ஜபம்-பதிவு-1047
அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-25
அமைச்சர் : பாண்டிய நாட்டையும் பாண்டிய நாட்டு ஒற்றர்களையும் குறைவாக எடை போட்டு விட்டிருக்கிறாய். கேள் அந்நியனே கேள்! நீ மட்டுமல்ல இங்குள்ள அனைவருமே கேளுங்கள்.
பஞ்ச பாண்டவர்கள் என்று சொல்லப்படக்கூடிய தர்மர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்ற ஐவரில் இவனும் ஒருவன்.
திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகிய மூன்று சகேதாதரர்களில் முதல் மகனான திருதராஷ்டிரன் கண் தெரியாத குருடன். அதனால், பாண்டு அஸ்தினாபுரத்தின் அரசனான முடி சூட்டப்பட்டு அரசனானான்.
திருதராஷ்டிரனுக்கு 100 ஆண் பிள்ளைகள், துச்சலை என்ற ஒரு பெண் பிள்ளை ஆக மொத்தம் திருதராஷ்டிரன் மற்றும் காந்தாரிக்கு 101 பிள்ளைகள்
பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்று இரண்டு மனைவிகள்.
பாண்டுக்கு தாம்பத்யத்தில் ஈடுபட முடியாது என்ற காரணத்தினால்
குந்தி எமதர்மனுடன் சேர்ந்து தர்மனைப் பெற்றாள்,
குந்தி வாயு பகவானுடன் சேர்ந்து பீமனைப் பெற்றாள்,
குந்தி இந்திரனுடன் சேர்ந்து அர்ஜுனனைப் பெற்றாள்.
அந்த அர்ஜுனன் தான் இங்கே உங்கள் முன்னால் விசாரணைக் கைதியாக நின்று கொண்டிருக்கிறான்.
கதை இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம். கதை இத்துடன் முடியவில்லை. தொடர்கிறது. பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்ரி அஸ்வின் இரட்டையர்களுடன் சேர்ந்து நகுலன் சகாதேவனைப் பெற்றாள்.
இவர்கள் ஐவருமே பாண்டுவுக்குப் பிறக்கவில்லை. பாண்டுவுக்குப் பிறக்கவில்லை என்றாலும், குந்தியும், மாத்ரியும் பாண்டுவின் மனைவிகள் என்ற காரணத்தினால் பாண்டுவுக்குப் பிறக்காதவர்கள் பாண்டவர்கள் ஆனார்கள்.
கௌரவமாகப் பிறந்து கௌரவமாக வாழ்கின்ற காரணத்தினால் திருதராஷ்டிரனுக்குப் பிறந்தவர்கள் கௌரவர்கள் ஆனார்கள்.
பாண்டுவுக்குப் பிறக்காதவர்கள். குந்திக்கும், மாத்ரிக்கும் பிறந்தவர்கள் பாண்டவர்கள் ஆனார்கள்.
கௌரவர்களில் துரியோதனன், துச்சாதனன் முதல் மற்றும் இரண்டாவது மகன்கள்.
சொத்தை ஒரு சிலர் மட்டுமே அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. தான் வாழ வேண்டும். தன்னுடைய குடும்பம் வாழ வேண்டும். தன்னுடைய சந்த்திகள் வாழ வேண்டும் என்ற சுயநலத்துடன் வாழ்ந்து வருவார்கள். அவர்களுக்கு சொத்தின் மேல் மிகுந்த ஆசை இருக்கும். ஆசை என்று சொல்ல முடியாது. பேராசை என்று தான் சொல்ல முடியும்.
எங்களுக்கு சேர வேண்டிய சொத்தைக் கொடு, எங்களுக்கு உரிமை உடைய பங்கைக் கொடு என்று கேட்டால் கொடுக்க மாட்டார்கள். சொத்தை அனுபவித்தவர்கள். சொத்தை வைத்து சுகம் கண்டவர்கள் சொத்தை எப்படிக் கொடுப்பார்கள். சுயநலம் கொண்டவர்கள் தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் எப்படி பொது நலம் கொண்டு பிறர் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள்.
இதனால் சொத்தை அனுபவித்துக் கொண்டு வருபவர்களுக்கும் சொத்தை கேட்பவர்களுக்கும் எப்போதும் சண்டை இருந்து கொண்டே இருக்கும். இப்படி ஒரு சண்டை தான் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் சண்டை. சொத்துக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சண்டை. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடக்கும் சண்டை சொத்துக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சண்டை தானே தவிர வேறு ஒரு சண்டையும் இல்லை.
அர்ஜுனன் : பாண்டவர்கள் சொத்துக்காக அடித்துக் கொள்வதில்லை.
அமைச்சர் : வேண்டாம் என்றால் எங்களுக்கு நாடு வேண்டாம் சொத்து வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே
நாட்டின் மீதும், சொத்தின் மீதும் ஆசை இருக்கின்ற காரணத்தினால் தான் நீங்களும் கௌவர்களுடன் சண்டைக் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையினால் அஸ்தினாபுரத்தை இரண்டாகப் பிரித்து விட்டார்கள்
அதில் ஒரு பாதி இந்திரப்பிரஸ்தம் என்று அழைக்கப்படும. அதை தான் இவனுடைய அண்ணன் தர்மன் ஆட்சி செய்து கொண்டிருக்கிறான்
தர்மனுடைய தம்பி இவன் அரஜுனன்
இவனை எல்லோரும் வில்லுக்கு விஜயன்
வில்வித்தையில் சிறந்தவன் என்கின்றனவர்
உலகத்திலேயே வில் வித்தையில் சிறந்தவன் என்கின்றனர்
அது தவறான விஷயம்
வடநாட்டில் வீரம் இல்லாதவர்களுடன் எல்லாம் சண்டையிட்டு வெற்றி பெற்றவனை உலகத்திலேயே சிறந்த வில்லாளி என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்
அர்ஜுனன்
வீரம் மிகுந்தவர்களோடு சண்டையிட்டு இருக்க வேண்டும்.
வீரம் மிகுந்தவர்களோடு சண்டையிட்டு வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
வீரம் இல்லாவர்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்று விட்டு உலகத்திலேயே சிறந்த வில்லாளி என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். ஏற்றுக் கொள்ள முடியாது.
அர்ஜுனன் பாண்டியர்களோடு சண்டையிட்டு இருக்க வேண்டும்
அப்போது தெரிந்திருக்கும் வீரத்தில் சிறந்தவர்கள் யார் என்று
அர்ஜுனன் பாண்டியர்களோடு சண்டையிட்டு இருந்தால்
பாண்டியர்கள் தான் வில் வித்தையில் சிறந்தவர்கள் என்று அர்ஜுனன் மட்டுமல்ல இந்த உலகமும் தெரிந்து கொண்டிருக்கும்
பாண்டியர்களோடு சண்டை போடாமல் உலகத்திலே
சிறந்த வில்லாளி அர்ஜுனன் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது
பாண்டிய நாடும் பாண்டிய நாட்டு மக்களும்
அர்ஜுனன் சிறந்த வில்லாளி என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை
-----ஜபம் இன்னும் வரும்.
-----06-04-2025
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment