April 09, 2025

ஜபம்-பதிவு-1046 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-24

 ஜபம்-பதிவு-1046

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-24
எங்கள் முன்னோர்கள் வரலாற்றை உருவாக்கினார்கள், நாங்கள் வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், எங்களுடைய சந்ததிகள் வரலாற்றை உருவாக்குவார்கள், பாண்டியர்களை யாரும் அழிக்க முடியாது. பாண்டியர்களை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் இருக்கிறார்கள்.
பாண்டியர்கள் வரலாறு பரம்பரை பரம்பரையாக கடந்து செல்லும். பரிணாமம் அடைந்து கொண்டே செல்லும், பாண்டியர்களின் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. ஏனென்றால், வரலாற்றுக்கு தொடக்கப் புள்ளி வைத்ததே பாண்டியர்கள் தான்.
சேர, சோழ, பாண்டியர் என்று தவறாக வரிசைப்படுத்தி வைத்து இருக்கின்றனர். சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களுடைய வரிசையில் முதலில் வைத்துப் போற்றப்பட வேண்டியதும் பாண்டியர்கள் தான், முதன்மையாக வைத்துப் போற்றப்பட வேண்டியதும் பாண்டியர்கள் தான், முதலில் வைக்கத் தகுதி படைத்தவர்களும் பாண்டியர்கள் தான்.
மூவேந்தர்களில் சிறந்தவர்கள் பாண்டியர்கள். பாண்டியர்களின் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள், பாண்டியர்களின் வரலாற்றைப் பிடிக்காதவர்கள், பாண்டியர்களின் பெருமையைப் பிடிக்காதவர்கள், பாண்டியர்களின் உயர்வைப் பிடிக்காதவர்கள், பாண்டியர்களின் வீரத்தைப் பிடிக்காதவர்கள் செய்த சதி வேலை தான் மூவேந்தர்களில் பாண்டியர்களை மூன்றாவதாக வைத்தது.
மூவேந்தர்களில் பாண்டியர்களை முதலில் வைக்காமல் மூன்றாவதாக வைத்ததில் இருந்து பாண்டியர்களுடைய விரோதிகள் பாண்டியர்கள் மேல் எவ்வளவு விரோதம் கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இருந்தாலும், விரோதிகளின் எதிர்ப்புகளையும் மீறி,
நயவஞ்சகர்களின் நயவஞ்சகத்தையும் மீறி,
துரோகிகளின் துரோகத்தையும் மீறி,
பாண்டியர்களாகிய நாங்கள் யாராலும் அசைக்க முடியாத மிகப்பெரிய வரலாற்றை உருவாக்கி வைத்து இருக்கிறோம்,
யாராலும், உருவாக்க முடியாத வரலாற்றை உருவாக்கி வைத்திருக்கிறோம்,
யாராலும், சிந்தித்துக் கூட பார்க்க முடியாத வரலாற்றை
உருவாக்கி வைத்து இருக்கிறோம்,
யாராலும் செயல்படுத்த முடியாத வரலாற்றை உருவாக்கி வைத்திருக்கிறோம்,
யாராலும், நெருங்கக்கூட முடியாத வரலாற்றை
உருவாக்கி வைத்திருக்கிறோம்.
அப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட எங்கள் மீது நீ கோபப்படும் போதே உனக்கு வரலாறு இல்லை என்பது தெரிகிறது. உனது முன்னோர்கள் வரலாற்றை உருவாக்கவில்லை என்பது தெரிகிறது. அதனால் தான் நீ இப்படி பேசுகிறாய் என்று தெரிகிறது.
பாண்டியர்கள் வரலாறு என்பது காலத்தால் காட்ட முடியாதது, வார்த்தைகளால் எழுத முடியாதது, சொற்களால் சொல்ல முடியாதது, இருந்தாலும் நாங்கள் எழுத்தில் எழுதி வைத்து இருக்கிறோம். வார்த்தையால் நீ கேட்கும்படி இப்போது சொல்லி இருக்கிறோம்.
பாண்டியர்கள் வரலாறு என்பது இந்த உலகம் தோன்றும் போது தோன்றியது. இந்த உலகம் அழிந்தாலும் பாண்டியர்களின் வரலாறு அழியாது. இப்போது தெரிந்து கொள். பாண்டியர்கள் எவ்வளவு சிறப்பைப் பெற்றவர்கள் என்பதைத் தெரிந்து கொள்.
இதுவரை எங்கள் முன்னோர்களின் வரலாற்றைத் தெரிந்து கொண்டாய். இனி நாங்கள் உருவாக்கப் போகும் வரலாற்றை நீ தெரிந்து கொள்ளப்போகிறாய். இப்போது உன்னை வைத்து நாங்கள் உருவாக்கப்போகும் வரலாற்றை இனி இந்த உலகமே காணப்போவதை தெரிந்து கொள்ளப் போகிறாய்.
இங்கே குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளியாக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறானே இவன் பாண்டிய நாட்டிற்குள் வந்திருக்கிறான். யார் நீ? எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டதற்கு பாண்டிய நாட்டு ஒற்றர்கள் உலகத்திலேயே திறமைசாலிகள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஏன் அவர்களால் கூட நான் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லையா? என்று கேட்டிருக்கிறான்.
இவனைப் பற்றிய அனைத்து விவரங்களும் திரட்டப்பட்டு விட்டன. இவன் சொன்னான் என்பதற்காக இவனைப்பற்றிய விவரங்கள் திரட்டப்படவில்லை. பாண்டியர்கள் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர்கள் என்பதையும், பாண்டிய நாட்டின் ஒற்றர்கள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதையும், இவன் மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவனைப் பற்றிய விவரங்கள் திரட்டப்பட்டன.
அர்ஜுனன் : முதலில் என்னைப் பற்றி நீங்கள் திரட்டிய தகவல்களைச் சொல்லுங்கள். பிறகு முடிவு செய்து கொள்ளலாம் நீங்கள் திரட்டிய தகவல்கள் என்னைப் பற்றிய தகவல்கள் தானா என்பதை. என்னைப் பற்றி ஏதோ ஒன்றிரண்டு தகவல்களை திரட்டி இருப்பீர்கள். ஆனால், என்னைப் பற்றி அனைத்து தகவல்களையும் திரட்டி விட்டதாக சொல்கிறீர்கள்
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////
Like
Comment
Share
v

No comments:

Post a Comment