July 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-108


                 ஜபம்-பதிவு-600
          (அறிய வேண்டியவை-108)

கிருஷ்ணன் :
“சபாஷ்
அண்ணா சபாஷ் “

(என்று தொடையைத்
தட்டுகிறார்
கிருஷ்ணன்
கிருஷ்ணன் என்ன
சொல்ல வருகிறார்
என்று பீமனுக்கு
புரியவில்லை

தோல்வி அடையும்
நிலையில்
இருக்கிறான் பீமன்
பீமனுடைய
உடலிலிருந்து
உயிரைப் பிரித்து
எடுக்கும்
நோக்கத்துடன்
பீமனுடன்
சண்டையிட்டுக்
கொண்டிருந்தான்
துரியோதனன்
மரணம் பீமனை
நெருங்கிக்
கொண்டிருந்தது

துரியோதனனுடன்
சண்டையிட
முடியாமல் பீமன்
உயிருக்காகப்
போராடிக்
கொண்டிருப்பதை
அங்குள்ள
அனைவரும்
கண்டார்கள் அந்த
சமயத்தில் மீண்டும்
கிருஷ்ணன் )

கிருஷ்ணன் :
“சபாஷ்
அண்ணா சபாஷ்”

(தன்னுடைய
தொடையைத்
தட்டி சொன்னார்
கிருஷ்ணன்)

(கிருஷ்ணன் காட்டிய
செய்கையின் அர்த்தம்
பீமனுக்கு இப்போது
தான் புரிந்தது
கதாயுதத்தால்
துரியோதனனுடைய
தொடையை
உடைக்க
நேரம் பார்த்துக்
கொண்டிருந்தான்

துரியோதனன் தாவி
மேலே எழும்
போது பீமன்
துரியோதனனுடைய
தொடையை
கதாயுதத்தால்
அடித்தான்
துரியோதனனுடைய
தொடை எலும்பு
உடைந்து இரத்தம்
கொட்டியது)

துரியோதனன்  
நிற்க முடியாமல்
மண்ணில் சாய்ந்தான்)

“எவனால் ஆயிரம்
ரத்னங்களால்
இழைத்த
கிரீடங்களுடன்
கூடியவர்களான
பட்டாபிஷேகம்
செய்யப்பெற்ற
மன்னர்களிடமிருந்து
கப்பம் முழுவதும்
வாங்கப்பட்டுத்
தன்னுடைய
அரண்மனைக்கு
கொண்டு
வரப்பட்டதோ”

“எவன் நிமித்தமாக
முற்காலத்தில்
கர்ணன் ஒருவனால்
நான்கு
சமுத்திரங்களையும்
கடைசி
எல்லையாகக்
கொண்டதும்
ரத்தினங்களால்
அலங்கரிக்கப்
பட்டதுமான
பூமியை கப்பம்
கொடுக்கும்படி
செய்யப்பட்டதோ”

“எவனுடைய
கட்டளையானது
கர்ணனாலேயே
அயல் நாடுகளில்
எல்லாம் பரவச்
செய்யப்பட்டதோ”

“ஆணை
செலுத்துபவனும்
அரசனுமான
எவனுக்குச்
சாஸ்திரங்களில்
சிரமம்
உண்டாகவில்லையோ”

“எவன்
ஐசுவரியத்தினால்
குபேரனையும்
மதிக்காமல்
ஹஸ்தினாபுரத்தில்
இருந்து கொண்டே
ராஜ்யத்தை
நல்ல விதமாகவும்
பகைவர்களே இல்லை
என்று சொல்லும்
வகையிலும் நாட்டை
காத்து வந்தானோ “

“எவனுக்கு ஒரு
மாளிகையினின்று
மற்றொரு
மாளிகைக்குச்
செல்வதற்கும்
அவ்வாறே
தேவாலயப்
பிரதேசத்தில்
செல்வதற்கும்
வழியானது
பொன்னால்
அமைக்கப்
பட்டிருந்ததோ “

“இந்திரனுக்கு
ஒப்பாக
இருப்பவனும்
உயர்ந்த
திறமைசாலியாக
இருப்பவனும்
சிறந்த பலசாலியாக
இருப்பவனும்
வீரத்தின் வடிவமாக
இருப்பவனுமாகிய
எந்தத் துரியோதனன்
ஐராவதத்துக்கு
ஒப்பான
சிறந்த
யானையின் மீது
ஏறிக்கொண்டு
அளவற்ற
செல்வத்தோடு
செல்வானோ “

“அந்தத்
துரியோதனன் தான்
தொடை எலும்பு
உடைக்கப்பட்டதால்
ஏற்பட்ட ரத்தம்
வழிந்தோட தரையில்
படுத்துக் கிடந்தான் “

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 19-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment