March 06, 2012

இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-ஒழுக்கத்தின்-பதிவு-20




               இயேசு கிறிஸ்து-திருவள்ளுவர்-ஒழுக்கத்தின்-பதிவு-20  
   
                        “”பதிவு இருபதை விரித்துச் சொல்ல
                                                            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :

ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று.
                                                                   ------மத்தேயு - 5 : 28

ஆண் இனம் பெண்களை ,
அடிமை நிலையில் வைத்திருக்கிறது ;
அறியாமைச் சேற்றில் சிக்கி வைத்திருக்கிறது ;
முன்னேற்றத்தை தடுத்து வைத்திருக்கிறது ;
மூடநம்பிக்கையில் முக்கி வைத்திருக்கிறது ;
அறிவை சிதைத்து வைத்திருக்கிறது ;
அன்பு என்ற ஆயுதத்தால் அடக்கி வைத்திருக்கிறது ;
கருணை என்ற வார்த்தையால் கட்டி வைத்திருக்கிறது ;
பாசக் கயிற்றால் பிணைத்து வைத்திருக்கிறது ;
உறவுகள் மூலம் பிணைத்து வைத்திருக்கிறது ;
கட்டுப்பாடுகள் மூலம் சிறை வைத்திருக்கிறது ;
சுதந்திர காற்றை சுவாசிக் விடாமல் சிறையில் பூட்டி வைத்திருக்கிறது ;

என்ற விமர்சனங்கள் காலம் காலமாக
தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது .

ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்
யாரும் , யாரையும் அடிமைப் படுத்தவும் முடியாது .
யாரும் , யாருக்கும் அடிமையாக இருக்கவும் முடியாது .

நாமாக அடிமையாக மாறினால் ஒழிய ,
யாரும் நம்மை அரசாள முடியாது .

நாம் அடிமையாக இருந்தால் ஒழிய ,
யாரும் நம்மேல் ஏறி மிதிக்க முடியாது .

அடிமை நெஞ்சம் நம் மனதில் இருந்தால் ஒழிய ,
ஆளும் நெஞ்சம் மற்றவர்  மனதில் உதிக்க முடியாது .

அடிமை வர்க்கம் இருந்தால் ஒழிய ,
ஆளும் வர்க்கம் உருவாக முடியாது .

நம்மை நாமே தாழ்த்திக் கொண்டால் ஒழிய ,
யாரும் நம்மை தாழ்த்த முடியாது .

நாமே சுதந்திரக் காற்றை சுவாசிக்க மறுத்தால் ஒழிய ,
யாரும் நம்முடைய சுதந்திரக் காற்றைத் தடுக்க முடியாது .

நம்முடைய அறியாமை தான் நம்மை அடிமைப் படுத்துமே ஒழிய ,
எந்த அறிவும் நம்மை அடிமைப் படுத்த முடியாது .

நம்முடைய இயலாமை தான் நம்மை அடிமைப்படுத்துமே ஒழிய ,
யாருடைய விழிப்புணர்வும் நம்மை அடிமைப் படுத்த முடியாது.

நம்முடைய கடமைகளாகிய கடன்கள் தான்
நம்மை அடிமைப்படுத்துமே ஒழிய ,
யாருடைய சிந்தனையும் நம்மை அடிமைப்படுத்த முடியாது .

நாமே அடிமையாக இருந்தால் ஒழிய ,
நம்மை நாமே தாழ்த்திக் கொண்டால் ஒழிய ,
நம்மை நாமே அடிமைப்படுத்திக் கொண்டால் ஒழிய ,
யாரும் நம்மை அடிமையாக்க முடியாது .
அடிமையாக வைத்திருக்கவும் முடியாது .

பெண் இனத்தை அடிமையாக்கியது இச்சமுதாயம் தான் .
பெண்களை அடிமை நிலையில் வைத்திருப்பதும் இச்சமுதாயம் தான் .


பெண் குழந்தை பிறந்த போது ,
தாயின் அன்புச் சிறையில் அடிமையாகிறாள் !

வளரும் போது ,
தந்தையின் கட்டுப்பாட்டுச் சிறையில் அடிமையாகிறாள் !

பருவம் வந்த போது ,
சகோதரனின் கண்காணிப்புச் சிறையில் அடிமையாகிறாள் !

