July 19, 2020

600 – வது பதிவு :


600 – வது பதிவு :

அன்பிற்கினியவர்களே,

ஜபம் தன்னுடைய
600 வது பதிவைத்
தொட்டிருக்கிறது

ஒரு நாளைக்கு
ஒரு பதிவு
இரண்டு பதிவு
என்று ஜபம்
கட்டுரையை
பதிவு செய்த
வந்த நான்
கொரோனா காலத்தில்
மொத்தமாக
ஐந்து பதிவுகள்
பத்து பதிவுகள்
பதினைந்து பதிவுகள்
என்று போட
ஆரம்பித்தேன்

அனைவருடைய
வரவேற்பும்
பாராட்டுதல்களும்
வழி காட்டுதல்களும்
அறிவுரைகளும்
என்னை
வழிநடத்திய
காரணத்தினாலும்
எனக்கு துன்பம்
ஏற்பட்ட போது
எனக்கு கவசமாக
இருந்து துன்பத்தைத்
தடுத்து வாழ்க்கையை
வாழச் செய்த
அன்புள்ளங்கள்
எனக்கு துணையாக
இருந்த
காரணத்தினாலும் தான்
என்னால்
600 வது பதிவை
பதிவு செய்ய முடிந்தது

ஜபத்தில் நான்
பல்வேறு கட்டுரைகளை
எழுதிக் கொண்டு
வருகிறேன்
நான் பெரும்பாலும்
யாரும் தொடாத
கதைகளையே எடுத்து
அதற்கு வசனம்
எழுதுவேன்
இப்போது மகாபாரதக்
கதையில் ஒரு சில
கதைகளை மட்டும்
எடுத்துக் கொண்டு
அதற்கு வசனம்
எழுதிக் கொண்டு
வருகிறேன்

கதைகளுக்கு
நான் எழுதும்
வசனங்கள்
அனைவருக்கும்
பிடித்திருக்கின்ற
காரணத்தினால்
மகாபாரதக் கதைகளில்
சில முக்கியமான
கதைகளுக்கு வசனம்
எழுதிக்
கொண்டிருக்கிறேன்

இறைவனின்
அருளும்
சித்தர்களின்
வழிகாட்டுதலும்
தாயின்
ஆசியும்
வாழ்க்கைத்
துணைவியின்
துணையும்
உடன்
பிறந்தவர்களின்
நேசமும்
நண்பர்களின்
அரவணைப்பும்
உறவுகளின்
பாசமும்
பெற்று நான்
ஜபத்தை
தொடர்கிறேன்

நன்றி !

---------என்றும் அன்புடன்
---------K.பாலகங்காதரன்

-------19-07-2020
/////////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-108


                 ஜபம்-பதிவு-600
          (அறிய வேண்டியவை-108)

கிருஷ்ணன் :
“சபாஷ்
அண்ணா சபாஷ் “

(என்று தொடையைத்
தட்டுகிறார்
கிருஷ்ணன்
கிருஷ்ணன் என்ன
சொல்ல வருகிறார்
என்று பீமனுக்கு
புரியவில்லை

தோல்வி அடையும்
நிலையில்
இருக்கிறான் பீமன்
பீமனுடைய
உடலிலிருந்து
உயிரைப் பிரித்து
எடுக்கும்
நோக்கத்துடன்
பீமனுடன்
சண்டையிட்டுக்
கொண்டிருந்தான்
துரியோதனன்
மரணம் பீமனை
நெருங்கிக்
கொண்டிருந்தது

துரியோதனனுடன்
சண்டையிட
முடியாமல் பீமன்
உயிருக்காகப்
போராடிக்
கொண்டிருப்பதை
அங்குள்ள
அனைவரும்
கண்டார்கள் அந்த
சமயத்தில் மீண்டும்
கிருஷ்ணன் )

கிருஷ்ணன் :
“சபாஷ்
அண்ணா சபாஷ்”

(தன்னுடைய
தொடையைத்
தட்டி சொன்னார்
கிருஷ்ணன்)

(கிருஷ்ணன் காட்டிய
செய்கையின் அர்த்தம்
பீமனுக்கு இப்போது
தான் புரிந்தது
கதாயுதத்தால்
துரியோதனனுடைய
தொடையை
உடைக்க
நேரம் பார்த்துக்
கொண்டிருந்தான்

