Showing posts with label உரோமரிஷி - பஞ்ச பட்சி சாஸ்திரம். Show all posts
Showing posts with label உரோமரிஷி - பஞ்ச பட்சி சாஸ்திரம். Show all posts

January 11, 2012

உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்-விளக்கங்கள்-பதிவு-7-சுபம்




          
       உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்-விளக்கங்கள்-பதிவு-7-சுபம்

                            “”பதிவு ஏழை விரித்துச் சொல்ல
                                                                 ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் , அவை எதை விளக்குகிறது என்பதைப் பற்றியும் விளக்கமாகப் பார்ப்போம் .

பஞ்ச பட்சி சாஸ்திரம் - விளக்கங்கள் :
பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள் .
பட்சி என்றால் பறவை என்று பொருள் .
சாஸ்திரம் என்றால் எழுதப் பட்டவைகளை செயல்படுத்திப் பார்த்தால் உண்மை விளங்கும் என்று பொருள் .

பஞ்ச பட்சி எவ்வாறு உருவம் பெற்றது :
பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படக்  கூடியவை நிலம் , நீர்,  நெருப்பு , காற்று, விண் ஆகிய ஐந்தும் ஆகும் .
பஞ்சபூதங்களே இந்த உலகத் தோற்றத்திற்கு காரணமாக இருக்கின்றன .
பஞ்சபூதங்களே இந்த உலகை எல்லாம் ஆண்டு கொண்டு இருக்கின்றன .
பஞ்சபூதங்களே இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தையும் இயக்கிக் கொண்டு இருக்கின்றன .
என்பதை சித்தர்கள் தங்கள் தவ ஆற்றலினால் உணர்ந்தனர்.
அப்படிப் பட்ட பஞ்ச பூதங்களை , அதனுடைய இயக்கங்களை , தங்களுடைய தவ வலிமையாலும் , இறையருளாலும்  சித்தர்கள் கணக்கிட்டு என்றைக்கும் எல்லோருக்கும் பயன் படக் கூடிய வகையில் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை மிக நுணுக்கமாகவும் , தெளிவாகவும், எளிமையாகவும் தகுதி வாய்ந்தவர்கள் கற்று பயன்படுததி வெற்றி காணும் வகையில் தங்கள் நுhல்களில் சூட்சும ரகசியங்களாக சொல்லியிருக்கிறார்கள்.

சித்தர்கள் பஞ்ச பூதங்கள் எத்தகைய நாழிகை ஜாமங்களில் செயல்படுகின்றன என்பதை முதலில் அறிந்து கொண்டனர் .  பிறகு இந்த ஐந்து பஞ்ச பூதங்களை ஐந்து பஞ்ச பட்சியாக மாற்றம் செய்தனர் .

பஞ்சபட்சிக்குரிய மாற்றத்தை தமிழின் உயிரெழுத்துகள் என்று சொல்லக் கூடிய ஐந்து பிரதான எழுத்துகளான உயிர்  எழுத்துக்களான அ , ,  , ,  ஒ ஆகிய ஐந்து எழுத்துகளும் என்ன வடிவத்தில் உள்ளதோ அதற்கான பறவையை சித்தர்கள் வடிவமைத்தனர் .

---- என்ற தோற்றம் போல் வல்லுhறு பறவை இருக்கும் ,
---- என்ற தோற்றத்தில் இரு புள்ளிகள் அமைத்தால் ஆந்தை போன்ற வடிவமாகும் ,
---- என்ற எழுத்து காக்கை போன்று தோற்றம் உடையது ,
---- என்கிற எழுத்து ஒரு கோழியை உட்கார வைத்தால் அதன் வடிவம் ,
-----என்கிற எழுத்து மயிலின் அமைப்பாக இருக்கும் ,

இதனால் தான் பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படக் கூடிய நிலம் ,நீர், நெருப்பு, காற்று , விண் – ஆகியவை
ஊண் , அரசு , நடை , துயில் , சாவு ஆகிய தொழில்களை செய்கிறது என்றால், ஆகிய தொழில்களை மேற்கொள்ளுகிறது என்றால் ,
அதை உணர்ந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கும்,
உணர்ந்து கொள்வதில் சிக்கல்கள் இருக்கும் ,
புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்,
என்பதை உணர்ந்து  பஞ்ச பூதத்தை பஞ்ச பட்சியாக மாற்றி தமிழ் எழுத்துக்களை ஆதாரமாக வைத்து மாற்றம் செய்து விட்டார்கள்.



