ஜபம்-பதிவு-1052
அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-30
தென்னாட்டை வடநாட்டுடன்,
நயவஞ்சக வார்த்தைகள் கூறி இணைக்க முயன்றார்கள் அவர்களால் இணைக்க முடியவில்லை,
சமாதானம் பேசி இணைக்க முயன்றார்கள் அவர்களால் இணைக்க முடியவில்லை,
சூழ்ச்சிகள் செய்து இணைக்க முயன்றார்கள் அவர்களால் இணைக்க முடியவில்லை,
துரோகங்கள் செய்து இணைக்க முயன்றார்கள் அவர்களால் இணைக்க முடியவில்லை.
வடநாட்டையும், தென்னாட்டையும் பல ஆண்டுகளாக, பலரும் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவர்களால் இணைக்க முடியவேயில்லை. அவர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தது.
ஆனால் யாராலும் செய்ய முடியாததை என் மகள் சித்திராங்கதை செய்து இருக்கிறாள். ஆமாம், வடநாட்டையும், தென்னாட்டையும் இணைத்து இருக்கிறாள். காதல் மூலம் வட நாட்டையும், தென்னாட்டையும் இணைத்து இருக்கிறாள்.
எந்த ஒன்றையும் காதலால் இணைக்க முடியும் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபித்து இருக்கிறாள். எந்த ஒன்றாலும் செய்ய முடியாததை காதலால் செய்ய முடியும் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபித்து இருக்கிறாள். இந்த உலகம் புரிந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் நிரூபித்து இருக்கிறாள். இணைக்க முடியாத எந்த ஒன்றையும் காதலால் இணைக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறாள். காதல் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பதை நிரூபித்து இருக்கிறாள்.
இளவரசி என்ற முறையில் வடநாட்டையும் தென்னாட்டையும் இணைப்பதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறாள். இந்த உலகமும் ஒன்றை புரிந்து கொண்டிருக்கிறது. இணைக்க முடியாத ஒன்றைக் கூட காதல் இணைக்கும் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தி இருக்கிறாள். ஆகவே, தந்தை என்ற முறையில் என் மகளின் காதலை நான் ஏற்றுக் கொள்கிறேன். அரசன் என்ற முறையில் இளவரசியின் காதலை நான் அங்கீகாரம் செய்கிறேன்.
ஆமாம், தென்னாட்டைச் சேர்ந்த பாண்டிய நாட்டின் இளவரசி, வடநாட்டைச் சேர்ந்த பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனைத் திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கிறேன். இவர்கள் இருவரின் கல்யாணம் மூலம் வடநாடும், தென்னாடும் இணைகிறது. காதலின் மூலம் வடநாட்டையும், தென்னாட்டையும் இணைக்க முடியும் என்பதற்கு இவர்களின் திருமணமே சாட்சி.
அமைச்சரே! பாண்டிய நாட்டின் இளவரசி சித்திராங்கதையின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள். இதுவரை யாரும் செய்திராத திருமணமாக சித்திராங்கதையின் திருமணம் இருக்க வேண்டும். சேரர்களும், சோழர்களும் இதுவரை செய்யாத திருமணமாக சித்திராங்கதையின் திருமணம் இருக்க வேண்டும். இந்த உலகமே இது வரை பார்த்திராத திருமணமாக சித்திராங்கதையின் திருமணம் இருக்க வேண்டும். இனி யாரும் இப்படி ஒரு திருமணத்தை செய்ய முடியாது என்று அனைவரும் நினைக்கும் வகையில் சித்திராங்கதையின் திருமணம் இருக்க வேண்டும்.
பாண்டிய நாடே திருமணக்கோலம் பூணட்டும். மங்கல வாத்தியங்கள் முழங்கட்டும்.
(என்று அவர் பேசி முடித்ததும் அவருடைய கருத்தை அந்த அவை ஏற்றுக் கொண்டது. அவை கலைந்தது)
தென்னாட்டைச் சேர்ந்த பாண்டிய நாட்டு இளவரசி சித்திராங்கதைக்கும், வட நாட்டைச் சேர்ந்த பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனுக்கும் திருமணம் நடந்தது. பப்ருவாகனன் பிறந்தான். பாண்டிய நாட்டை ஆள்வதற்கு வருங்கால மன்னன் பிறந்தான்.
பப்ருவாகனன் பிறந்தான்.
பப்ருவாகனன் பிறந்தான்.
-----ஜபம் இன்னும் வரும்
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////