April 09, 2025

ஜபம்-பதிவு-1043 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-21

 ஜபம்-பதிவு-1043

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-21
அர்ஜுனன் : ரத்தம் தெறிக்கும் பேச்சு!
அமைச்சர் : விரைவில் உன் ரத்தமும் தெறிக்கப் போகிறது!
அர்ஜுனன் : நடக்கும் போது பார்க்கலாம்?
அமைச்சர் : உலகம் பார்க்கத் தானே போகிறது!
அர்ஜுனன் : பேச்சில் இருக்கும் வீரம், செயலில் இருக்குமா?
அமைச்சர் : நம்பிக்கையில்லையா?
அர்ஜுனன் : நம்பிக்கையில்லை.
அமைச்சர் : ஏன் நம்பிக்கையில்லை?
அர்ஜுனன் : நம்பிக்கையை இரண்டு பேர்களின் மேல் தான் வைக்க முடியும். ஒன்று தன் மேல் நம்பிக்கை வைக்க முடியும், இரண்டு தெரிந்தவர் மேல் நம்பிக்கை வைக்க முடியும்.
ஒருவர் தன் மேல் நம்பிக்கை வைக்கும் போது வாழ்க்கையில் உயர்கிறார்.
தெரிந்தவர் மேல் நம்பிக்கை வைக்கும் போது தான் நினைத்ததை முடிக்கிறார்.
அதுவே, ஒருவர் தன் மேல் வைத்த நம்பிக்கையை இழக்கும் போது தன்னுடைய வாழ்க்கையை இழக்கிறார்.
தெரிந்தவர் மேல் வைத்த நம்பிக்கையை இழக்கும் போது தன்னுடைய உறவை இழக்கிறார்.
நம்பிக்கை என்பது தன் மீதும், தெரிந்தவர் மீதும் வைப்பது.
தெரியாதவர் மீது நம்பிக்கை வைக்க முடியாது.
அதனால் நீங்கள் சொல்லும் சொல்லில் எனக்கு நம்பிக்கை இல்லை. உங்கள் பேச்சில் இருக்கும் வீரம், செயலில் இருக்குமா என்பது தெரியவில்லை.
அமைச்சர் : பாண்டியர்களைப் பொறுத்தவரை, பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வீரம் இருக்கும், ஏன் எழுத்தில் கூட வீரம் இருக்கும்
எங்கள் முன்னோர்களின் வரலாறுகளை நீ கேட்டுக் கொண்டு தானே இருந்தாய். ஏன் உனக்கு தெரியவில்லையா?
அர்ஜுனன் : எவ்வளவு காலம் தான் உங்கள் முன்னோர்களின் வரலாறுகளைச் சொல்லிக் கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்
நீங்கள் மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள அனைவரும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர். தங்களது முன்னோர்களுடைய வரலாற்றுப் பெருமைகளைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்கின்றனர்.
உங்கள் முன்னோர்கள் செய்த வரலாற்று சாதனைகளைச்
சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறீர்கள்.
உங்கள் முன்னோர்கள் படைத்த வரலாறுகளையே
சொல்லிக் கொண்டு திரிந்து கொண்டு இருக்கிறீர்களே!
ஏன் உங்களுக்கென்று தனிப்பட்ட ஒரு வரலாறு இல்லையா?
ஏன் உங்களால் தனிப்பட்ட நிலையில்
ஒரு வரலாற்றை உருவாக்க முடியாதா?
ஏன் இது வரை நீங்கள் ஒரு வரலாற்றைக் கூட உருவாக்கவில்லையா?
ஏன் உங்களால் ஒரு வரலாற்றைக் கூட உருவாக்க முடியாதா?
ஏன் வரலாற்றை உருவாக்கும் தகுதி உங்களுக்கு இல்லையா?
தன்னால் வரலாற்றை உருவாக்க முடியாதவன் தான் தன் முன்னோர்களின் வரலாற்றையே சொல்லிக் கொண்டு இருப்பான். அந்த விஷயத்திலேயே காலத்தை ஓட்டிக் கொண்டு இருப்பான். புதிய வரலாற்றை உருவாக்க முயற்சி செய்ய மாட்டான்.
இதே செயலைத் தான் இந்த உலகத்தில் உள்ள அனைவரும் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் இதே செயலைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
தங்கள் முன்னோர்கள் வரலாற்றைச் சொல்லும் போது வரலாறு படைத்த மன்னர்களை தங்கள் சாதி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்ளும் கூட்டம் அந்தக் காலத்திலும் இருந்தது. இப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. வருங்காலத்திலும் இருக்கத் தான் போகிறது.
வரலாறு படைத்த மன்னர்களைக் குறிப்பிட்டு அவர் எங்கள் சாதி என்று சொந்தம் கொண்டாடும் கூட்டமும் இருக்கிறது, வரலாறு படைத்த மன்னர்களை எங்கள் சாதி, என்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் கூட்டமும் இருக்கிறது. வரலாறு படைத்த மன்னர்களை எங்கள் சாதி என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் கூட்டமும் இருக்கிறது.
சாதி இருக்கும் வரை வரலாறு படைத்த மன்னர்களுக்கு சாதி அடையாளம் பூசும் கூட்டம் இந்த உலகத்தில் இருந்தது. இருந்து கொண்டே தான் இருக்கிறது. இனி இருக்கவும் போகிறது. இதை யாராலும் மாற்ற முடியாது.
மன்னருக்கு பொதுவாக சாதி என்பது கிடையாது. மன்னர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற காரணத்தினால் அவ்வாறு சொல்வது கிடையாது. மன்னர் நிறைய பெண்களை திருமணம் செய்து கொள்வார். மன்னர் ஒரு சாதியைச் சேர்ந்தவராக இருப்பார். அரசி வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவராக இருப்பார். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையை எந்த சாதி என்று சொல்ல முடியும். அந்த குழந்தை மன்னன் ஆனால் என்ன சாதி என்று சொல்ல முடியும். எந்த சாதி என்று சொல்லவே முடியாது.
அதனால் தான் அரச குடும்பத்தில் பிறந்து அரசாட்சி செய்யும் பெரும்பாலான அரசர்களுக்கு சாதி கிடையாது. இந்த மன்னர் இந்த சாதி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. இந்த மன்னர் இந்த சாதி தான் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. எனவே, தான் அரசர்களுக்கு சாதி என்பது கிடையாது என்று சொல்லக் காரணம்.
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////
Like
Comment
Share

No comments:

Post a Comment