January 16, 2012

மஞ்சள்- வேப்பமரம்- பதிவு-1




             மஞ்சள்- வேப்பமரம்- பதிவு -1

                                     “”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                                                                  ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

நம்முடைய முன்னோர்கள் மஞ்சளின் மகிமையையும் , வேப்பமரத்தின் சிறப்புகளையும் உணர்ந்து இருந்தனர்.

அதனால் இரண்டையும் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு பயன்பாட்டு பொருளாக அமையும் விதத்தில்,
அதன் மகிமையை , அதன் சக்திகளை , அதன் பலன்களை , மக்கள் பெற வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தில்,
வாழ்க்கைத் தேவையை நிறைவு செய்யும் பொருளாக இருக்கும் வகையில் ,
பண்டிகைகளில் , விழாக்களில் அதனைப் பயன்படுத்தி அதனுடைய பயன்களை மக்கள் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இணைத்து வைத்து இருந்தனர்.


மஞ்சள்- வேப்பமரம் ஆகிய இரண்டின் பயன்களை உணர்ந்த காரணத்தினால்,
இந்து மதத்தில் உள்ளவர்கள் அதை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துகிறார்கள்  என்ற காரணத்தினாலேயே ,
மற்ற மதத்தைச் சார்ந்தவர்கள் அதை பயன்படுத்துவதில்லை ,அதன் சக்தியை அதன் மகிமையை உணராமல் புறக்கணிக்கின்றனர் .


மதத்திற்குள் இருந்து , ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து , சிந்தனையை செயல்பட விடாமல் தடுத்து , அறிவாற்றலின் தன்மையை உணராமல், இயற்கை தந்த வெகுமதியை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் ,
இரண்டையும் தங்கள் வாழ்வில் பயன்படுத்தி அதன் நன்மைகளைப் பெறுவதை தவிர்த்து வருகின்றனர் .


மதத்திற்குள் இருந்து பார்க்காமல் ,இயற்கை நமக்கு அளித்த மாபெரும் பொக்கிஷங்களில் உள்ள சக்திகளை நாம் உணர்ந்து கொண்டு ,
இயற்கை அளித்த மாபெரும் நன்கொடை அனைவருக்கும் சொந்தமானது ,
குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு மட்டுமே சொந்தமானது என்பதை நினையாமல் ,
இயற்கை அளித்த நன்கொடைகளை அவற்றிற்கு உள்ள சக்திகளை உணர்ந்து கொள்வோம் .
அதை இந்த உலக வாழ்வில் பயன்படுத்தி இன்பங்களை பெறுவோம் நன்மைகளை உணர்வோம்.



மஞ்சள் மகிமை :
இறந்த ஆவிகள் தீயவற்றை விளைவிக்கக் கூடிய ஆன்மாக்கள் சுத்தமில்லாத பெண்களைப் பற்றிக் கொண்டு கெடுதல்களை விளைவிப்பதும் ,
பெண்களுக்கு துன்பங்களை விளைவிக்கக் கூடிய செயல்களை உண்டு பண்ணுவதும் ,
வயதுக்கு வந்த பெண்களின் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடியதும்,
கணவர்களோடு சண்டைபோட வைத்துச் சூட்சுமத்தில் அந்தப் பெண்களுடைய மனங்களில் அமைதியின்மையை ஏற்படுத்துவதும் ,
காலங் காலமாக நடந்து வருகின்றது .
இது அனைத்து ஜாதி , மத, இனங்களிலும் உள்ளது என்பதை நம்முடைய முன்னோர்கள் உணர்ந்து கொண்டனர்.

இதைத் தவிர்க்க மன அமைதியையும் , குடும்ப சுக வாழ்க்கையையும், வழங்குவது மஞ்சள் தான் என்பதை நம்முடைய முன்னோர்கள் அறிந்து உணர்ந்து தெளிவு பெற்றதால் ,
மஞ்சளைப் பல வழிகளில் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தத் தொடங்கியதுடன் மக்களும் அதனைப் பெறும் வகையில் முறைகளை வகுத்து வைத்தனர்  நமது முன்னோர்கள் .

மஞ்சள் எவ்வாறு மனிதனுடைய வாழ்வில் பயன்படுத்தப் பட்டு வருகிறது என்பதைப் பற்றி பார்ப்போம் :


பெண்கள் :
மஞ்சளில் குட மஞ்சள் என்ற ஓர் வகை உள்ளது .
இந்த குடமஞ்சளைப் பெண்கள் முகத்தில் தொடர்ந்து பூசிவர வேண்டும். அவ்வாறு முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகத்தில் ஒருவித மினுமினுப்பு உண்டாகும் .
உடலில் உண்டாகி இருக்கும் சிலந்தி நோய் போகும் வாய்ப்பும் உள்ளது.
பெண்கள் குட மஞ்சளை உடலில் தொடர்ந்து பூசிவருதல் வேண்டும், அவ்வாறு பூசி வந்தால் ஆடவர்கள் பெண்களின் அழகில் வசீகரப்படுவார்கள்.
பெண்களின் உடலில் தோன்றும் உடலில் எழுந்து வீசும் துர்வாடை நீங்கும், கெட்ட வாசனைகள் விலகும் .
உடலைப் பொன்னிறமாக பொன் போன்ற நிறமாக மாற்றும்.


