October 02, 2019

பரம்பொருள்-பதிவு-67


             பரம்பொருள்-பதிவு-67

“திருதராஷ்டிரன்
தர்மரை அழைத்தான்
மகனே! நீ உன்
தம்பிகளுடன்
காண்டவபிரஸ்தம்
நகருக்கு சென்று
அங்கே போய்
தங்கியிரு என்றான் “

“திருதராஷ்டிரனின்
கோரிக்கையை
உத்தரவாகவே
ஏற்றுக் கொண்டு
தர்மர் தன்
தம்பிகளுடன்
காண்டவபிரஸ்தம்
சென்று தங்கி
இருக்க முடிவு
செய்தான்”
       
“ஆனால் தர்மருக்கு
காண்டவபிரஸ்தம்
சென்று எப்படி
தங்குவது என்ற
யோசனை எழுந்தது ;
ஏனென்றால்
காண்டவபிரஸ்தம்
காட்டுப் பகுதியில்
இருந்தது ; ”

“அந்த ஊரே
பாழடைந்து
போய் விட்டதால்
மக்கள் யாரும்
அங்கு வசிக்கவில்லை. ;
மனிதர்கள் யாரும்
வசிக்கக்கூடிய
இடமாக
காண்டவபிரஸ்தம்
இல்லை ;”

“திருதராஷ்டிரன்
வார்த்தையை
மறுக்கக்கூடாது
என்ற காரணத்திற்காக
தர்மர் ஒன்றுக்கும்
உதவாமல் இருந்த
காண்டவபிரஸ்தம்
நகருக்கு தன்
தம்பிகளுடன்
வசிப்பதற்காக
புறப்பட்டார்”

“தர்மர் தன்
தம்பிகளுடன்
காண்டவபிரஸ்தம்
செல்வதைக் கேள்விபட்ட
பரம்பொருளான
கிருஷ்ணரும்
உடன் சென்றார்”

“காண்டவபிரஸ்தம்
சென்றவுடன்
கிருஷ்ணர்
விஸ்வகர்மாவையும் ;
இந்திரனையும் ;
அழைத்தார்.
அவர்கள் இருவரும்
நேரில் வந்து
கிருஷ்ணரை
வணங்கி நின்றனர் “

“கிருஷ்ணர்
அவர்களை நோக்கி
இந்த காட்டை
அழித்து
இந்த உலகமே
இதுவரை
பார்த்திராத வகையில்
உலக மக்கள்
அனைவரும்
அதிசயிக்கத்தக்க
விதத்தில்
அழகிய நகரத்தை
உருவாக்கிக்
கொடுங்கள் ;
மூன்று உலகங்களிலும்
இப்படி ஒரு
நகரம் இல்லை
என்று அனைவரும்
புகழக்கூடிய
அழகிய நகரத்தை
உருவாக்கிக்
கொடுங்கள் ;
இனி இது போல்
ஒரு நகரத்தை
யாராலும் உருவாக்க
முடியாது என்று
உலகமே வியக்கும்
வகையில் அழகிய
நகரத்தை
உருவாக்கிக்
கொடுங்கள் ;
என ஆணையிட்டார்
பரம்பொருளான
கிருஷ்ணர்”

“இந்திரன்
மேற்பார்வையில்
விஸ்வகர்மா
காண்டவபிரஸ்தம்
நகரை முற்றிலும்
அடையாளம்
தெரியாத ஒரு
அழகிய நகரமாக
மாற்றி விட்டார்”

“காண்டவபிரஸ்தம்
நகரம் முழுவதும்
தங்கத்தாலேயே
கட்டப்பட்டிருக்கிறது
என்று சொல்லத்தக்க
வகையில் எங்கு
பார்த்தாலும்
தங்கத்தாலான
மாடமாளிகைகள்,
அழகிய அரண்மனைகள்,
பெரிய மதில்கள்,
தோரண வீதிகள்,
பூஞ்சோலைகள்
தடாகங்கள் என
அழகாகவும்
அருமையாகவும்
காண்போர்
வியக்கும் வண்ணம்
அமைக்கப்பட்டிருந்தது
காண்டவபிரஸ்தம்
நகரம்”

“இரவு நேரத்தில் கூட
காண்டவபிரஸ்தம்
நகரம் ஜொலித்தது ;

“காண்டவபிரஸ்தம்
நகரத்தின் அழகை
வார்த்தைகளால்
கூட வர்ணிக்க
முடியாது என்றால்
எத்தகைய
கலைநயத்துடன்
காண்டவபிரஸ்தம்
நகரம்
அமைக்கப்பட்டிருக்கும்
என்பதை உணர்ந்து
கொள்ளுங்கள்”

“இந்திரனின்
மேற்பார்வையில்
கட்டப்பட்டதால்
அந்த நகருக்கு
இந்திரபிரஸ்தம்
என்று பெயர்
சூட்டினர்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
------------02-10-2019
//////////////////////////////////////////////////////////