Showing posts with label பட்டினத்தார். Show all posts
Showing posts with label பட்டினத்தார். Show all posts

March 10, 2024

பட்டினத்தார்-(15)-எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம்இவை அத்தனையும் மண் தின்பதல்லவோ-10-03-2024

 பட்டினத்தார்-(15)-எத்தனை நாள்கூடி எடுத்த சரீரம்இவை அத்தனையும் மண் தின்பதல்லவோ-10-03-2024

அன்பிற்கினியவர்களே!

ஜீவாத்மாவை

பரமாத்மாவுடன்

இணைத்து முக்தி அடையும் போது

உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும்

பிரிந்து பிரபஞ்சத்தில் உள்ள

இறைவனுடன் இரண்டறக்

கலந்து இறைவனாகவே

மாறி விடும்

ஆனால்,

பட்டினத்தார்

முக்தி அடையும் போது

அணுக்களை பிரிக்காமல்

அணுக்களை ஒன்றாக

இணைத்து

சிவலிங்கமாக மாறி

உருஅருவ நிலையில்

இருப்பவர்

வெளியே

சிவலிங்க வடிவில்

உருவமாகவும்,

உள்ளே

பட்டினத்தாருடைய

ஜீவாத்மாவும்,

பரமாத்மாவும்

அருவ வடிவிலும்

அருஉருவ வடிவில்

இருக்கும்

பட்டினத்தாரை

வணங்குவோம்

அவருடைய

ஆசியை பெறுவோம்

நன்றி,

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

-------10-03-2024

-------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////

March 06, 2024

பட்டினத்தார்-(13)-இருப்பது பொய் போவது மெய்யென்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை எண்ணாதே-06-03-2024

பட்டினத்தார்-(13)-இருப்பது பொய் போவது மெய்யென்றெண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை எண்ணாதே-06-03-2024

அன்பிற்கினியவர்களே!

இந்த உலகத்தில் மூன்றே

மூன்று பேர்கள் தான்

வாழ்கிறார்கள்

நல்லவர்கள்

கெட்டவர்கள்

நல்லவர்கள் போல் நடிப்பவர்கள்

எவ்வளவு

பிரச்சினைகள் வந்தாலும்

கஷ்டங்கள் வந்தாலும்

துன்பங்கள் வந்தாலும்

நல்லவர்கள் வாழ

முடியும்

எப்படி என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

நன்றி,

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

-------06-03-2024

-------புதன் கிழமை

///////////////////////////////////////////////

March 04, 2024

பட்டினத்தார்-(12)-இப்பிறப்பை நம்பி இருப்பாரோ நெஞ்சகமே-04-03-2024

 பட்டினத்தார்-(12)-இப்பிறப்பை நம்பி இருப்பாரோ நெஞ்சகமே-04-03-2024

அன்பிற்கினியவர்களே!

நாய்கள் குரைப்பதை

கேட்காதே

நாய்கள் குரைப்பதை

கேட்டால் எப்படி
தூக்கம் என்பது

வராதோ

அதைப்போல்

நம்மைச் சுற்றி

இருப்பவர்கள்

நம்மைப்பற்றி

தவறாகச்

சொல்பவைகளைக்

கேட்டுக் கொண்டு

இருந்தால்

நிம்மதி என்பது

போய்விடும்

நம்மால் நிம்மதியாக

வாழ முடியாது

என்பதை

பட்டினத்தார்

இப்பிறப்பை என்ற

பாடலின் மூலம்

எவ்வாறு

தெளிவுபடுத்துகிறார்

என்பதைப்பற்றிப்

பார்ப்போம்

நன்றி,

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

-------04-03-2024

-------திங்கட் கிழமை

///////////////////////////////////////////////

March 02, 2024

பட்டினத்தார்-(11)-பட்டினத்தாருக்கு முன்பே பத்திரகிரியாருக்கு கிடைத்த முக்தி-02-03-2024

பட்டினத்தார்-(11)-பட்டினத்தாருக்கு முன்பே பத்திரகிரியாருக்கு கிடைத்த முக்தி-02-03-2024

அன்பிற்கினியவர்களே!

பட்டினத்தாரின்

சீடர் பத்திரகிரியார்

பட்டினத்தாருக்கு முன்பே

முக்தி அடைந்தவர்

குருவுக்கு முன்பே

சீடனுக்கு எப்படி

முக்தி கிடைத்தது

என்பதைப் பற்றித்

தெரிந்து கொள்வோம்.

நன்றி,

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

-------02-03-2024

-------சனிக்கிழமை

///////////////////////////////////////////////

February 29, 2024

பட்டினத்தார்-(10)-ஞானம் அடைந்தவர்கள் பிச்சை எடுக்கக் கூடாது-29-02-2024

பட்டினத்தார்-(10)-ஞானம் அடைந்தவர்கள் பிச்சை எடுக்கக் கூடாது-29-02-2024

அன்பிற்கினியவர்களே!

புத்த மதத்திலும்,

ஜைன மதத்திலும்,

பிச்சை எடுப்பது

முக்கியமான ஒன்றாக

வலியுறுத்தப்பட்டது

பிச்சை எடுப்பது

அவ்வளவு எளிதான

ஒன்றல்ல

அனைவராலும்

பிச்சை எடுக்க முடியாது

பணம் பதவி அதிகாரம்

படைத்தவர்கள்

பிச்சை எடுப்பதின் மூலம்

ஆணவம் அழியும்

என்பதையும்,

இந்த உலகம் அழியக்கூடியது

என்பதையும்,

எல்லாம் மாயை

என்பதையும்,

உணர்ந்து கொள்ள வேண்டும்

என்பதற்காக

பிச்சை எடுக்க வேண்டும்

என்பது முக்கியமான

ஒன்றாக வலியுறுத்தப்பட்டது

ஆனால் இப்போது

உள்ள மதங்கள்

தங்கள் மதம் தான்

உயர்ந்தது என்பதையும்,

தங்கள் கடவுள் தான்

உயர்ந்தது என்பதையும்,

ஆணவத்தோடு

வலியுறுத்துவதால்

மனிதத் தன்மை

இறந்து போய்

மதவெறி மேலோங்கி

நிற்கிறது

பிச்சை யார் எடுக்க

வேண்டும் என்பதையும்

யார் எடுக்கக் கூடாது

என்பதையும்

பட்டினத்தார்

வாழ்க்கை மூலம்

தெரிந்து கொள்ளலாம்

நன்றி

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

-------29-02-2024

-------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////

February 27, 2024

பட்டினத்தார்-(9)-ஆவியோடு காயம் அழிந்தாலும், மேதினியில் பாவியென்று நாமம் படையாதே-27-02-2024

 பட்டினத்தார்-(9)-ஆவியோடு காயம் அழிந்தாலும், மேதினியில் பாவியென்று நாமம் படையாதே-27-02-2024

அன்பிற்கினியவர்களே!

நாம் செத்த பிறகு

நம்முடைய பிணத்தைப் பார்த்து

அழுவதற்கு நான்கு பேராவது

வர வேண்டும் என்று

சொல்வது தவறானது

நாம் செத்த பிறகு

நான்கு பேர் வந்தால் என்ன

நான்காயிரம் வேர் வந்தால் என்ன

நான்கு லட்சம் பேர் வந்தால் என்ன

பிணத்திற்கு ஒன்றும் தெரியாது

இருக்கும் போது நமக்கு

உதவிகள் செய்ய

எத்தனை பேர்கள்

வந்தார்கள் என்பது

தான் முக்கியம்

அதற்கு ஆட்கள்

சேர்க்க வேண்டும்

எப்படி என்பதைப்

பட்டினத்தார் பாடல்

மூலம் தெரிந்து

கொள்ளலாம்

நன்றி

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

-------27-02-2024

-------செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////

February 25, 2024

பட்டினத்தார்-(8)-பத்திரிகிரியாருக்கு ஞான தீட்சை அளித்த பட்டினத்தார்-25-02-2024

 பட்டினத்தார்-(8)-பத்திரிகிரியாருக்கு ஞான தீட்சை அளித்த பட்டினத்தார்-25-02-2024

அன்பிற்கினியவர்களே!

பத்திரிகிரியாரை சீடனாக

ஏற்றுக் கொண்ட

பட்டினத்தார்

பத்திரிகிரியாருக்கு

ஞான தீட்சை

அளித்தார்

தீட்சை மூன்று

வகைப்படும்

ஸ்பரிச தீட்சை

சட்சு தீட்சை

ஞான தீட்சை

இவைகள் என்ன

இதன் அர்த்தம்

என்ன

இந்த தீட்சைகளை

எப்படி கொடுக்க

வேண்டும்

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

நன்றி

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

-------25-02-2024

-------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////