பறவைகளின் தொழில் :
இந்தப் பறவைகள் பகலிலும் , இரவிலும் ஐந்து வகையான வேலைகளைச் செய்கின்றன .
அதாவது உணவு உண்ணுதல் , அரசாளுதல்,  நடை , துhங்குதல் (துயில்), சாதல்(சாவு) என்ற ஐந்தும் அப்பறவைகள் அன்றாடம் பகல் , இரவு இரு காலங்களிலும் 24 மணி நேரத்திலும் மேற்கொள்ளும் தொழில்களாகும்.    

இப்போது ஒரு பறவை உணவு எடுக்கும் அது தான் ஊண் ,
பின் அரசு செய்யும் (ஆட்சி செலுத்தும்) அது தான் அரசு ,
பின் சற்று நடந்து செல்லும் அது தான் நடை ,
பின் துhங்கிவிடும் அது தான் நித்திரை,
பின் இறந்துவிடும் அது தான் மரணம்.

இந்த அடிப்படையில் சித்தர்கள் பஞ்ச பட்சியை வடிவமைத்து அதை பகல் ஐந்து சாமங்களை ஐந்து காலங்களாகவும் ,
இரவு ஐந்து சாமங்களை ஐந்து காலங்களாகவும் ஆக மொத்தம் ஒரு நாளை 10 சாமங்களாகப் பிரித்து வகைப்படுத்தினர்.



சாமம் :
சாமத்திற்கான விளக்கங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன:
                  1 நாள்         -   10 சாமம்  ( பகல் - 5 சாமம் இரவு - 5 சாமம்)

                       1 சாமம்        -   6 நாழிகை
                      1 நாழிகை      -   24 நிமிஷம்
                      6 நாழிகை      -   144 நிமிஷம்
                      6 நாழிகை      -   2 மணி 24 நிமிஷம்
                      1 சாமம்        -   2 மணி 24 நிமிஷம்

                      1 சாமம்       -  6 நாழிகை
                     1 சாமம்       -  144 நிமிஷம்
                     1 சாமம்       -  2 மணி 24 நிமிஷம்

                     1 மணி நேரம்  -  60 நிமிஷம்
                     720 நிமிஷம்   -  12 மணி நேரம்
                     5 சாமம்      -  720 நிமிஷம்
                    5 சாமம்      -  12 மணி நேரம்


5 - சாமம் கால அளவு :
                        06.00  +  2.24  --- -  8 மணி 24 நிமிஷம்
                        08.24  + 02.24 -- -  10 மணி 48 நிமிஷம்
                        10.48  + 02.24--- -  01 மணி 12 நிமிஷம்
                        01.12  + 02.24 -- -  03 மணி 36 நிமிஷம்
                         03.36  + 02.24-----  06.00 மணி
                         5 சாமம்       -  ( 6 மணி முதல்   6மணி வரை)



வளர்பிறை -தேய்பிறை :
ஓவ்வொருவருக்கும் வளர்பிறையில் ஒன்றும் , தேய்பிறையில் ஒன்றும் ஆக மொத்தம் இரண்டு பட்சிகள் உண்டு .
இந்த இரண்டு பட்சிகளும் செய்யும் ஐந்து வேலைகளில் எந்த வேலையில் நமது காரியத்தை செய்தால் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .
அந்த நேரத்தில் செய்வோமேயானால் ராகு காலம் , எமகண்டம் , தனிய நாள், கரி நாள் போன்ற அசுப நேரங்கள் எந்த நேரமாக இருந்தாலும் , நமது பட்சிக்குரிய நேரம் சிறந்த நேரம் எது என்பதை உணர்ந்து செய்வோமேயானால் ,
எந்த விதமான அசுப பலனும் ஏற்படாது ,தோஷம் ஏற்படாது , செயலின் விளைவு சரியாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.



