June 02, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-17



               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-17

“””””கொலையும் செய்வாள்
   பத்தினி”””””””

கொங்கணர்
மிகப்பெரிய சித்தர்
அவருடைய ஜீவசமாதி
திருப்பதியில் உள்ளது

இத்தகைய சிறப்பு மிக்க
கொங்கணர்
ஒரு நாள்
ஒரு மரத்தடியில்
அமர்ந்து தவம் செய்து
கொண்டிருந்தார்
அப்போது மரத்தின் மேல்
இருந்த கொக்கு ஒன்று
அவர் மேல் எச்சம்
உமிழ்ந்து அவரை
அசுத்தப்படுத்தி விட்டது

இதனால் ஆத்திரமடைந்த
கொங்கணர்
கொக்கை கோபத்துடன்
ஏறிட்டுப் பார்த்தார்
கொக்கு எரிந்து
கீழே விழுந்து
சாம்பலானது
எரிந்து சாம்பலான
கொக்கைப் பார்த்த
கொங்கணர்
மகிழ்ச்சி கொண்டார்

தன்னுடைய தவவலிமையின்
ஆற்றலை நினைத்து
மகிழ்ச்சி கொண்டு
ஊருக்குள் வந்தார்
ஒரு வீட்டின் முன்
வந்து நின்றார்.
எனக்கு பசிக்கிறது
தர்மம் செய்யுங்கள் என்றார்

அந்த வீட்டிலிருந்து
எந்தவிதமான சத்தமும்
வரவில்லை
அது திருவள்ளுவர் வீடு
திருவள்ளுவர் சாப்பிட்டுக்
கொண்டிருக்க
அவர் மனைவி வாசுகி
அவருக்கு உணவு
பரிமாறிக் கொண்டு இருந்தார்.

திருவள்ளுவர் சாப்பிட்டு
முடிக்கும் வரை
வாசுகி எங்கும் செல்லமாட்டார்
யார் கூப்பிட்டாலும்
போக மாட்டார்
திருவள்ளுவர் சாப்பிட்டு
முடிக்கும் வரை
அவர் கூடவே இருந்தார்

நீண்ட நேரம் ஆகியும்
வீட்டிற்குள் ஆட்கள் இருந்தும்
தான் தர்மம் என்று
கேட்டும் யாரும் வரவில்லை
என்பதை நினைத்து
கோபம் கொண்டார்

திருவள்ளுவர்
சாப்பிட்டு முடித்ததும்
வெளியே சாப்பாடு
கொண்டு வந்த
வாசுகியைப் பார்த்து
கொங்கணர்
சாப்பாடு கொண்டு வர
இவ்வளவு நேரமா என்று
கோபத்துடன் பார்த்தார்

நான் என் கணவருக்கு
சாப்பாடு பரிமாறிக்
கொண்டு இருந்தேன்
அவர் சாப்பிட்டு முடித்தவுடன்
சாப்பாடு கொண்டு வந்தேன்
அதனால் நேரம்
ஆகிவிட்டது என்றார்

பெண்ணே சித்தர்களுக்கு
அன்னமிடுவது
முதல் கடமை
அதுவும் நான்
சர்வ சித்தி பெற்றவன்
என்ற விவரம்
உனக்கு தெரியாதா
என்று கோபத்துடன்
பார்த்தார்.

அப்போது வாசுகி
“””””கொக்கென்று நினைத்தாயா
  கொங்கணவா””””””
என்று கேட்டார்

வாசுகியின் வார்த்தையைக்
கேட்டு மிரண்ட கொங்கணர்
தன் பெயர்
கொங்கணர் என்று
எப்படி தெரிந்தது
தான் காட்டில் கொக்கை
எரித்து சாம்பலாக்கியது
இவருக்கு எப்படி தெரிந்து
என்று ஆச்சரியப்பட்டார்

இவர் மிகப்பெரிய
தவ ஆற்றல்
கொண்டவராக இருக்க வேண்டும்
இல்லையென்றால் தான்
காட்டில் யாருக்கும்
தெரியாத இடத்தில் செய்த
விஷயம் இவருக்கு
எப்படி தெரிந்து என்று
ஆச்சரியப்பட்டார்

அப்போது தான் அந்த
பெண் சொன்னார்
ஐயா நான் தான்
திருவள்ளுவரின்
மனைவி வாசுகி
பதிபக்தியே ஒரு
பெண்ணுக்குரிய குணம்
என்பது உமக்கு தெரியாதா

ஒரு பெண் இறைவனை
அடைய வேண்டுமானால்
தவம் செய்ய வேண்டிய
அவசியமில்லை
பூஜைகள் எதுவும் செய்ய
தேவையில்லை
கணவனுக்கு
பணிவிடை செய்வதே
ஒரு பெண்ணுக்கு உரிய
உயரிய தவம் என்றார்

மனைவி கணவனுக்கு
பணிவிடை செய்ய
வேண்டுமானால்
மனைவி மட்டும்
ஒழுக்க நிலையில்
இருந்தால் போதாது
கணவனும்
ஒழுக்க நிலையில்
இருக்க வேண்டும்

ஆன்மீகத்தில் நம்மை
விட உயர்ந்தவன்
யாரும் இல்லை என்று
நினைக்கக்கூடாது
நம்மை விட
ஆன்மீகத்தில் உயர்ந்தவர்கள்
இந்த உலகத்தில்
சாதாரணமாக நம்முடன்
வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்
என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்.,


--------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////