துரியோதனன் தாவி
மேலே எழும்
போது பீமன்
துரியோதனனுடைய
தொடையை
கதாயுதத்தால்
அடித்தான்
துரியோதனனுடைய
தொடை எலும்பு
உடைந்து இரத்தம்
கொட்டியது)

துரியோதனன்  
நிற்க முடியாமல்
மண்ணில் சாய்ந்தான்)

“எவனால் ஆயிரம்
ரத்னங்களால்
இழைத்த
கிரீடங்களுடன்
கூடியவர்களான
பட்டாபிஷேகம்
செய்யப்பெற்ற
மன்னர்களிடமிருந்து
கப்பம் முழுவதும்
வாங்கப்பட்டுத்
தன்னுடைய
அரண்மனைக்கு
கொண்டு
வரப்பட்டதோ”

“எவன் நிமித்தமாக
முற்காலத்தில்
கர்ணன் ஒருவனால்
நான்கு
சமுத்திரங்களையும்
கடைசி
எல்லையாகக்
கொண்டதும்
ரத்தினங்களால்
அலங்கரிக்கப்
பட்டதுமான
பூமியை கப்பம்
கொடுக்கும்படி
செய்யப்பட்டதோ”

“எவனுடைய
கட்டளையானது
கர்ணனாலேயே
அயல் நாடுகளில்
எல்லாம் பரவச்
செய்யப்பட்டதோ”

“ஆணை
செலுத்துபவனும்
அரசனுமான
எவனுக்குச்
சாஸ்திரங்களில்
சிரமம்
உண்டாகவில்லையோ”

“எவன்
ஐசுவரியத்தினால்
குபேரனையும்
மதிக்காமல்
ஹஸ்தினாபுரத்தில்
இருந்து கொண்டே
ராஜ்யத்தை
நல்ல விதமாகவும்
பகைவர்களே இல்லை
என்று சொல்லும்
வகையிலும் நாட்டை
காத்து வந்தானோ “

“எவனுக்கு ஒரு
மாளிகையினின்று
மற்றொரு
மாளிகைக்குச்
செல்வதற்கும்
அவ்வாறே
தேவாலயப்
பிரதேசத்தில்
செல்வதற்கும்
வழியானது
பொன்னால்
அமைக்கப்
பட்டிருந்ததோ “

“இந்திரனுக்கு
ஒப்பாக
இருப்பவனும்
உயர்ந்த
திறமைசாலியாக
இருப்பவனும்
சிறந்த பலசாலியாக
இருப்பவனும்
வீரத்தின் வடிவமாக
இருப்பவனுமாகிய
எந்தத் துரியோதனன்
ஐராவதத்துக்கு
ஒப்பான
சிறந்த
யானையின் மீது
ஏறிக்கொண்டு
அளவற்ற
செல்வத்தோடு
செல்வானோ “

“அந்தத்
துரியோதனன் தான்
தொடை எலும்பு
உடைக்கப்பட்டதால்
ஏற்பட்ட ரத்தம்
வழிந்தோட தரையில்
படுத்துக் கிடந்தான் “

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 19-07-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-107


                ஜபம்-பதிவு-599
          (அறிய வேண்டியவை-107)

“கதாயுதச் சண்டை
ஆவேசமாக
நடை பெற்றுக்
கொண்டு இருந்தது
சண்டைக் களத்தில்
துரியோதனனின்
ஆதிக்கமே
அதிகமாக இருந்தது
துரியோதனன்
அடித்த ஒவ்வொரு
அடியும் பீமனின் மேல்
இடியென இறங்கியது
அதனைத் தாங்க
முடியாமல் பீமன்
அங்கும் இங்கும்
ஓடினான் - கீழே
விழுந்து
எழுந்து ஓடினான்”

“துரியோதனனுடன்
நேருக்கு நேராக நின்று
கதாயுத சண்டை
போட முடியாமல்
பீமன் தடுமாறிக்
கொண்டிருந்தான்)

அர்ஜுனன் :
“அண்ணன் பயந்து
இது வரை நான்
பார்த்ததே இல்லை
துரியோதனனுடன்
கதாயுத சண்டை
போடும் போது தான்
நான் சின்ன
அண்ணனுடைய
முகத்தில்
பயத்தையே
பார்க்கிறேன்
துரியோதனனின்
அடிகளைத் தாங்க
முடியாமல்
ஓடுவதைப்
பார்க்கிறேன்”