பஞ்ச பட்சி மூலம் பயன் அடையும் பலன்கள் :
அனைத்து விதமான சுப காரியங்களையும் மேற்கொள்ளுதல்,
எந்தவிதமான தொழிலையும் தொடங்குவதற்கான வேலையை மேற்கொள்ளுதல் ,
உத்தியோகத்திற்காக முயற்சியை மேற்கொள்ளுதல் ,
வீடு கட்டுவது , கிரக பிரவேசம் செய்வது,  ஆகிய செயல்களை மேற்கொள்ளுதல் ,
பணம் , படிப்பு , பதவி , பணிகள் , பயணம் , ஒப்பந்தம் ஆகியவையும் அதன் அம்சமான தொழில்கள் அனைத்தையும் மேற்கொள்ளுதல் ,
சொத்து , பொருள் வாங்குவது, விற்பது, விவகாரங்களில் வெற்றியை அடைவது போன்ற தொழிலை மேற்கொள்ளுதல் ,
படைப்புகளை உருவாக்குதல் , திறமைகளை அரங்கேற்றம் செய்தல் , போன்ற செயல்களை மேற்கொள்ளுதல் ,
சினிமா படம் எடுப்பது , அரசியலில் ஈடுபடுவது , ஆலய தேவதா பிரதிஷ்டை செய்வது , விக்ரஹங்களை உருவாக்குவது ,போன்றவற்றில் ஈடுபடுதல் போன்ற செயல்களை மேற்கொள்ளுதல் ,
விருத்திக்கான ஹோமங்கள் , பூஜை , ஜெபம் ,தொழுகை , சரீர பாதிப்புகள், தியானம் இவற்றை எல்லாம் மேற்கொள்ளுதல் ,
போன்ற எத்தகைய செயல்களை செய்வதாக இருந்தாலும் ,
எத்தகைய அனுகூலங்களை நாம் அடைவதற்கு முயற்சி செய்தாலும் ,
ஆண் , பெண் யாராக இருந்தாலும் ,
அரியதோர் அற்புத நேரத்தை நாம் அறிந்து அதன் படி அக்காரியங்களில் ஈடுபட்டால் அந்தக் காரியம் நமக்கு சாதகமாக முடியும் ,
அப்படிப் பட்ட அற்புதமான சாஸ்திரக் கலைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த அதிர்ஷ்ட நேரங்களை அறியக் கூடிய கலை தான் பஞ்ச பட்சி சாஸ்திரம்ஆகும்  .



புத்தகங்கள் :
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை விளக்கும் புத்தகங்கள் பல உள்ளன .

தற்காலத்தில் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை அறிந்து கொள்வதற்கு சில முக்கிய புத்தகங்கள் வெளிவிடப்பட்டுள்ளன .

அவைகளில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை கீழே கொடுக்கப் பட்டுள்ளன :

            1 . அகத்தியர்                -   பஞ்ச பட்சி சாஸ்திரம்
            2.  காகபுசுண்டர்          -   பஞ்ச பட்சி சாஸ்திரம்
            3 . போக முனிவர்    -   பஞ்ச பட்சி சாஸ்திரம்
            4 . உரோமரிஷி           -   வினாடி பஞ்ச பட்சி சாஸ்திரம்


பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முறையாகப் பயின்று அதனைப் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களிடமிருந்து மட்டுமே ,
முறையாகப் பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பயின்று வெற்றி பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் .


பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முறைப்படி பயிலுவோம் .
நமக்கு கிடைக்கும் சக்திகளை நல்ல செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் .
நல்லதே நினைப்போம் .
நல்லதே சொல்லுவோம் .
நல்லதே செய்வோம் .


