February 05, 2019

திருக்குறள்-பதிவு-98


                       திருக்குறள்-பதிவு-98

(பெல்லரமினோ
கார்டினல் சார்டோரி
அவர்களை நேரில்
சந்திப்பதற்காக
வந்த போது
பெல்லரமினோ
கார்டினல் சார்டோரி
அவர்களின் காலில்
விழுந்து வணங்கினார்.
கார்டினல் சார்டோரி
வேண்டாம் வேண்டாம்
எழுந்திரு என்றார்)

கார்டினல் சார்டோரி :
“ ஜியார்டானோ புருனோ
விசாரணை குறித்து
தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்
சந்தேகங்களை தீர்த்துக்
கொள்வதற்காகத் தான்
தாங்கள் இங்கு
வந்திருக்கிறீர்கள்………………..?
என்று நினைக்கிறேன். “

பெல்லரமினோ :
“ பல்வேறு பிரச்சினைகளை
தொடர்ந்து ஏற்படுத்திக்
கொண்டே இருக்கும்
ஜியார்டானோ புருனோவின்
விசாரணை குறித்து
கலந்து ஆலோசிக்கவே
நான் இங்கு வந்தேன். “

கார்டினல் சார்டோரி :
“ ஜியார்டானோ புருனோவைப்
பற்றி நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்………………………..? “

பெல்லரமினோ :
“ ஜியார்டனோ புருனோ
தத்துவம், வானியல்,
மருத்துவம், இயற்கை
அறிவியல், இறையியல்,
The Art of Memory
என்று கணக்கில்
அடங்காத துறைகளில்
அளவிட முடியாத
விசாலமான அறிவைப்
பெற்றிருக்கிறார் ; “

“ அவர் தடம் பதிக்காத
துறைகளே இல்லை
என்று சொல்லும்
அளவிற்கு பரந்த
ஞானத்தைப்
பெற்றிருக்கிறார் ;”

“ ஐரோப்பா கண்டம்
முழுவதும் மக்களால்
அறிந்து வைத்திருக்கக்கூடிய
ஒரு பிரபலமான
மனிதராக இருக்கிறார் ;”

“ தன்னுடைய
எழுத்தாலும்
பேச்சாலும் உலகில்
உள்ள மக்கள்
அனைவரையும்
வசியப்படுத்தி
வைத்திருக்கிறார் ; “

 “ அனைத்தையும் இழந்து
விட்டாலும் தன்னுடைய
கொள்கைக்காக
தன்னுடைய உயிரையும்
இழப்பதற்கு தயாராக
இருக்கும் மனஉறுதி
படைத்தவராக இருக்கிறார் ; “

“ எத்தகைய
சித்திரவதையையும்
தாங்கக் கூடிய
அளவிற்கு மனோதிடம்
கொண்ட அவரை
காணும் போது
எனக்கே சிலசமயங்களில்
சந்தேகம் வந்து விடுகிறது
இவர் மனிதரா என்று…….? “

“ உண்மையைச்
சொல்வதென்றால் இவர்
மனிதரில் வித்தியாசமானவர் ; “

“ இத்தகைய ஒரு
மனிதருக்கு தண்டனை
வழங்குவது என்பது
சாதாணமான விஷயமாக
எனக்கு தெரியவில்லை ;
அதுவும் அவரை உயிரோடு
எரித்து கொல்வது என்பது
நடைமுறைக்கு
சாத்தியமா என்று
எனக்கு புரியவில்லை. “

கார்டினல் சார்டோரி :
“ நமக்கு எதிராக நின்று
கொண்டு நம்மை எதிர்க்கும்
எதிரியின் திறமையை
சரியாக மதிப்பீடு செய்யத்
தெரியவில்லை என்றாலும்
நாம் தோற்று விடுவோம் ;
நம்முடன் இருந்து
கொண்டே
நம்மை எதிர்க்கும்
எதிரியின் திறமையை
சரியாக மதிப்பீடு செய்யத்
தெரியவில்லை என்றாலும்
நாம் தோற்று விடுவோம் ; “

“ எதிரில் இருக்கும்
எதிரியை விட
நம்முடன் இருக்கும்
எதிரி மிகவும்
ஆபத்தானவன். “

“ ஜியார்டானோ புருனோ
நம்முடன் இருக்கும் எதிரி ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் மத
நம்பிக்கைகளை
எதிர்க்கும் எதிரி ;
பைபிளில் உள்ள
கருத்துக்களை தவறு
என்று சொல்லி
எதிர்க்கும் எதிரி ;
பல நூற்றாண்டுகளாக
நாம் கட்டி காப்பாற்றி
வரும் கிறிஸ்தவ
மத நம்பிக்கைகளை
எதிர்க்கும் எதிரி ;
அத்தகைய எதிரியின்
தன்மைகளை - நீங்கள்
சரியாக கணித்து
வைத்து இருக்கிறீர்கள் “

“ ஆனால் அதில் ஒரு
சிறிய திருத்தம்
ஜியார்டானோ புருனோ
வித்தியாசமானவர் அல்ல ;
தான் சொன்னது தான்
சரியானது என்று
சொல்லிக் கொண்டு
திரியும் ஒரு
பிடிவாதக்காரர் ; “

“ என்னுடைய
வாழ்நாளில்
இத்தகைய பிடிவாத
குணம் கொண்ட ஒரு
மனிதரை நான்
பார்த்ததேயில்லை “

“ உலகையே தன்
ஆளுகையின் கீழ்
வைத்துக் கொண்டு
அரசாட்சி செய்து
கொண்டு வரும்
கத்தோலிக்க கிறிஸ்தவ
கிறிஸ்தவ திருச்சபையால்
நடைமுறைப்படுத்தப்பட்டு
காலம் காலமாக
கோடிக்கணக்கான
மக்களால்
பின்பற்றப்படும்
மத நம்பிக்கைகளை
ஜியார்டானோ புருனோ
என்ற ஒரு சாதாரண
மனிதர் தவறு என்று
சொல்லி அழித்து விட
பார்க்கிறார் என்றால்
அதை பார்த்துக் கொண்டு
நாம் அமைதியாக
இருக்க முடியுமா……………..?

எதுவும் தெரியாதது போல்
வேடிக்கை பார்த்துக்
கொண்டு தான் இருக்க
முடியுமா…………………………………….? ”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  05-02-2019
/////////////////////////////////////////////////////////////