June 17, 2019

பரம்பொருள்-பதிவு-26


                      பரம்பொருள்-பதிவு-26

“கல்லில் கடவுள்
இல்லை
என்பவர்களை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்”

ஒன்று
கடவுளை
வணங்குபவர்கள்

இரண்டு
கடவுளை
வணங்காதவர்கள்

ஒன்று
“ஒரு மதத்தில்
இருந்து கொண்டு
தான் சார்ந்த
மதத்தில் உள்ள
தான் வணங்கும்
தன்னுடைய
கடவுளின் மேல்
உண்மையான
நம்பிக்கை
வைத்திருப்பவர்கள் ;
தன்னுடைய
கடவுளை
உண்மையாக
வணங்குபவர்கள் ;
தன்னுடைய
கடவுளின் மேல்
உண்மையான பக்தி
வைத்திருப்பவர்கள் ;
பிற மதத்தைச் சார்ந்த
பிறர் வணங்கும்
கடவுளை
இகழ்ச்சியாக
பார்க்க மாட்டார்கள் ;
பிற மதத்தைச் சார்ந்த
பிறர் வணங்கும்
கடவுளை
இகழ்ச்சியாக
பேச மாட்டார்கள் ;
பிற மதத்தைச் சார்ந்த
பிறர் வணங்கும்
கடவுளுக்கு எதிராக
தவறான விதத்தில்
நடந்து கொள்ள
மாட்டார்கள் ; “

“ஒரு மதத்தில்
இருந்து கொண்டு
தான் சார்ந்த
மதத்தில் உள்ள
தான் வணங்கும்
தன்னுடைய கடவுளை
உண்மையாக
நம்பாதவர்கள் ;
தன்னுடைய கடவுளை
உண்மையாக
வணங்காதவர்கள் ;
தன்னுடைய
கடவுளின் மேல்
உண்மையான பக்தி
வைக்காதவர்கள் தான் ;
பிற மதத்தைச் சார்ந்த
பிறர் வணங்கும்
கடவுளை இகழ்ச்சியாக
பார்ப்பார்கள் ;
பிற மதத்தைச் சார்ந்த
பிறர் வணங்கும்
கடவுளை இகழ்ச்சியாக
பேசுவார்கள் ;
பிற மதத்தைச் சார்ந்த
பிறர் வணங்கும்
கடவுளுக்கு எதிராக
தவறான விதத்தில்
நடந்து கொள்வார்கள் ;”

“ தான் வணங்கும்
கடவுள் மேல்
உண்மையான
பக்தி வைத்திருப்பவர்கள் ;
பிற கடவுளை
இகழ மாட்டார்கள் ;
தான் வணங்கும்
கடவுள் மேல்
உண்மையான
பக்தி வைக்காதவர்கள் தான் ;
பிற கடவுளை
இகழுவார்கள் ; “

“இத்தகையவர்கள் தான்
கடவுள் சிலையைப்
பார்த்து கல் என்றும் ;
கல்லில் கடவுள்
இல்லை என்றும் ;
இகழுவார்கள் ;
இத்தகையவர்கள் தான்
கடவுள் சிலையை
வணங்குகிறவர்களைப்
பார்த்து கல்லை
வணங்குகிறார்கள்
என்று இகழுவார்கள் ;
இத்தகையவர்கள் தான்
கடவுள் சிலையை
வணங்குகிறவர்களைப்
பார்த்து
கல்லில் இருக்கும்
தீய சக்தியை
வணங்குகிறார்கள் ;
என்று கொச்சைப்
படுத்தி இகழுவார்கள் ;”

“பிற மதத்தைச்
சார்ந்தவர்களை இழிவாக
நடத்துகிறவர்கள் ;
பிற மதத்தைச்
சார்ந்து இருந்து
பிற மதத்தில்
உள்ள கடவுளை
வணங்குகிறவர்களை
இழிவாக பேசுகிறவர்கள் ;
தன்னுடைய மதமே
உண்மையான
மதம் என்றும் ;
தான் சார்ந்து இருக்கும்
மதத்தில் உள்ள
கடவுளே உண்மையான
கடவுள் என்றும் ;
சொல்பவர்கள்
அனைவரும்
தான் சார்ந்து இருக்கும்
மதத்தின் மீதும்
தான் வணங்கும்
கடவுளின் மீதும்
உண்மையான பக்தி
வைத்திருக்க
மாட்டார்கள் ;
என்பதையும் ,
ஏதோ ஒரு
காரணத்திற்காகத் தான்
அந்த மதத்தை
தழுவி இருக்கிறார்கள்
என்பதையும் ,
ஏதோ ஒரு
காரணத்திற்காகத்
தான் அந்த மதத்தில்
உள்ள கடவுளை
வணங்குகிறார்கள்
என்பதையும் ,
நாம் நினைவில்
கொள்ள வேண்டும் ;”

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 17-06-2019
//////////////////////////////////////////////////////////////