“சின்ன அண்ணாவால்
துரியோதனனை
சமாளிக்க முடியுமா ?
என்று
தோன்றவில்லை
சின்ன அண்ணாவால்
துரியோதனனை
கொல்ல
முடியுமா என்று
தோன்றவில்லை “

“நடக்கும்
சண்டையைப்
பார்க்கும் போது
சின்ன அண்ணன்
துரியோதனனை
வெற்றி கொள்வார்
என்ற நம்பிக்கை
எனக்கு இல்லை”

கிருஷ்ணன் :
“இந்த உலகத்தில்
உள்ள யாராலும்
கதாயுத சண்டையில்
துரியோதனனைக்
கொன்று வெற்றி
பெற முடியாது
என்ற நிலை
இருக்கும் போது
பீமனால்
எப்படி வெற்றி
முடியும் என்று
நான் ஏற்கனவே
சொல்லி இருக்கிறேன் “

அர்ஜுனன் :
“அப்படி என்றால்
சின்ன அண்ணன்
பீமனுடைய நிலை”

கிருஷ்ணன் :
“பீமன் உயிர் பிழைக்க
வேண்டும் என்றால்
அவனுக்கு
அவனுடைய
சாபம் நினைவுக்கு
வர வேண்டும்
துரியோதனனுடைய
தொடையை
உடைத்து
கொள்வேன் என்று
சபதம் ஏற்று
இருக்கிறான்
அல்லவா
அந்த சபதம்
பீமனுடைய
நினைவுக்கு
வர வேண்டும்”

அர்ஜுனன்  :
“கதாயுத சண்டையில்
இடுப்பிற்குக் கீழே
அடிக்கக் கூடாது
என்ற விதி
இருக்கிறது”

கிருஷ்ணன் :
“சண்டை
செய்வதற்கென்று
வகுக்கப்பட்ட
விதிகளை
நினைத்துக்
கொண்டிருந்தால்
பீமனுடைய விதி
முடிந்து விடும்”

“பீமனுடைய விதி
முடியாமல் இருக்க
வேண்டுமானால்
சண்டை
செய்வதற்கென்று
வகுக்கப்பட்ட சில
விதிகளை மீறித்
தான் ஆக வேண்டும்”

“தர்மம் உயிர்
பிழைக்க வேண்டும்
என்றால் அதர்மம்
அழிக்கப்பட்டாகத்
தான் வேண்டும்
அதர்மத்தை
அதர்மத்தால் தான்
அழிக்க வேண்டும்”

“துரியோதனனை
தர்மத்தால் கொல்ல
முடியாது
அதர்மத்தால் தான்
கொல்ல முடியும்
சில தர்மக்
காரியங்கள் நடைபெற
வேண்டுமானால்
அதர்மக்
காரியங்களைப்
பண்ணித் தான்
ஆக வேண்டும்”

“துரியோதனனுடைய
தொடையை
உடைத்து
துரியோதனனைக்
கொல்வேன் என்று
சின்ன அண்ணா
பீமன் எடுத்துள்ள
சபதத்தை சின்ன
அண்ணாவுக்கு
நினைவூட்ட
வேண்டும்”

அர்ஜுனன் :
“அவருக்கு எப்படி
நினைவூட்டுவது”

கிருஷ்ணன்  :
“நான்
நினைவூட்டுகிறேன்”

(துரியோதனனுக்கும்
பீமனுக்கும்
இடையே
மிகவும்
உக்கிரமாக
சண்டை
நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது)


----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 19-07-2020
/////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-106


              ஜபம்-பதிவு-598
        (அறிய வேண்டியவை-106)

கிருஷ்ணன் :
“பெரியண்ணா
துரியோதனன்
சம்மதம் தெரிவித்து
விட்டால் அனைரும்
சம்மதம் தெரிவித்து
விட்ட மாதிரி தான்
கதாயுத சண்டைக்கு
நீங்கள் தான் நடுவராக
இருக்க வேண்டும்
எங்களுடைய
விருப்பத்தை
நீங்கள் தான்
நிறைவேற்ற வேண்டும் “

பலராமர் :
“அப்படியே ஆகட்டும்
கிருஷ்ணா”

துரியோதனன் :
(தர்மரைப் பார்த்து
பேசுகிறான்)