வேலை நிமித்தம் வெளியில் செல்லும்போது ,
அடக்கம் என்ற சிறையில் அடிமையாகிறாள் !

அலுவகத்தில் பணிபுரியும் போது ,
அமைதியானவள் என்ற சிறையில் அடிமையாகிறாள் !

நான்கு பேர்  பேசி செயல்படும் இடத்தில் ,
பொறுமையானவள் என்ற சிறையில் அடிமையாகிறாள் !


உறவினர்கள் மத்தியில் செயல்படும்போது ,
நிதானம் என்ற சிறையில் அடிமையாகிறாள் !

திருமணம் ஆன பிறகு ,
கணவனின் கவனிப்புச் சிறையில் அடிமையாகிறாள் !

மனைவியாக மாறும்போது ,
கற்பு என்ற சிறையில் அடிமையாகிறாள் !

மனைவியாக மாறும்போது சமுதாய கோட்பாட்டுக்குள் ,
பத்தினி என்ற சிறையில் அடிமையாகிறாள் !

குழந்தை பெற்று தாயாக மாறும்போது ,
தாய் என்ற கருணைச் சிறையில் அடிமையாகிறாள் !

மருமகள் ஆனதால் மாமனார்  , மாமியார் ,
கண்டிப்புச் சிறையில் அடிமையாகிறாள் !

மருமகள் ஆனதால் கணவனின் சகோதர, சகோதரிகளின் ,
உறவுச் சிறையில் அடிமையாகிறாள் !

மருமகள் ஆனதால் கணவர்  உறவுகளிடையே ,
ஒழுக்கச் சிறையில் அடிமையாகிறாள் !

மகனுக்கு திருமணம் செய்து வைப்பதால் ,
மாமியார் என்ற சிறையில் அடிமையாகிறாள் !

பேரக்குழந்தைகளைப்  பெறும் போது ,
பாட்டி என்ற சிறையில் அடிமையாகிறாள் !

பெண்ணைச் சுற்றியுள்ள
பந்தங்களும் , சொந்தங்களும் , உறவுகளும் - தான்
பெண்ணை அடிமைப்படுத்துகிறதே ஒழிய ,
தனிப்பட்ட ஆண்சமுதாயம்
பெண்ணை அடிமைப்படுத்துவது இல்லை
அடிமைப்படுத்தவும் முடியாது .


சமுதாயம் திருந்தினால் ஒழிய ,
சமுதாயம் சீர்பெற்றால் ஒழிய ,
சமுதாயம் தன்னை திருத்திக் கொண்டால் ஒழிய ,
சமுதாயக் கோட்பாடுகள் தகர்க்கப் பட்டால் ஒழிய ,
பெண் இனம் அடிமை நிலையிலிருந்து விடுபட முடியாது .
பெண்கள் அடிமை நிலையை விட்டு மீள முடியாது .


சமுதாயத்தில் பெண்களின் நிலையையும்
பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமையையும் கருத்தில் கொண்டு
பெண்களின் மேல் மதிப்பு கொண்ட
பெண்களின் மேல் மரியாதை கொண்ட - இயேசு
பெண்ணின் மதிப்பை உயர்த்தும் வகையில்
மிகவும் மதிக்கத்தக்க உயர்வான கருத்தை
தன்னகத்தே கொண்ட வசனத்தை
உயர்வான பெண்ணை உவமையாக்கி சொல்லும் போது
ஆழமான கருத்தை இந்த அவனியில் உள்ள
மக்களின் மனதில் விதைக்கிறார்  இயேசு .


ஒரு பெண்ணை இச்சை கொண்ட பார்வையுடன் பார்க்கும் போதே ;
விழிகளால் காணும் போதே ;
புறக்கண்களால் அவளை நோக்கும் போதே ;
பார்வைகளால் அவளை துளைக்கும் போதே ;
ஆசைக் கண்களால் அவளை விழுங்கும் போதே ;
காமக் கண்களால் அவளை அரிக்கும் போதே ;
இருதயத்தால் அவளுடன் விபச்சாரம் செய்தவனாகிறான் .

