February 08, 2019

திருக்குறள்-பதிவு-101


                      திருக்குறள்-பதிவு-101

பெல்லரமினோ :
“ ஜெர்மனி, இங்கிலாந்து,
ஸ்கேண்டினேவியா
(Scandinavia),
ஸ்விட்சர்லாந்து
(Switzerland)
மற்றும் ஃப்ளாண்டர்ஸ்
(Flanders)
பேரரசர்கள்
எங்களுக்கு சவாலாக
இருக்கிறார்கள் “

ஜியார்டானோ புருனோ:
“உங்களைப் பார்த்து
கற்றுக் கொண்டார்கள் “

“அதை பயன் படுத்தும்
போது உங்களுக்கு
எதிராக இருக்கிறது
அவ்வளவு தான் “

பெல்லரமினோ :
“ எதை
சொல்கிறீர்கள்…………..? “

ஜியார்டானோ புருனோ:
“ ஒவ்வொரு நாடும்
தங்கள் நாட்டிற்கென்று
ஒரு மதத்தை தனியாக
நிறுவுவதன் மூலம்
மதத்தின் பெயரால்
மக்களுடைய நம்பிக்கையை
அடித்தளமாக்கி அதன்
மூலம் அதிகாரத்தை
கைப்பற்றி - மக்களை
அடிமையாக வைத்து
அரசாட்சி செய்வது எப்படி
என்று உங்களிடம்
இருந்து கற்றுக்
கொண்டதை செயல்படுத்த
நினைக்கிறார்கள் – அது
உங்களுக்கு எதிராக
இருக்கிறது. “

பெல்லரமினோ :
இத்தகைய தவறான
ஒரு நிலை ஏற்பட்டு
விடக்கூடாது
என்பதற்காக தான்
நாங்கள் பாடு பட்டுக்
கொண்டு இருக்கிறோம் “

ஜியார்டானோ புருனோ:
“ நம்பிக்கையின் பெயரால்
மக்களை அடிமைகளாக
வைத்து நீங்கள் ஆள
நினைப்பது தவறில்லை ;
அதை வேறு நாடுகள்
செய்ய முற்படும்போது
நீங்கள் ஏன் அதை
எதிர்க்கிறீர்கள் ;
உங்களுக்கு எதிராக
அவர்கள்
இருக்கிறார்கள் என்ற
காரணத்திற்காகவா……….? “

பெல்லரமினோ :
“ எது உண்மையான
நம்பிக்கை என்பதைப்
பொறுத்துத் தான்
அனைத்தும் இருக்கிறது “

ஜியார்டானோ புருனோ:
“ உங்களுடைய
நம்பிக்கையை
பாதுகாப்பதற்குத் தான
ஆயிரக்கணக்கான
இஸ்லாமியர்களையும்
யூதர்களையும் உயிரோடு
எரித்து கொல்கிறீர்களா “

“ உங்களுடைய
நம்பிக்கையை
பாதுகாப்பதற்குத் தான்
நீங்கள் ஸ்பெயினை
பயன் படுத்துகிறீர்களா………….? “

பெல்லரமினோ :
“ ஸ்பெயின் நாடு
கிறிஸ்தவ மதத்தின் மீது
நம்பிக்கை கொண்ட நாடு
அனைத்து விதமான
மத விரோத போக்கிற்கும்
ஸ்பெயின் உற்ற
துணையாக இருக்கிறது, “

ஜியார்டானோ புருனோ:
“கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை வலிமையாக
இருக்கும் ஐரோப்பாவை
சிறு சிறு துண்டுகளாக
உடைத்து அதன்
வலிமையை சிதைப்பதற்குத்
தேவையான அனைத்து
விதமான செயல்களையும்
செய்து வைத்திருக்கிறது “

“ அழிவிற்கான விதையை
விதைத்து விட்டு
அழிவு எப்போது
ஏற்படும் என்பதை
கவனித்துக் கொண்டு
இருக்கிறது “

பெல்லரமினோ :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
நடைமுறைப்படுத்தப்பட்டு
மக்களால்
பின்பற்றப்பட்டு வரும்
சட்டதிட்டங்களையும் ;
மத நம்பிக்கைகளையும் ;
ஒற்றுமையையும் ;
எவர் ஒருவர் அழிக்க
நினைத்தாலும் ;
அவருடைய
செயலை தடுத்து ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையை பாதுகாக்க
வேண்டிய மிகப்பெரிய
பொறுப்பு எங்களுக்கு
இருக்கிறது.”

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையை எவர்
ஒருவர் அழிக்க
நினைத்தாலும் ;

“ ஆண்டாண்டு காலமாக
கிறிஸ்தவர்களால்
கடைபிடிக்கப்பட்டு வரும்
மத நம்பிக்கைகளை
எவர் ஒருவர்
இழிவு செய்தாலும் ;

பைபிளில் சொல்லப்பட்ட
ஆண்டவரின்
வார்த்தைகளை எதிர்த்து
எவர் ஒருவர்
கருத்து கூறினாலும் ;

அவர் கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கும் ;
கிறிஸ்தவர்களுக்கும் ;
எதிரியாகவே
கருதப்படுவார் ;
நம்பிக்கை
துரோகியாகவே
கருதப்படுவார் ;

ஜியார்டானோ புருனோ:
“ தயவு செய்து என்னை
மீண்டும் என்னுடைய
சிறை அறைக்கு
அழைத்து செல்லுங்கள்! “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------   08-02-2019
/////////////////////////////////////////////////////////////