                 “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                        போற்றினேன் பஞ்சபட்சிசாஸ்திரந் தான்முற்றதாமே “”

January 09, 2012

உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்-காரணங்கள்-பதிவு-6




             உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்-காரணங்கள்-பதிவு-6

                              “”பதிவு ஆறை விரித்துச் சொல்ல
                                                                  ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

பஞ்ச பட்சி சாஸ்திரம் - காரணங்கள் :
உலகில் உள்ள உயர்ந்த கலைகளில் , மிக உயர்ந்த கலைகளில் ஒன்றான கலையாக மதிக்கப் படுவதும் ,
கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மிக உயர்ந்த சக்திகளைத் தரவல்லதும் ,
அரிய பொக்கிஷங்களை சூட்சும ரகசியங்களாக மாற்றி தன்னுள் அடக்கி வைத்திருப்பதும் ,
ஆகிய பஞ்ச பட்சி சாஸ்திரத்தை ,
உலக மக்களில் பெரும்பாலானவர்களால் அறியப் படாமல் இருப்பதற்கு ,
இந்த உலகத்தில் உள்ள மக்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு ,


சில முக்கியமான காரணங்கள் உண்டு அவையாவன ,

1 பஞ்ச பட்சி சாஸ்திரம் காலம் காலமாக குரு – சீடர்  பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது .
2 பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் சூட்சும ரகசியங்கள் அனைத்தும் யாருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும்   வகையில் எழுதி வைக்கப் படாமல் மறைபொருளாக எழுதி வைக்கப் பட்டிருக்கிறது  .
3 பஞ்ச பட்சி சாஸ்திரம் ஆன்மீகத்தில்  உயர்ந்த நிலை அடைந்தவர்களால் மட்டுமே உணர்ந்து ,  பின்பற்றி உயர்வு அடையும் வகையில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது .
4 பஞ்ச பட்சி சாஸ்திரம் நல்ல எண்ணம் உடையவர்கள் ,
 உயர்ந்த சிந்தனை உடையவர்கள் ,
சுயநலமற்ற  பொதுநலம் உடையவர்கள் ,
ஆகியவற்றைக் கொண்ட குணநலன்களைக் கொண்டவர்கள் மட்டுமே  அறிந்து கொண்டு பயன்படுத்தும் வகையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது

மேலே சொல்லப் பட்டவைகள் தான் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை மக்கள் அறிந்து கொள்ள முடியாமல் போனதற்குக் காரணங்கள் ஆகும் .



மேலும் பஞ்ச பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற முடியாமைக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன அவையாவன :

1 மௌனவித்தை எனப்படும் பேசாமந்திரத்தின் சூட்சுமம் தெரிந்து இருக்க வேண்டும் .
2 சரம் பார்த்தலின் ரகசியம் அறிந்து அதை நேரம் பார்த்து பயன்படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும் .
3 பஞ்ச பட்சிகளுக்குரிய மூலிகைகள் வேறுபடுத்தி அறிந்து பயன்படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும் .
4 பஞ்ச பட்சிகளுக்குரிய மந்திரங்கள் அறிந்து பயன்படுத்தத் தெரிந்து இருக்க வேண்டும் .
5 பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் மறைத்து வைக்கப்பட்ட மூல ரகசியங்கள் எவை என்பதைத் தெரிந்து  இருக்க அதைப் பயன்படுத்தும் முறை அறிந்து இருக்க வேண்டும் .

மேலே சொல்லப் பட்டவைகள் தான்  பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயின்று இருந்தும் முறையாக பயன்படுத்தி வெற்றி பெற முடியாமைக்குக் காரணங்கள் ஆகும் .



பஞ்ச பட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் உள்ள மக்கள் அறிந்து பயன்படுத்தி வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணங்களாக உரோமரிஷி கீழ்க்கண்ட பாடலைக் குறிப்பிடுகிறார் .

         “”””””தோணுமே உலகிலுள்ள அசஷரத்துக்கெல்லாம்
                                      தோணாத பஞ்சபட்சி சூட்சந்தானும்
                  காணுமே கருக்கருவும் காணாதுபாரு
                                       கடினமடா ஆசானும் காட்டவேணும்
                 பேணுமேமன துருத்தியாக வேணும்
                                      பிசகினால் பட்சிவித்தை பிசகிப்போகும்
                ஆணுமே அசஷரங்கள் அறியவேணும்
                                     அறிவதுதான் வெகுநினைவாய் செலுத்துவாயே””””

                                             -------உரோமரிஷி------பஞ்சபட்சி சாஸ்திரம்---


”””தோணுமே உலகிலுள்ள அசஷரத்துக்கெல்லாம்
                           தோணாத பஞ்சபட்சி சூட்சந்தானும்””””
51 - அட்சரங்களை அடிப்படையாக வைத்தே அனைத்து மந்திரங்களும் எழுதப்பட்டிருக்கின்றன  என்பதும் ,
அவைகளை அடிப்படையாக வைத்தே அனைத்து மந்திரங்களும் இயங்குகின்றன என்பதும் ,
அதில் உள்ள இரகசியங்கள் அனைத்தும் உலகில் உள்ள மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதும் ,
மந்திரங்கள் என்றால் என்ன என்றும் , அதைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்றும் , மந்திரத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும் .

ஆனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாததும் சூட்சும ரகசியங்கள் பலவற்றை தன்னுள் அடக்கி வைத்திருப்பதும் ஆகிய
பஞ்சபட்சி சாஸ்திரத்தை இயக்குவதற்கு தேவையான  மையக்கருவாக உள்ள சூட்சும ரகசியங்கள்  எவை என்பதும் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் பஞ்ச பட்சிக்குரிய காலங்கள் எவை என்பதும் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் பஞ்ச பட்சிக்குரிய மந்திரங்கள் எவை என்பதும் ,
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் பஞ்ச பட்சிக்குரிய மூலிகைகள் எவை என்பதும் ,
யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது .



   ””””””காணுமே கருக்கருவும் காணாதுபாரு
                                   கடினமடா ஆசானும் காட்டவேணும்”””””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் உள்ள மையக் கருவாக உள்ள சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் யாரும்  எளிதில் உணர்ந்து கொள்ள முடியாது .

அத்தகைய மையக்கருவாக உள்ள  சூட்சும ரகசியங்கள் அனைத்தையும் முழுமையாக உணர்ந்தவர்களால் மட்டுமே ,
 பயன்படுத்தி வெற்றி கண்டவர்களால் மட்டுமே  , தான் உணர்ந்தவற்றை அதனுடைய சூட்சும ரகசியங்களை அவிழ்த்து விளக்க முடியும் .
அவரால் தான் ஆசானாக இருந்து பஞ்சபட்சி சாஸ்திரத்தை சொல்லிக் கொடுக்க முடியும் .



  ”””””””பேணுமேமன துருத்தியாக வேணும்
                                  பிசகினால் பட்சிவித்தை பிசகிப்போகும்
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை பயின்று பயன்படுத்தி வெற்றி காண வேண்டும் என்றால் ,
எதனையும் எதிர்த்து சமாளிக்கக் கூடிய மனோதிடத்துடன் கூடிய தைரியம் , தெளிவான மனம்,  நிதானம் , அமைதி இருக்க வேண்டும் .
இத்தகைய குணநலன்களைப் பெற்றவர்களால் மட்டுமே தான் பஞ்ச பட்சி சாஸ்திரத்தை தெளிவாகப்  பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி காண முடியும் .

மேலே சொல்லப்பட்ட குணநலன்கள் இல்லாதவர்கள் , மையக்கருவான சூட்சும ரகசியங்களை அறியாதவர்கள் பஞ்சி பட்சி சாஸ்திரத்தைப் பயன்படுத்தினால் ,

ஓவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு தவறாகவே இருக்கும்  .
ஓவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு சரியாக இருக்காது .



 “”””””ஆணுமே அசஷரங்கள் அறியவேணும்
                            அறிவதுதான் வெகுநினைவாய் செலுத்துவாயே””””””
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் உள்ள சூட்சும ரகசியங்கள் எவை என்பதையும் ,
பஞ்சபட்சி சாஸ்திரத்தை செயல் படுத்தும் விதத்தில் உள்ள ரகசியங்கள் எவை என்பதையும் ,
பஞ்சபட்சி சாஸ்திரத்தை  செயல்படுத்த பயன் படுத்த பயன்படும் பொருள் எவை என்பதையும் அறிந்து சரியாக பயன் படுத்தினால் ,
ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு சரியாக இருக்கும்,
இல்லையென்றால் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவும் தவறாகவே இருக்கும் என்கிறார்  உரோமரிஷி .


அடுத்து பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன என்பதைப் பற்றிய விளக்கங்களை அடுத்து பார்ப்போம் .