உன் எண்ணம் தவறாக இருந்தால் ;
உன் எண்ணம் தவறான நோக்கத்துடன் இருந்தால் ;
உன் எண்ணம் தவறான பார்வையுடன் இருந்தால் ;
உன் எண்ணம் தவறான முறையைக் கொண்டதாக இருந்தால் ;
உன் எண்ணம் தவறான செயலை உடையதாக இருந்தால் ;
உன் எண்ணம் தவறான வழியை பின்பற்றுவதாக இருந்தால் ;

அது உன் அகத்தை களங்கப்படுத்தி விடும் .
ஒரு தவறான எண்ணத்தை எண்ணினாலே போதும்
அது பாதி பாவம் செய்ததற்கு சமமாகி விட்டது .
அதை செயல்படுத்தினால் முழு பாவமாகி
களங்கத்தை ஏற்படுத்துகிறது .

ஆகவே ஒருவரை கெடுக்க வேண்டும் என்றோ ?
தவறுகளை செய்ய வேண்டும் என்றோ ?
தீயவைகளை செயல்படுத்த வேண்டும் என்றோ ?
கெடுதல்களை உண்டாக்க வேண்டும் என்றோ ?
அழிவுகளை உருவாக்க வேண்டும் என்றோ ?
நினைக்கும் அளவிலோ அதை செயல்படுத்தியவனாகிறான் .

அதற்குரிய பாவத்தின் பாதி பலனை
உடனடியாக பெற்றவனாகி விடுகிறான்

ஒரு தவறான செயலை செயல்படுத்தினால்
தான் பாவம் உண்டாகும் என்பது கிடையாது
அந்த தவறான செயலை நினைத்தாலே பாதி பாவம் வந்து விடும்
ஆகவே நல்லதே நினைக்க வேண்டும் என்கிறார்  இயேசு.



திருவள்ளுவர் :

           “”“ஒழுக்கத்தின் எய்துவர்  மேன்மை இழுக்கத்தின்
                 எய்துவர்  எய்தாப் பழி””
                                         ------திருவள்ளுவர்------திருக்குறள்----

           மலர்  கண்டேன் ;
           மலரின் இதழ் கண்டேன் ;
           இதழின் அழகு கண்டேன் ;
           அழகில் ஆசை கண்டேன் ;
           ஆசையில் சொர்க்கம் கண்டேன் ;
           சொர்க்கத்தில் இன்பம் கண்டேன் ;
           இன்பத்தின் பொருள் கண்டேன் ;
           பொருளின் பலன் கண்டேன் ;
           பலனின் விளைவு கண்டேன் ;
           விளைவின் துன்பம் கண்டேன் ;
           துன்பத்தின் முடிவு கண்டேன் ;
           முடிவின் தொடக்கம் கண்டேன் ;
           தொடக்கத்தில் அன்பு கண்டேன் ;
            அன்பின் தடை கண்டேன் ;
          தடையின் எல்லை கண்டேன் ;
          எல்லையின் வேற்றுமை கண்டேன் ;
          வேற்றுமையின் அர்த்தம் கண்டேன் ;
          அர்த்தத்தின் ஆழம் கண்டேன் ;
          ஆழத்தில் ஒளி கண்டேன் ;
          ஓளியின் தெளிவு கண்டேன் ;
          தெளிவின் அடக்கம் கண்டேன் ;
          அடக்கத்தில் உயர்வு கண்டேன் ;
          உயர்வின் எழுச்சி கண்டேன் ;
          எழுச்சியின் இலக்கணம் கண்டேன் ;
          இலக்கணத்தின் இறுதி கண்டேன் ;
          இறுதியில் வாழ்க்கையைக் கண்டேன் ;

வாழ்க்கையில் தெளிவு பெற்று ,
வாழ்க்கையில் அறிவு விளக்கம் பெற்று ,
வாழ்க்கையில் சிந்தனை துhண்டப் பெற்று ,
வாழ்க்கையில் அனுபவத்தின் தன்மைகளை தன்னுள் பெற்று ,

எண்ணம் , சொல் , செயலால்
தனக்கோ ,பிறர்க்கோ  , குடும்பத்தார்க்கோ , உடன்பிறந்தவர்களுக்கோ ;
உறவினர்களுக்கோ , சுற்றத்தாருக்கோ , சமுதாயத்திற்கோ ;
தற்காலத்திலோ , பிற்காலத்திலோ  ; உடலுக்கோ , உயிருக்கோ ;
துன்பம் ஏற்படாத வண்ணம் சிந்தித்து ,
மனம் வாடா வண்ணம் சொற்களை உபயோகப்படுத்தி ,
மனவேறுபாட்டை உண்டாக்காத செயல்களை செயல்படுத்தி ,

ஒழுக்க நெறி தவறாது வாழும்போது
சமுதாயத்தில் உயர்வும்
அனைவரிடத்தில் மேன்மையும்
புண்ணியத்தின் பலனும்  நமக்குக் கிடைக்கும் .



