July 09, 2019

பரம்பொருள்-பதிவு-38


                  பரம்பொருள்-பதிவு-38

“ பக்தி வெள்ளம்
கரைபுரண்டு ஓடிக்
கொண்டிருந்த
திருமயிலாப்பூர்
என்னும் இடத்தில்
வாணிபத்தின் மூலம்
இந்த உலகத்திற்கு
தேவையானவற்றை
வாரி வழங்கிக்
கொண்டிருந்த
செல்வமிகு
வணிகர் குலத்தில்
பிறந்தவர் சிவநேசர் “

“அவர் பலமரக்கலங்களை
தன்னிடம் வைத்து
வாணிபம் செய்தவர் ;
தேவையான
மரக்கலங்களை
தேவையான அளவிற்கு
கடலில் அனுப்பி
தேவையான அளவு
வாணிபம் புரிந்து
தேவைக்கு அதிகமான
செல்வங்களை குவித்து
அனைவரும் வியக்கும்
வகையில் வாணிபத்தில்
அரசராகத் திகழ்ந்தவர் ; “

“ வாணிபத்தில்
கோட்டை கட்டி
வாழ்ந்து மிகப்பெரிய
செல்வந்தராகத்
திகழ்ந்தவர் ;
கண்டவர் மட்டுமல்ல
கேட்டவரும் வியந்து
வியக்கும் வண்ணம்
செல்வச் செழிப்பில்
திளைத்தவர் ;
கணக்கில்
அடங்கமுடியாத
செல்வத்திற்கு
உரிமையாளராக
விளங்கியவர் ;
கணக்கில் அடக்க
முடியாத
செல்வத்திற்கு
சொந்தக்காரராக
இருந்தவர் ;
கணக்கில் கொண்டு
வரமுடியாத
அளவிற்கு அளவற்ற
நிதிகளுக்கு தலைவராக
விளங்கியவர் ;”

“ அளவற்ற செல்வச்
செழிப்பில் திளைத்தாலும்
ஆணவத்தின்
சாயல் சிறிதும்
தன்னை அண்டாமல்
பார்த்துக் கொண்டவர் ;”

“ அவர் பொய்யையும்
மெய்யையும்
வேறுபடுத்தி
பிரித்து பார்க்கத்
தெரிந்தவர்  ;
உண்மையான தெய்வம்
சிவமே என்றும்
அவர் பாதமலர்
பணிதலே இப்பிறப்பை
கடக்க வழி
என்பதை புரிந்து
வைத்திருந்த
காரணத்தினால்
சிவநாமத்தை தவிர
வேறு எந்த ஒரு
நாமத்தையும்
உச்சரிக்காமல்
அனுதினமும்
சிவநாமத்தை
மட்டுமே உச்சரித்து
நமசிவய என்ற
ஐந்தெழுத்து
மந்திரத்தின்
உரு வடிவமாக
திகழ்ந்தவர் ;”

“சிவநாமத்தை
எந்நேரமும் உச்சரித்து
சிவனை எப்போதும்
தன்னுடைய சிந்தையில்
இருந்து அகற்றாதவர் ;”

“ சிவனை வணங்கும்
சிவனடியார்களுடன்
கலந்து சிவனை
நினைத்து
உள்ளம் உருகி
கண்ணீர் சிந்தி
பாடல்கள் பாடி
வாழ்ந்தவர் ;”

“ ஊர் விட்டு
ஊர் வந்த மதங்கள்
அனைத்தும்
இங்குள்ள மக்களை
அண்டி பிழைக்க
வந்த மதங்கள் ;
உண்மையை மறைத்து
மக்களை தவறான
கருத்துக்கள் மூலம்
மக்களுடைய
மனங்களை
மதத்தின் பெயரால்
அடிமைப்படுத்தி
வைத்திருப்பவை ;”

“ ஊர்விட்டு ஊர்
வந்த மதங்கள்
மக்களை வசியப்படுத்தி
மயக்கி வைத்திருக்கும்
மதங்கள் என்று
உணர்ந்திருந்த
சிவநேசர்
அத்தகைய போலியான
மதங்களை புறக்கணித்து
சைவநெறி வழுவாமல்
வாழ்ந்து வந்தவர்
தான் சிவநேசர் “

“ ஊர் விட்டு
ஊர் வந்தவை ;
நாடு விட்டு
நாடு வந்தவை ;
கண்டம் விட்டு
கண்டம் வந்தவை ;
ஆகிய மதங்கள்
அனைத்தும்
பொய் மதங்கள் ;
அவைகள் மனிதர்களை
ஏமாற்றி அடிமைப்
படுத்த வந்தவை ;
அந்த மதங்கள்
மக்களை வாழ்விக்க
வந்த மதங்கள்
அல்ல என்று
உணர்ந்தவர் ;”

“ உண்மையான மதம்
இந்து மதத்தின்
ஒரு பிரிவான
சைவ மதமே
மற்றவை எல்லாம்
அதற்கு சமனில்லா
மதமே என்று
சிந்தை தெளிந்தவர்
சிவநேசர் ;”

“ உண்மையான
சிவனுடைய
பக்தராக வாழ்ந்து
சிவனுக்காக
தன்னுடைய
வாழ்க்கையையே
அர்ப்பணித்தவர்
சிவநேசர் ;”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  09-07-2019
//////////////////////////////////////////////////////////