ஜபம்-பதிவு-1049
அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-27
அமைச்சர்: இங்கே நடந்து கொண்டிருந்த அனைத்து விஷயங்களையும் நீங்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தீர்கள். அதனால், உங்களுக்கு தனியாக எந்த ஒன்றையும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் எடுக்கும் முடிவு பாண்டிய நாட்டை அவமானப்படுத்தும் வகையில் இருந்து விடக்கூடாது என்பதை நினைவில் கொண்டு முடிவு எடுங்கள்.
நீங்கள் எடுக்கும் முடிவு பாண்டிய நாட்டின் பெருமையை சிதைக்கும் வகையில் இருந்து விடக்கூடாது என்பதை நினைவில் கொண்டு முடிவு எடுங்கள்.
நீங்கள் எடுக்கும் முடிவு பாண்டிய நாட்டின் பெருமையை உயர்த்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு முடிவு எடுங்கள்.
நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும், உங்களை மட்டுமல்ல அது இந்த பாண்டிய நாட்டையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொண்டு முடிவு எடுங்கள்
நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அந்த முடிவு பாண்டிய நாட்டின் அரியணையோடு தொடர்பு கொண்டது என்பதை நினைவில் கொண்டு முடிவு எடுங்கள்.
உங்கள் முடிவுக்காக இந்த பாண்டிய நாடே காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு முடிவு எடுங்கள்.
சித்திராங்கதை : நான் என்னுடைய முடிவைச் சொல்வதற்கு முன் வளம் மிகுந்த பாண்டிய நாடும், வீரம் செறிந்த பாண்டிய நாட்டு மக்களும் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் நான் ஒரு பெண். பிறகு தான் நான் இந்த நாட்டின் இளவரசி என்பதை அமைச்சருக்கும், பாண்டிய நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
இந்த உலகத்தில் பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தான் பிறக்கிறது. எந்த குடும்பத்தில் பிறக்கிறதோ அந்த குடும்பத்தைப் பொறுத்துத் தான் பிறந்த குழந்தையின் மதமும், சாதியும் தீர்மானம் செய்யப்படுகிறது.
பிறக்கும் போதே எந்த குழந்தையும் சாதி, மத அடையாளங்களுடன் பிறப்பதில்லை.
நான் பிறக்கும் போதே இந்த மதத்தில் பிறந்தவர், இந்த சாதியில் பிறந்தவர் என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு அறிவில்லை என்று பொருள்.
பிறக்கும் போதே யாரும் மதத்துடனோ, சாதியுடனோ பிறக்க முடியாது. ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தான் பிறக்க முடியும்.
நான் இந்த உலகத்தில் பெண்ணாகத் தான் பிறந்தேன். அரச குடும்பத்தில் பிறந்த காரணத்தினால் தான் நான் இளவரசி ஆனேன்.
பெண்ணாகப் பிறந்தாலும் நான் என் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமையிலிருந்து ஒரு போதும் தவறியதே இல்லை. அதே போல் இளவரசியாக இருந்தாலும் பாண்டிய நாட்டிற்காக நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யத் தவறியதே இல்லை.
நான் பெண்ணாக இருந்து முடிவு எடுக்கப் போகிறேனா அல்லது இளவரசியாக இருந்து முடிவு எடுக்கப் போகிறேனா என்பது தான் முக்கியம்.
நான் பெண்ணாக இருந்து முடிவு எடுத்தாலும், இளவரசியாக இருந்து முடிவு எடுத்தாலும், நான் எடுக்கும் முடிவு யாரையும் பாதிக்காத வகையில் தான் இருக்கும். அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தான் இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இருக்காது.
நான் காட்டைக் கடந்து செல்லும் போது இவரைக் கண்டேன். இவர் புலியிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று புலியைக் கொன்று இவரைக் காப்பாற்றினேன். புலியிடமிருந்து காப்பாற்றிய இவர் என்னைப் பார்த்து காதல் வார்த்தைகள் பேசினார். தைரியமாக அவர் பேசிய வார்த்தைகளைக் கேட்டு நான் மெய் மறந்து நின்றேன்.
அவர் பேசிய காதல் வார்த்தைகளை என்னால் தடுக்க முடியவில்லை. அவர் மீது என் கோபத்தைக் காட்ட முடியவில்லை. நீங்கள் தவறாக பேசுகிறீர்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை. அவர் பேச வேண்டும் நான் கேட்க வேண்டும் என்ற எண்ணமே எனக்குள் மேலோங்கி நின்றது.
அவர் பேசிய பேச்சுக்கள் எனக்குள் ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. என் மனதிற்குள் ஒரு புயலைக் கிளப்பியது. சிந்தனையில் பூகம்பத்தை உண்டாக்கியது. இதுவரை ஏற்படாத ஒரு மாற்றம் எனக்குள் ஏற்பட்டது. உடலில் நடுக்கம் ஏற்பட்டது. உள்ளத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. என்னால் பேச முடியாத நிலை ஏற்பட்டது..
எனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப்போன்ற ஒரு நிலை எனக்கு இது வரை ஏற்பட்டதில்லை. அதனால் என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. என் கால்கள் தரையில் படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். உடல் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். ஏதோ ஒன்றில் மாட்டிக் கொண்டேன் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
இது எனக்கு ஒரு புதுவித உணர்வாக இருந்தது. அதை என்னால் தவிர்க்க முடியவில்லை. அதை தவிர்க்கவும் நான் விரும்பவில்லை. ஏனென்றால் எனக்கு அது மிகவும் பிடித்து இருந்தது. அந்த இன்பத்தில் நான் என்னை அறியாமல் மிதந்து கொண்டு இருந்தேன். அந்த இன்பம் எனக்கு வேண்டும் வேண்டும் என்று என்னுடைய மனது துடித்தது.
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////v
No comments:
Post a Comment