாசத்துடன்
திகழ்ந்தார்கள் ;
ஒற்றுமையாக இருக்கும்
இவர்களை யாராலும்
எந்த சக்தியாலும்
பிரிக்க முடியாது என்று
சொல்லத்தக்க வகையில்
ஒற்றுமையுடன்
திகழ்ந்தார்கள் ; “

“ஓர் உயிர் இரு
உடலாக வாழ்ந்த
அவர்கள் ஒன்றாகவே
உண்டு உறங்கி வாழ்ந்து
நாட்டை ஆண்டார்கள்”

“இவர்கள் மூன்று
லோகங்களையும்
தங்களுடைய ஆதிக்கத்தின்
கீழ் கொண்டு வர
வேண்டும் என்று விரும்பி;
கடுந்தவமிருந்து
மூம்மூர்த்திகளையும்
வரவழைத்து;
யாராலும் தங்களுக்கு
அழிவுவரக் கூடாது;
என்ற வரத்தைப் பெற்றனர்”

“வரத்தைப் பெற்று
உயர்ந்த நிலைக்கு
சென்ற இவர்கள்
அடக்கமாக இருக்கவில்லை ;
ஆணவம் தலைக்கேறியதால்
யாரையும் மதிக்கவில்லை ;
அனைவரையும்
அவமதிக்கும் விதத்தில்
நடந்து கொண்டனர் ;
தன்னுடைய சொற்களைக்
கேட்டு நடக்க வேண்டும்
என்று கட்டளை பிறப்பித்து
தேவர்களை கைது செய்து
சிறையில் அடைத்து
அடிமையாக வைத்திருந்து
அடக்கியாண்டு கொண்டு
இருந்ததோடு மட்டுமல்ல
தேவர்களுக்கு பலவகையிலும்
துன்பத்தைக் கொடுத்துக்
கொண்டிருந்தனர் ; ”

“இவர்கள் தேவர்களை
அடக்கியாண்டு அடிமையாக
வைத்திருந்த காரணத்தினால்
பாதிக்கப்பட்ட தேவர்கள்
அனைவரும் ஒன்றாகச்
சேர்ந்து இரண்டு
சகோதரர்களையும்
அழிப்பதற்காக
தேவசிற்பியான
விஸ்வகர்மாவின்
துணையோடு
திலோத்தமையை
உருவாக்கி இரண்டு
சகோதரர்களையும்
அழிப்பதற்காக
அனுப்பி வைத்தனர் ”

“இதுவரை ஒற்றுமையாக
இருந்த இரண்டு
சகோதரர்களும்
திலோத்தமையை பார்த்தது
முதல் அவள் அழகில்
மயங்கி அவளை யார்
அடைவது என்று போட்டி
போட்டுக்கொண்டு
தனக்கு தான் அந்த
பெண் உரிமையுடையவள்
என்று ஒருவருக்கொருவர்
சண்டையிட்டுக் கொண்டனர்;
ஒற்றுமையாக இருந்த
இரண்டு சகோதரர்களும்
திருலோத்தமை என்ற
பெண்ணிற்காக தங்களுக்குள்
மூர்க்கத்தனமாக போரிட்டுக்
கொண்டு இரண்டு
சகோதர்களும்
ஒருவருக்கொருவர் வெட்டிக்
கொண்டு மாய்ந்தனர்.”

“இந்தக் கதையை எதற்காகச்
சொல்லுகிறேன் என்றால்
ஒற்றுமைக்கு இலக்கணமாகத்
திகழ்ந்த இரண்டு
சகோதரர்களே ! திலோத்தமை
என்ற பெண்ணிற்காக
போரிட்டுக் கொண்டு
மாண்டார்கள் என்றால்
உங்களுடைய நிலையை
நினைத்துக் கொள்ளுங்கள்.”

“இந்தக் கதையை சற்று
ஆழமாக சிந்தித்துப்
பார்த்தீர்களேயானால்
நீங்கள் என்ன செய்ய
வேண்டும் என்பது
உங்களுக்கே தெரியும் !
நீங்கள் ஐவரும்
திரௌபதியும் ஒரு
விதியை உருவாக்கி
வைத்துக் கொண்டு
வாழ்ந்தீர்களானால் பிரிவு
என்பது உங்களுக்குள்
ஏற்படுவதற்கு எந்தவிதமான
சாத்தியக்கூறுகளும் இல்லை.”

“நீங்கள் ஒன்றுபட்டு
ஒற்றுமையாக வாழ
வேண்டுமானால்
உங்களுக்குள் ஒரு
விதியை உருவாக்கி
வைத்துக் கொள்ளுங்கள்
என்றார் நாரதர்”

“பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும்
சிந்திக்கத் தொடங்கினர்,”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
-----------18-10-2019
//////////////////////////////////////////