April 09, 2025

ஜபம்-பதிவு-1050 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-28

 ஜபம்-பதிவு-1050

அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-28
தேன் உண்ட வண்டு அடைந்த மகிழ்ச்சியில் நான் இருந்தேன். அதனால் எதனையும் நான் விலக்க விரும்பவில்லை. அதை விட்டு விலகி வர நான் விரும்பவில்லை. அதை விட்டு விலகி வர என்னால் முடியவில்லை. அதனால் அந்த இன்பத்திலேயே நான் மூழ்கிக் கொண்டு இருந்தேன். என்னை மறந்த நிலையில் இருந்தேன். மதி மயங்கிய நிலையில் இருந்தேன். சிந்தனையைத் தொலைத்த நிலையில் இருந்தேன். அறிவு பிறழ்ந்த நிலையில் இருந்தேன்.
காதலுக்குள் சிக்கிக் கொண்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன். இது தான் காதலின் தொடக்கம் என்பதை உணர்ந்து கொண்டேன். காதல் ஏற்பட்டால் இத்தகைய நிலை தான் ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்டேன். காதல் செய்பவர்களுக்கு இத்தகைய ஒரு நிலை தான் ஏற்படும் என்பதைத் தெரிந்து கொண்டேன். இத்தகைய காரணத்தால் காதலிப்பவர்கள் பிரிந்தால் காதல் வேதனையில் அவதிப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். காதலின் மகத்துவம் தெரிந்து கொண்டேன். காதலின் அருமை தெரிந்து கொண்டேன். காதலின் புனிதம் தெரிந்து கொண்டேன்.
மொத்தத்தில் காதல் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டேன். இருந்தும் எனக்குள் உண்டான காதலை அவரிடம் சொல்லவில்லை. மறைத்து விட்டேன்.
நான் புலியைக் கொல்லும் செயலைப் பார்த்தும், பேசிய பேச்சைக் கேட்டும், நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தும் நான் சாதாரணமான ஒரு பெண்ணாக இருக்க முடியாது என்பதையும், நான் இந்த பாண்டிய நாட்டின் இளவரசியாகத் தான் இருக்க வேண்டும் என்பதையும், நான் இளவரசி சித்திராங்கதை என்பதையும் கண்டுபிடித்து சொன்னார்.
நானும், அவர் பேசிய பேச்சிலிருந்து அவரும் ஒரு சாதரணமான மனிதராக இருக்க முடியாது என்பதையும், அரச குலத்தில் பிறந்தவராகத் தான் இருக்க முடியும் என்பதையும், இளவரசராகத் தான் இருக்க முடியும் என்பதையும், தெரிந்து கொண்டு சொன்னேன்.
நான் உங்களைக் காதலிக்கிறேன் நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா என்று அவர் என்னைக் கேட்டதற்கு, நான் அவரைக் காதலிப்பதை சொல்லவில்லை.
ஆனால், ஒன்று சொன்னேன். நான் என் மனதில் உள்ளதை சொல்லும் போது அது உங்கள் வாழ்க்கையை மாற்றுவதாகத் தான் இருக்கும் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டேன்.
இப்போதும் சொல்கிறேன் நான் சொல்லப்போவது அவருடைய வாழ்க்கையை மாற்றப் போவதாகத் தான் இருக்கும்
அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்பதற்காகவோ, அவருடைய தலை உடலிலிருந்து எடுக்கப்படும் என்பதற்காகவோ, அவருடைய உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவோ நான் சொல்லவில்லை.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகச் சொல்கிறேன். என் மனதில் உள்ளதை சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகச் சொல்கிறேன். இப்போது சொல்லாவிட்டால் எப்போதுமே சொல்ல முடியாது என்ற காரணத்திற்காகச் சொல்கிறேன். என் மனதில் உள்ளதை சொல்கிறேன். இது இருவருடைய வாழ்க்கையையும் மாற்றும் என்ற காரணத்தால் சொல்கிறேன்.
நான் இவரைக் காதலிக்கிறேன். அர்ஜுனனைக் காதலிக்கிறேன். வில்லுக்கு விஜயன், உலகத்திலேயே சிறந்த வில்லாளி என்று போற்றப்படக்கூடிய இங்கே நிற்கும் அர்ஜுனனைக் காதலிக்கிறேன்.
நான் இளவரசி என்பது தெரிவதற்கு முன்பாகவே அவர் என்னை காதலித்தார். அவர் இளவரசர் என்று தெரிவதற்கு முன்பாகவே நான் அவரை காதலித்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரிவதற்கு முன்பாகவே நாங்கள் காதலித்தோம்.
அவர் என்னை காதலித்ததை அன்றே சொல்லி விட்டார். ஆனால் நான் அவரைக் காதலிப்பதை அன்று சொல்லவில்லை. இன்று தான் சொல்கிறேன்.
கண்டதும் காதலா என்று கேட்காதீர்கள்
காதல் எப்போது, எந்த இடத்தில், எந்த நேரத்தில்,
எந்த சூழ்நிலையில் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது
நீண்ட நாள் பழகினால் தான் காதல் வரும் என்று சொல்ல முடியாது
அழகைப் பொறுத்துத் தான் காதல் வரும் என்று சொல்ல முடியாது.
பணம், பதவி, அதிகாரம் பார்த்துத் தான்
காதல் வரும் என்று சொல்ல முடியாது.
காதல் இப்படித் தான் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது
காதல் எப்படி வேண்டுமானாலும் வரும்
காதல் வருவதற்கு ஒரு வினாடி போதும்
அழகைப் பொறுத்துத்தான் காதல் வரும் என்று சொல்வதே தவறானது. அழகைப் பொறுத்து வருவதல்ல காதல். காதல் உண்டாவதற்கு இது தான் வேண்டும் என்று யாராலும் சொல்ல முடியாது. எந்த ஒன்றாலும் காதல் என்பது வரும்.
காட்டை எரிக்க எப்படி ஒரு துளி நெருப்பு போதுமோ அதைப் போல காதல் உண்டாவதற்கு ஒரு வார்த்தையோ, ஒரு செயலோ, ஒரு எழுத்தோ ஏன் எந்த ஒரு பொருளோ போதும்.
பன்னீரில் குளித்து, சந்தனத்தில் நீந்தி, கனவுலகம் சென்றால் தான் வருவேன் என்று சொல்வதல்ல காதல். காதல் பணம் படைத்த செல்வந்தருக்கும் வரும் காசில்லாத ஏழைக்கும் வரும்.
காதல் தனிப்பட்ட முறையில் பெருமையடைவதில்லை
காதலர்களைப் பொறுத்துத் தான் காதல் பெருமையடைகிறது
காதலை பெருமையடையச் செய்யும் காதலர்கள் நாங்கள்
காதலை நாங்கள் தான் பெருமையடைய வைக்கப் போகிறோம்
காதல் எங்களால் தான் பெருமையடையப் போகிறது.
இனி எங்கள் பெயர் தான் காதலுக்கு உதாரணமாகத் திகழப் போகிறது.
நான் பெண்ணாக இருந்து காதலித்து இருந்திருக்கிறேன். அதுவும் ஒரு வீரனைத் தான் காதலித்து இருந்திருக்கிறேன். அதனால் ஒரு பெண்ணாக இருந்து குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமையைத் தான் செய்து இருக்கிறேன்
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025.
----ஞாயிற்றுக் கிழமை
/////////////////////////////////////////////////
Like
Comment
Share
v

No comments:

Post a Comment