             “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                    போற்றினேன் பதிவுஆறு ந்தான்முற்றே “”

January 07, 2012

உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்- யாருக்கு சொல்லக் கூடாது - பதிவு-5




உரோமரிஷி-பஞ்சபட்சி சாஸ்திரம்-யாருக்கு சொல்லக் கூடாது -                                                        பதிவு-5

                         “”பதிவு ஐந்தை விரித்துச் சொல்ல
                                                            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

பஞ்ச பட்சி சாஸ்திரம் -யாருக்கு சொலலக் கூடாது:

பாடல்-1
பஞ்ச பட்சி சாஸ்திரத்தை  எத்தகைய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு மட்டும்  உபதேசிக்க வேண்டும் என்று சொன்ன உரோமரிஷி .
யாருக்கு , எத்தகைய தன்மைகள் கொண்டவர்களுக்கு , பஞ்ச பட்சி சாஸ்திரத்தை சொல்லக் கூடாது .
யாருக்கு எத்தகைய குணநலன்கள் கொண்டவர்களுக்கு வெளி விடக் கூடாது,
சொன்னால் என்ன நடக்கும் ,
என்பதைக் கீழ்க்கண்ட பாடல்களில் உரோமரிஷி விளக்குகிறார் .

    “””””””””செப்பினதோர் சாஸ்திரத்தை உலகமீதில்
                                          ஜெகமறியா மாந்தருக்கு சொன்னாயானால்
                   தப்பில்லை பதினெண்பேர்  சாபந்தானும்
                                          தன்குலத்தை நாசமது செய்யும்பாரு
                  கொப்புகளின் சரித்துவிளையாடும் சென்மம்
                                        குரங்கதுபோல் ஆகுமப்பா சொன்னேன்யானும்
                  இப்புவியில் வாலையுட சாபம்அப்பா
                                         ஈடாவேதொரு போதும் இல்லைத்தானே”””””””””
     
                                                 -------உரோமரிஷி---பஞ்சபட்சி சாஸ்திரதம்---

     “”””””””செப்பினதோர்  சாஸ்திரத்தை உலகமீதில்
                                        ஜெகமறியா மாந்தருக்கு சொன்னாயானால்
                 தப்பில்லை பதினெண்பேர்  சாபந்தானும்
                                        தன்குலத்தை நாசமது செய்யும்பாரு””””””””
பாவத்தின் விளைவுகளை உணர்ந்து செயல்படும் ,
தன்னலம் இல்லா உள்ளம் கொண்டு இயங்கிடும் ,
மற்றவர்  துன்பம் கண்டு வருந்திடும் ,
வறுமையின் தாக்கம் கண்டு இளகிடும் ,
அறியாமையின் நிலை கண்டு கலங்கிடும் ,
தனக்கு மற்றவர்கள் எத்தகைய கெடுதலான செயல்களைச் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அதை மற்றவர்களுக்கு செய்யாமல் இருந்திடும் ,
இளகிய மனம் கொண்ட தன்னலம் இல்லா உள்ளங்களுக்கு மட்டுமே பஞ்ச பட்சி சாஸ்திரத்தைச் சொல்ல வேண்டும் .

இத்தகைய தன்மை இல்லாத ,உலகத்தில் உள்ள மக்களுக்கு பஞ்ச பட்சி சாஸ்திரத்தை சொன்னால் 18 சித்தர்களுடைய சாபம் அவர்களுக்கு உண்டு.


18 சித்தர்களுடைய சாபமானது அவர்களுடைய பரம்பரையை வம்சத்தை இல்லாமல் அழித்து விடும் .
வம்சமானது வேரோடு அழிந்து விட்ட காரணத்தால் மீண்டும் தழைக்கவே முடியாது என்கிறார்  உரோமரிஷி .



 ””””கொப்புகளின் சரித்துவிளையாடும் சென்மம்
                     குரங்கதுபோல் ஆகுமப்பா சொன்னேன்யானும்”””
தனது வாழ்க்கையை ஓட்டுவதற்கும் ,
தனது பசியை தீர்த்துக் கொள்வதற்கும்,
இரை தேடுவதற்கும் ,
ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரம் தாவி குதித்து ஓடும் குரங்கின் வாழ்க்கையைப் போல ,

பஞ்சபட்சி சாஸ்திரத்தை தவறான மனிதர்களிடம் சொல்பவர்களின் வாழ்க்கையானது ,
அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டு , நிலையில்லாத ஒரு வாழ்க்கையாக அலைக்கழிந்து , துன்பத்துடனும் ,துயரத்துடனும் கவலையுடனும் இருக்கும் .

