Showing posts with label RETIREMENT GREETING. Show all posts
Showing posts with label RETIREMENT GREETING. Show all posts

February 27, 2019

பணி ஓய்வு வாழ்த்து மடல்


   பணி ஓய்வு வாழ்த்து மடல்- 28-02-2019
   

////////////////////////////////////////
28-02-2019 அன்று
பணிஓய்வு பெறும்
முதுநிலை துணை மேலாளர் 
(நிறுவன செயலர்)
திரு.M.சந்திரசேகர்  அவர்களை
பணியாளர் பிரிவு சார்பாக
வாழ்த்தும் வாழ்த்து மடல் !!
//////////////////////////////////////////////

மாநகர் போக்குவரத்துக்
கழகத்தில் பணிபுரிந்து
அனைவருடைய இதயங்களிலும்
அன்பு என்னும் சிம்மாசனமிட்டு 
பாசத்தால் அரசாட்சி
செய்து கொண்டிருக்கும்
முதுநிலை துணை மேலாளர்
(நிறுவன செயலர்)
திரு.M.சந்திரசேகர் அவர்கள் 
வயது முதிர்வின் காரணமாக
28-02-2019-ஆம் தேதி அன்று
பணி ஓய்வு பெறுகிறார்
பணிஓய்வு பெறும் அவரை
பணியாளர் பிரிவின்
பணியாளர்கள் அனைவரும்
கனத்த இதயத்துடன் பிரியா
விடை அளிக்கின்றோம் !

அறிவென்றால் என்ன என்றும்
அறிவை அறிவால்
உணர்ந்தவர் எவர் என்றும்
அறிவை செயல்படுத்தக்
கூடியவர் யார் என்றும்
அறியத் துடித்து தேடிக்
கொண்டிருந்த வேளையில்
அறிவாய் நான் இருக்கிறேன்
என்று பணியில் சேர்ந்து
அறிவு எத்தகைய
ஆளுமையைக் கொண்டது
என்பதை இந்த உலகத்திற்கு
தன்னுடைய கடின
உழைப்பின் மூலம் நிரூபித்தவர்
நிறுவன செயலர் அவர்கள் !

இல்லாததை இருப்பது போலவும்,
இருப்பதை இல்லாதது போலவும்
வெளி உலகுக்கு காட்டி
நடித்துக் கொண்டிருக்கும்
இந்த சமுதாயத்தில்
இருப்பது இருப்பது போலத்
தான் இருக்க வேண்டும்
இல்லாதது இல்லாதது போலத்
தான் இருக்க வேண்டும்
என்று எதற்கும் சமரசம்
செய்யாமல் உண்மையின்
வழி நின்று இந்த
மாநகர் போக்குவரத்துக்
கழகத்தை தாங்கி வழிநடத்திக்
கொண்டிருப்பவர் தான்
நிறுவன செயலர் அவர்கள் !

தகவல் அறியும்
உரிமைச் சட்டம்
சட்டமாக்கப்பட்டபோது கூட
உயர்வு பெறவில்லை
அவருடைய ஆளுமையின் கீழ்
தகவல் அறியும்
உரிமைச் சட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்ட
போது தான்
தகவல் அறியும்
உரிமைச் சட்டமே
உயிர் பெற்று உலா வந்தது !

முதலமைச்சரின்
தனிப்பிரிவு கடிதங்கள் கூட
அவருடைய கூர்மையான
பார்வைப்பட்ட பின்னரே
அதில் உள்ள கண்ணியம்
காப்பாற்றப்பட்டது !

அரசாங்கத்தின் ஆணைகள்
கூட அவருடைய
கையெழுத்து இல்லாமல்
நடைமுறைக்கு வந்ததாக
சரித்திரம் இல்லை. !

நிதி மற்றும் நிர்வாகக்
குழுமத்தில் நிறைவேற்றப்பட்ட
பல்வேறு தீர்மானங்கள்
மாநகர் போக்குவரத்துக்
கழகம் மற்றும்
பணியாளர்கள் வாழ்வினை
மேம்படுத்திடவும்
அனைவரும் பாராட்டும்
வண்ணமும்
வியந்து பார்க்கும் வண்ணமும்
இருக்கிறது என்றால்
அது அவருடைய உழைப்புக்கு
கிடைத்த வெற்றி மட்டுமல்ல
அவருடைய அறிவுக்கும்
கிடைத்த வெற்றி என்பதை
அனைவரும் உணர்ந்தே
ஆக வேண்டும்

றிவை அறிவால்
   அறியும் உபாயம் அறிந்து

ளுமையை அதில் புகுத்தி
   உழைப்பை சிறக்க வைத்து

யலாமையை போக்கி
   இன்பமுடன் பணி செய்ய வைத்து

வது அறிவாக இருந்தாலும்
  அதை உழைப்பிற்காக 
  மட்டுமே செலவழித்து

ள்ளன்பு கொண்டு
  அனைவரையும் உவகையுடன்
  பணி செய்ய வைத்து

ரெல்லாம் புகழும்படி
  உழைப்பிற்கொரு
  கதிரவனாய் தகித்து

ளிமையானவர் எப்படி
    இருக்க வேண்டும்
    என்பதற்கு உதாரணமாகத்
    திகழ்ந்து

ற்றத்தின் உயர்வுகளில்
    தான் மட்டும் ஏறி
    உயர்வின் அரியணையில் தான்
    மட்டும் முடிசூட்டிக் கொள்ளாமல்
    பிறரையும் கூட்டிக் கொண்டு
    சென்று முடி சூட வைத்து

யம் என்ற ஒன்றுடன்
    பணி செய்தால் பணி
    சிறக்காது என்பதற்காக
    பிறருடைய ஐயத்தை
    தெளிய வைத்து
    அனைவருடைய பணியையும்
    சிறப்புற செய்து

ற்றுமையின் பெருமையை
     பணியாளர்களுக்கு உணர்த்தி
     அதன் வெற்றியை
     அனைவரையும்
     சுவைக்க வைத்து

ர் குடும்பமாக சண்டை
     நீக்கி வாழ்ந்தால் மட்டுமே
     அலுவலகம் உயர்வடையும்
     என்பதை பணியாளர்களுக்கு
      உணர வைத்து

வையாரின்
      பொன்மொழிகளை
      இந்த அவனியில்
      செயல்படுத்தும் அவரை
                         
றிணை உயிரையும்
      தன்னுடைய அபரிதமான
      அறிவால் உயர்திணையாக
      மாற்றும் அவரை 

உழைப்பின் சிகரமாக
      இருக்கும் அவரை
      பணியாளர் பிரிவின்
      பணியாளர்கள் வாழ்த்துவதில்
      பெருமையடைகிறோம்.

என்றும் அன்புடன்
பணியாளர் பிரிவின்
நல் உள்ளங்கள்
//////////////////////////////////