நான் என்னும் ஆணவத்தின் உச்சியில் இருந்து கொண்டு ,
அதிகார மமதையில் உழன்று கொண்டு ,
சுயநலத்திற்காக சுரண்டல் வேலை செய்து கொண்டு ,
தான் வாழ பிறர்  வாழ்வை அழித்துக் கொண்டு ,
நம்பி வந்தவரை நட்டாற்றில் தவழ வைத்துக் கொண்டு ,
பணத்திற்காக தகாத செயல்கள் செய்து கொண்டு ,
கன்னியரின் கற்பை சூறையாடிக் கொண்டு ,
தாயை மதிக்காமல் தகாத செயல்கள் செய்து கொண்டு ,
தந்தை சொல் கேளாமல் நடந்து கொண்டு ,
ஆசானை மதிக்காமல் செயலாற்றிக் கொண்டு ,
நட்பிற்கு துரோகம் செய்து கொண்டு ,
உயிர்களுக்கு துன்பம் அளித்துக் கொண்டு ,
வார்த்தைகளால் இளகிய மனங்களை
வருத்தத்தால் அழ வைத்துக் கொண்டு ,
தான் உயர மற்றவரை வளர விடாமல தடுத்துக் கொண்டு ,
பஞ்சமா பாதகங்களை பயமில்லாமல் செய்து கொண்டு ,

தீய எண்ணத்தால் பாவத்தை விதைத்து  ;
தீய சொற்களால் பாவத்தை வளர்த்து ;
தீய செயல்களால் பாவத்தை அறுவடை செய்து  ;

ஒழுக்க நெறி தவறி வாழ்பவரின் வாழ்க்கையானது
இழிந்த நிலைக்கு தள்ளப்படுகிறது ;
விமர்சனத்திற்கு உள்ளாக்கப் படுகிறது ;
மானம் மதிப்பிழக்கப் படுகிறது ;
கௌரவம் எரிக்கப்படுகிறது ;
ஏச்சுக்கள் எழுப்பப் படுகிறது ;

வாழ்க்கை சமுதாயத்தில் தீர்க்க முடியாத
பழி நிலைக்கு உட்படுகிறது .

ஒழுக்க நெறி தவறி வாழ்பவரின் வாழ்க்கையானது
சமுதாயத்தின் பாவச் சின்னமாக கருதப்படுகிறது .


எண்ணம் , சொல் , செயலால் ஒழுக்கத்தை கடைபிடித்து
ஒழுக்க நெறியில் வாழும் போது
புண்ணிய பலன்களை சேர்த்து
உயர்வான நிலையை அடைவார்
உயர்ந்த நிலைக்கு உயர்த்தப் படுவார்

எண்ணம் , சொல் , செயலால்  ஒழுக்க நெறி தவறி
ஒழுக்க நெறியில் வாழாத போது
பாவத்தின் சம்பளத்தைப் பெற்று
தீர்க்க முடியாத பழிச்செயலுக்கு
உட்பட்டு தாழ்ந்த நிலையை அடைவார் .
தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படுவார் .
என்கிறார்  திருவள்ளுவர் .



இயேசு கிறிஸ்து - திருவள்ளுவர் :
இயேசு , ஒருவன் தவறான செயலை நினைக்கும் போதே
ஒழுக்கம் தவறியவன் ஆகிறான் என்கிறார் .


அவ்வாறே ,
திருவள்ளுவரும்  , எண்ணம் ,சொல் , செயலால் ஒருவன்
தவறானவைக்கு உட்படும் போது ஒழுக்கம் தவறியவன் ஆகிறான்
என்கிறார் .


                              ”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                          போற்றினேன் பதிவுஇருபது  ந்தான்முற்றே “”