“இந்த இடம் முழுவதும்
இரத்த ஆறாக
இருக்கிறது
சகதி அதிக அளவில்
இருக்கிறது - இந்த
இடம் சண்டை
செய்வதற்கு ஏற்ற
இடம் இல்லை
சண்டை செய்வதற்கு
ஏற்ற இடம்
புகழ் பெற்ற
சமந்த பஞ்சகம்
என்ற இடம்
சமந்த பஞ்சகம்
என்ற இடம்
அந்த இடத்தைப்
புனிதமான இடம்
என்று கூறுவார்கள்
சமந்த பஞ்சகம்
என்ற இடத்திற்கு
சென்று அங்கு
சண்டையிடுவோம்
வாருங்கள் “

பலராமர் :
“சமந்த பஞ்சகம்
இடத்தில் இறந்தால்
இறந்தவர் நிச்சயமாக
சுவர்க்கம் போவார்கள்
நாம் அங்கு செல்வோம் “

(அனைவரும்
தங்கள் தங்கள்
வாகனங்களில்
ஏறிச் சென்றார்கள்
துரியோதனன்
வேட்டையாடக்
கிளம்பும் ஒரு
சிங்கத்தைப் போல
தன்னுடைய
கதாயுதத்தைத்
தன்னுடைய தோளில்
தானே சுமந்து கொண்டு
தன்னந்தனியாக
சிங்கமென நடந்து
சென்று கொண்டிருந்தான்

குருஷேத்திரத்திற்கு
மேற்கு முகமாகவும்
சரஸ்வதி நதிக்குத்
தென் புறமாகவும்
அமைந்துள்ள
சமந்த பஞ்சக மடுவின்
கரையில் உள்ள
புனிதமான இடத்தை
அனைவரும்
அடைந்தார்கள்)

(துரியோதனன்
பலராமரிடம் ஆசி
பெற வருகிறான்
பலராமரின் காலில்
விழுந்து வணங்குகிறான்)

பலராமர் :
“துரியோதனா நீ
என்னுடைய
பிரதம சிஷ்யன்
உன் மேல் எனக்கு
தனிப்பட்ட அன்பு
என்றுமே எனக்கு உண்டு “

“கதாயுத சண்டை
நீ போடும்
போதெல்லாம்
உன்னுடைய
திறமையைக் கண்டு
நான் வியந்து
இருக்கிறேன்
உன்னுடைய
வேகத்தைக்
கண்டு நான்
மலைத்திருக்கிறேன்
உன்னுடைய
பலத்தைக்
கண்டு நான்
பூரிப்படைந்திருக்கிறேன்
இருந்தாலும்
துரியோதானா
நீ என்னுடைய
பிரதம சிஷ்யன்
என்றாலும்
உன் மேல் எனக்கு
தனிப்பட்ட அன்பு
உண்டு என்றாலும்
நீ வெற்றி பெற
வேண்டும் என்ற
ஆசியை என்னால்
வழங்க முடியாது
துரியோதனா ?”

துரியோதனன் :
“தாங்கள் என்னுடைய
கதாயுதச் சண்டையை
காண வந்ததை நான்
பெரும் பாக்கியமாகக்
கருதுகிறேன் – தாங்கள்
வந்ததே எனக்கு
மகிழ்ச்சி “

(பீமன் பலராமரை
வணங்குகிறான்
பலராமர் பீமனை
ஆசிர்வதிக்கிறார்)

பலராமர் :
“பீமா இருவருமே
என்னுடைய
நம்பிக்கைக்குரிய சீடர்கள்
இருவருமே
என்னுடைய
அன்பிற்குரிய சீடர்கள்
இருவருமே
கதாயுத சண்டை
போடுங்கள்
திறமை யாருக்கு
இருக்கிறதோ அவர்
வெற்றி பெறுவார்”

(பஞ்ச பாண்டவர்கள்
பலாரமர் கிருஷ்ணன்
ஆகியோர் சுற்றி
நின்று வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்க
துரியோதனனுக்கும்
பீமனுக்கும்
கடுமையான
கதாயுதச் சண்டை
நடந்து கொண்டிருந்தது
கதாயுதச் சண்டையில்
துரியோதனனின்
கையே ஓங்கி இருந்தது
துரியோதனனின்
திறமையே
வெளிப்பட்டுக்
கொண்டிருந்தது
துரியோதனனின்
பலத்திற்கு
ஈடுகொடுக்க முடியாமல்
பீமன் தடுமாறிக்
கொண்டிருந்தான்)

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 19-07-2020
/////////////////////////////////