இத்தகைய நிலையானது ஒவ்வொரு ஜென்மத்திலும் இருக்கும்.
ஜென்மம் ஜென்மமான இத்தகைய துன்ப நிலையே தொடரும் என்கிறார் உரோமரிஷி .



       “””””””””இப்புவியில் வாலையுட சாபம்அப்பா
                                           ஈடாவேதொரு போதும் இல்லைத்தானே”””””””””
பஞ்சபட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் வாழும் தவறான எண்ணம் கொண்ட மனிதர்களிடம் சொல்பவர்களுக்கு வாலைத்தாயின் சாபம் அவர்களுக்கு உண்டு .
அதாவது வாலைத்தாயின் சாபமானது அவர்களை வந்து சேரும் .
வாலைத்தாயின் சாபத்திற்கு ஈடான சாபம் என்ற ஒன்று இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை என்கிறார் உரோமரிஷி .

வாலைத்தாய்
வாலைத்தாய் என்றால் என்ன , யார் என்பதற்கு பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவினாலும் , இந்த தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள் .

இருப்பு நிலை , அசைந்து இயக்க நிலை தோன்றுவதற்கு ஒரு அழுத்தம் கொடுக்கப் படுகிறது . அந்த அழுத்தத்தைத் தான் வாலைத்தாய் என்கின்றனர். அந்த அழுத்தத்தைத் தான் வாலைத்தாயாக உருவகம் செய்கின்றனர்.

இருப்பு நிலையே அசைவதற்கு காரணமாக இருப்பதால் ,
இருப்பு நிலை இயக்க நிலையாக மாற்றமடைவதற்கு அடிப்படையாக இருப்பதால் ,
இருப்பு நிலை பரிணமித்து இயக்க நிலையாக தோன்றுவதற்கு ஆதாரமாக இருப்பதால் ,

வாலைத்தாய் உயர்ந்த , ஒரு சக்தி வாய்ந்த , தெய்வமாக கருதப்படுகிறது .
இத்தகைய வாலைத்தாயின் சாபத்தைத் தான்  நீக்க முடியாத சாபம் என்கிறார்  உரோமரிஷி .



பாடல் -2

           “””””””சூழுமே இருபத்தோர்  தலைமுறைக்கும்
                                            சூழுவது ஒருவரால் திருப்பொண்ணாது
                     மாளுமே அவன்குலமும் அற்றுப்போகும்
                                          மக்களே சிவசிந்தை மறக்கொண்ணாது
                   நாளுமே பஷிகளின் கருவரிந்து
                                         நலந்தீதும் அவரவர்கள் பேரும்கண்டு
                  வாழுமே அஷரம்சொல்வேன் பிரித்துத்தானே
                                        மக்களே ஜெகத்தோர்க்கு காட்டொண்ணாது”””””””
                             
                                                     -----உரோமரிஷி---பஞ்சபட்சி சாஸ்திரம்---

        “””””””சூழுமே இருபத்தோர் தலைமுறைக்கும்
                                       சூழுவது ஒருவரால் திருப்பொண்ணாது
                   மாளுமே அவன்குலமும் அற்றுப்போகும்”””””””

பஞ்சபட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் வாழும் தவறான எண்ணம் கொண்ட மனிதர்களிடம் சொல்பவர்களுக்கு பாவமானது 21 தலைமுறை வரைக்கும் தொடரும் .
பாவத்தின் பலனானது 21 தலைமுறைகளை துன்பக் கடலில் ஆழ்த்தி, சோகத்தில் மிதக்க விட்டு , நிலையில்லாத வாழ்க்கையைக் கொடுத்து, அலைக்கழிக்கும் .

இந்த பாவத்தை ,
நிவர்த்தி செய்ய பரிகாரங்களோ ,
நிவர்த்தி செய்ய சக்தி கொண்டவர்களோ ,
நிவர்த்தி செய்வதற்கு உரிய முறைகளோ எதுவும் கிடையாது .
பாவத்தின் பலனை 21 தலைமுறைகள் அனுபவித்துத் தான் தீர வேண்டும் .