தினமும் இந்த மஞ்சளை உடலில் பூசி நீராடி வந்தால்  இனிய சுகத்துடன் கூடிய உறக்கம் வருவதை உணர்ந்து கொள்ளலாம் .
பெண்கள் முந்தைய நாட்களில் தினமும் மஞ்சளைக் கல்லில் அரைத்து உடலெங்கும் பூசி நீராடுவர்.
இதனால் உடலில் காணும் காந்தல் துhக்கமின்மை இவைகள் போகும் .
மேலும் உடல் சுத்தியும் முகத்தில் களையும் தோன்றும் .
அளவுக்கு மிஞ்சிய வியர்வை தடைப்படும் , வியர்வையால் வரும் துhநாற்றம் மறையும் .
பொதுவாக மஞ்சளை அரைத்துப் பூசி நீராடி வருபவர்களைத் தொத்து வியாதிகள் எதுவும் தாக்காது .
உடலில் தோல் கிருமிகள்,  சொறி சிரங்குகள் ஆகியவை வராது .
உடலில் ஓடும் இரத்தம் சுத்தியாகும் .


பெண்கள் கர்ப்ப காலத்திலும் . பிரசவத்திற்கு முன்பும் , பின்பும் மஞ்சள் உபயோகித்து வந்தனர்.
அதனால் அவர்களுக்கு வசீகர சக்தியும் , பொன்நிறக் குழந்தைகளும் பிறந்தன.


எவ்வளவு உயர்ந்த படிப்புப் படித்திருந்தாலும் , வளமான செல்வங்கள் இருந்தபோதும் , கணவன் மனைவிக்கிடையே உண்டாகக் கூடிய கருத்து வேறுபாட்டிற்குக் காரணம் ,
பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிக்காதது தான் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


தற்காலத்தில் பெண்கள் மஞ்சளின் பெருமைகளை , மகிமைகளை , சக்திகளை உணராமல் மஞ்சளை தங்கள் உடலில் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர் .



திருமணம்:
மஞ்சளில் பிள்ளையார்  பிடித்து வைத்து வழிபாடு செய்கின்றனர்.
மணமேடைகளில் இருக்கும் பொழுது மஞ்சள் தோய்த்த ஆடைகளை உடுத்துகின்றனர்.
திருமாங்கல்யக் கயிறும் மஞ்சளில் தான் செய்யப் படுகிறது .
மணமக்களுக்குத் திருஷ்டி படாமலிருக்க புரோகிதரும் மற்றும் இதர உறவினர்களும் மஞ்சள் கலந்த அட்சதையைத் துhவுகின்றனர்.


தீய ஆவிகள் சாந்தி முகூர்த்தத்தின் போது படுக்கை அறைக்குள் வராமலிருக்க மணமகனுக்கும் , மணப்பெண்ணுக்கும் மஞ்சள் காப்புக் கட்டுகின்றனர்.
மஞ்சள் பொட்டு அணிகின்றனர்.



சக்தி :
கந்தகம் தான் ஆதிபராசக்தி .
அருள்வாக்கு சொல்ல , நிலத்தடி நீர்  கண்டுபிடிக்க, தேவி உபாசனை செய்ய, ஆண்களை வசீகரம் செய்யக் கந்தகம் அவசியம் வேண்டும். 
இக்கந்தகம் மஞ்சளில்தான் அதிகம் உண்டு,
பெண்கள் மட்டும் மஞ்சள் அதிகம் உபயோகிக்கலாம் .


ஆண்களுக்கு ஏற்படும் சாமியாட்டத்தைப் போக்க மஞ்சள் பால் கொடுத்து சாமியை மலை ஏறவைப்பார்கள் .
மாரியம்மன் கோவிலில் பிரதான பிரசாதம் மஞ்சளும் , எலுமிச்சம் பழமும் தான்.
மஞ்சள் பொடி போட்ட எலுமிச்சைச் சாதம் மாரியம்மனுக்கு மிகவும் பிடித்தமானது என்று படையல் வைக்கின்றனர்.


மஞ்சள் குங்குமம் என்பது மஞ்சள்பொடி எலுமிச்சைச் சாறு , குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் , பசுநெய் போட்டுத் தயார்  செய்வது ஆகும்.
இது நெற்றியில் வடுக்களை , காயங்களை ஏற்படுத்தாத குணங்களை உடையது .


எல்லோர்  வீடுகளிலும் துளசிச் செடிபக்கம் மஞ்சள் செடி வைத்து வளர்த்தார்கள் .
பச்சரிசி , மாக்கோலம் , மஞ்சள் பொடி கோலம் போட்டு வீட்டை அலங்கரித்தனர்.



மஞ்சள் பட்டு :
மஞ்சள் பட்டிற்கும் இதே குணங்கள் உண்டு .
மஞ்சள் சேலை அணிந்தாலும் ,
கனக புஷ்பராகம் அணிந்தாலும் ,
மஞ்சள் பட்டுத்துண்டு அணிந்தாலும் ,
எதிரிகளின் அபிசார பிரயோகங்களான ஹோமங்கள் பயனற்றுப் போய்விடும்.
எதுவும் செயல்படாது .
இதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக செயல்படுத்தப் படும் பிரயோகங்கள் அனைத்தும் செயலற்றுப் போய் விடும் .


மஞ்சளின் இயல்புகளை , சிறப்புகளை , மகிமைகளை , சக்திகளை சொல்லிக் கொண்டே போகலாம் . மஞ்சளின் சக்திகளில் முக்கியமானவைகளை மட்டும் பார்த்தோம் .

அடுத்து வேப்பமரத்தின் இயல்புகளை , சக்திகளை  பார்ப்போம் .


                          “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                              போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”