பஞ்சபட்சி சாஸ்திரத்தை இந்த உலகத்தில் வாழும் தவறான எண்ணம் கொண்ட மனிதர்களிடம் சொல்பவர்களுடைய குலம் அழிந்து, ஒன்றுமில்லாமல் போகும் என்கிறார்  உரோமரிஷி .



                 “””””””””மக்களே சிவசிந்தை மறக்கொண்ணாது
           நாளுமே பஷிகளின் கருவரிந்து
                                நலந்தீதும் அவரவர்கள் பேரும்கண்டு
          வாழுமே அஷரம்சொல்வேன் பிரித்துத்தானே
                                மக்களே ஜெகத்தோர்க்கு காட்டொண்ணாது”””””””

எண்ணம் , சொல் , செயல் ஆகிய அனைத்தையும் ,
எப்பொழுதும் சிவனின் மேல் செலுத்த வேண்டும் .
எப்பொழுதும் சிவனுடைய சிந்தனையாகவே இருக்க வேண்டும் .

சிவ சிந்தை என்றால் ,
ஆதி நிலை , முதல் நிலை, மூல நிலை என்று சொல்லப் படக் கூடிய இருப்பு நிலையின் மேல் மனதை வைக்க வேண்டும் என்று பொருள் .
அத்தகைய மனதை உடையவர்களுக்கே பஞ்சபட்சி சாஸ்திரம் பலிக்கும் .

பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் உள்ள சூட்சும ரகசியங்கள் அதாவது மையமான கருப்பொருள் எவை என்பதையும் ,
ஒவ்வொருவரும் பஞ்சபட்சி சாஸ்திரத்தை உணர்ந்து பயன்படுத்தும் பொழுது அதாவது அதை செயல் படுத்தும் பொழுது உள்ள ரகசியங்கள் எவை என்பதையும் ,

ஒவ்வொரு நாளும் பஞ்ச பட்சிகள் செய்யும் தொழிலுக்குரிய நேரங்களை தனித்தனியாக பிரித்து அவை எவை என்பதையும் ,
ஒவ்வொருவரும் பஞ்சபட்சி சாஸ்திரத்தை உணர்ந்து பயன்படுத்தும் பொழுது உண்டாக்கக் கூடிய நன்மைகள் தீமைகள் எவை என்பதையும் ,

ஒவ்வொருவரும் பஞ்சபட்சி சாஸ்திரத்தை பயன்படுத்தும் பொழுது அதாவது அதை செயல் படுத்தும் பொழுது பயன்படுத்தப் பொருள் எவை என்பதையும் ,
அவற்றிற்கு உரிய மூலிகைகள் , மந்திரங்கள் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து அவை எவை என்பதையும்,

வேறுபடுத்தி தனித்தனியாக விளக்கி , எளிதாக பயன்படுத்தி வெற்றி காண்பதற்காக , முறைப்படுத்தி , ரகசியங்களை அவிழ்த்து கூறுகிறேன் .

இத்தகைய சிறப்பு மிக்க பஞ்சபட்சி சாஸ்திரத்தை உலகத்தில் உள்ள நயவஞ்சக எண்ணம் கொண்ட மனிதர்களுக்கு சொல்லாதே ,
அப்படி சொன்னால் மேலே சொல்லப் பட்டது போல பாவமானது 21 தலைமுறை வரை பாதிக்கும் என்கிறார்  உரோமரிஷி .


பஞ்சபட்சி சாஸ்திரத்தை யாருக்கு சொல்ல வேண்டும்,  யாருக்கு சொல்லக் கூடாது என்று பார்த்தோம்.

அடுத்து மிக உயர்ந்த கலையாகிய , பஞ்ச பட்சி சாஸ்திரம் இந்த உலகத்தில் உள்ள மக்கள் அறியாமல் இருப்பதற்கான
காரணங்கள் எவை என்பதை பற்றி அடுத்து காண்போம் .


                      “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                          போற்றினேன் பதிவுஐந் துந்தான்முற்றே “”