January 31, 2024

ஆன்மீகம்-(20)-தேவையின் அடிப்படையில் கடவுளை வணங்கக் கூடாது,நம்பிக்கையுடன் கடவுளை வணங்க வேண்டும்-31-01-2024

 

ஆன்மீகம்-(20)-தேவையின் அடிப்படையில் கடவுளை வணங்கக் கூடாது,நம்பிக்கையுடன் கடவுளை வணங்க வேண்டும்-31-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும்

தேவையின் அடிப்படையில் தான்

கடவுளை வணங்குகின்றனர்

நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளை

வணங்குவதில்லை.

அதனால் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்

மனிதரிடம் பேசிய தெய்வம்,

காட்சி கொடுத்த தெய்வம்

இப்போது பேசுவதும் இல்லை

காட்சி கொடுப்பதும் இல்லை

 

கடவுளை நம்பிக்கையின் அடிப்படையில்

வணங்குவோம்

அனைத்தையும் பெறுவோம்

 

நன்றி,

 

------ திரு.K.பாலகங்காதரன்

------ எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------31-01-2024

------புதன் கிழமை

///////////////////////////////////////////////





January 28, 2024

விழாக்கள்-(9)-75-வது குடியரசு தின விழா-26-01-2024

 

விழாக்கள்-(9)-75-வது குடியரசு தின விழா-26-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

வெற்றி என்பது

பூஞ்சோலையின் கொடியில் இருந்து,

தென்றலில் மிதந்து வந்து,

நம்முடைய கரத்தில்

தவழக்கூடிய மலர் அல்ல,

அந்த மலர் பறிக்க,

புயலைச் சீறிக் கொண்டு

செல்ல வேண்டும் பூந்தோட்டத்துக்கு,

ஆர்வம், ஆற்றல், உழைப்பு

இவற்றால் மட்டுமே பெறக்கூடியது அல்ல,

குறை சொல்பவர்கள்,

கருத்து சொல்பவர்கள்,

ஆகியோரின் பேச்சுக்களை

புறந்தள்ளி விட்டு சென்றால் மட்டுமே,

கிடைக்கக் கூடிய

மணமலர் தான்

அந்த வெற்றி மலர்

என்பதை உணர்ந்து

கொள்ள வேண்டும்

 

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில்

பணிபுரியும் பணியாளர்களுக்கு

நடத்தப்பட்ட

கவிதைப் போட்டியில்

முதல் பரிசும்,

பேச்சுப் போட்டியில்

இரண்டாவது பரிசும்

பெற்றேன் என்பதைத்

தெரிவித்துக் கொள்வதில்

மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

 

நன்றி,

 

------ திரு.K.பாலகங்காதரன்

------ எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------28-01-2024

------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////





January 25, 2024

திருக்குறள்(17)-செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்-25-01-2024

 

திருக்குறள்(17)-செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய

செய்கலா தார்-25-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

செயற்கரிய செய்வார் பெரியர்

சிறியர் செயற்கரிய

செய்கலா தார்

 

குறள் - 26

பால் - அறத்துப்பால்

அதிகாரம் - நீத்தார் பெருமை

 

செய்வதற்கு அரிய

செயல்களைச்

செய்பவர் பெரியவர்

சிறியர் அரிய

செயல்களைச் செய்யாதவர்

என்பது இந்த

திருக்குறளுக்கு

சொல்லப்படும்

பொதுவான கருத்து

 

இதனுடைய உண்மையான

கருத்து என்ன என்று பார்ப்போம்

நன்றி,

 

------ திரு.K.பாலகங்காதரன்

------ எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------25-01-2024

------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////




January 23, 2024

பழமொழி(18)-கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை-23-01-2024

 

பழமொழி(18)-கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை-23-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

பழமொழிகள் என்பவை

ஒரு செய்தியைச்

சொல்வதாக இருக்காது

 

ஒரு கருத்தைச்

சொல்வதாக இருக்கும்

பின்பற்ற வேண்டிய

ஒரு விஷயத்தை தன்னுள்

கொண்டதாக இருக்கும்

கழுதைக்கு தெரியுமா

கற்பூர வாசனை

என்ற பழமொழியின்

அர்த்தத்தைத்

தெரிந்து கொள்வோம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------23-01-2024

------செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////







January 19, 2024

பழமொழி-(17)-அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்-19-01-2024

 

பழமொழி-(17)-அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்-19-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

நமக்கு விவரம்

தெரிவதற்கு முன்பாகவே

நம்மைக் கவனித்துக்

கொண்டவர்கள்

அன்னையும் பிதாவும்

என்பதை அறிந்து

அவர்களை முதலில்

வணங்க வேண்டும்

என்பது தான்

அன்னையும் பிதாவும்

முன்னறி தெய்வம்

என்பதற்கு அர்த்தம்

 

மேலும் இதன்

அர்த்தம் தெரிந்து

கொள்வோம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 19-01-2024

------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////





January 17, 2024

புத்தக வெளியீட்டு விழா-(25)-முக்திக்கு வழிகாட்டும் சித்தர் பாடல்கள், பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பிரயோகிப்பது எப்படி-17-01-2024

 

புத்தக வெளியீட்டு விழா-(25)-முக்திக்கு வழிகாட்டும் சித்தர் பாடல்கள், பஞ்சபட்சி சாஸ்திரத்தைப் பிரயோகிப்பது எப்படி-17-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

நான் எழுதிய

என்னுடைய

ஆறாவது புத்தகமான

 

முக்திக்கு வழிகாட்டும்

சித்தர் பாடல்கள்

மற்றும்

 

என்னுடைய

ஏழாவது புத்தகமான

 

பஞ்சபட்சி சாஸ்திரத்தைப்

பயன்படுத்துவது எப்படி

 

என்ற

என்னுடைய

இரண்டு புத்தகங்களையும்

டாக்டர்.பர்வீன் சுல்தானா

அவர்கள்

சென்னையில் நடைபெற்ற

47 வது புத்தக காட்சியில்

பபாசி அலுவலகத்தில்

திரு.குமரன் டி.கே.பப்ளிஷர்ஸ்,

மற்றும்

பபாசி அலுவலர்கள்

முன்னிலையில்

வெளியிட்டார் என்பதைத்

தெரிவித்துக் கொள்வதில்

நான் மிகுந்த

மகிழ்ச்சி அடைகிறேன்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 17-01-2024

------புதன் கிழமை

///////////////////////////////////////////////






January 15, 2024

குடைவரைக் கோயில்-(10)-மாமண்டூர் குடைவரைக் கோயில்-15-01-2024

 குடைவரைக் கோயில்-(10)-மாமண்டூர் குடைவரைக் கோயில்-15-01-2024


அன்பிற்கினியவர்களே!

 

காஞ்சிபுரம் வந்தவாசி செல்லும் சாலையில்

காஞ்சிபுரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது

நரசமங்கலம் என்ற ஊர்.

இந்த ஊரிலிருந்து 1 கிலோ மீட்டரில்

மாமண்டூர் குடைவரைக் கோயில் அமைந்துள்ளது.

 

வடக்கு தெற்காக அமைந்த மலையில்

நான்கு குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளது.

இது மாமண்டூர் குடைவரைக் கோயில் என்று

அழைக்கப்படுகிறது.

 

மாமண்டூர் குடைவரைக் கோயிலைப் பற்றியும்

அதன் சிறப்புகள் பற்றியும்

பார்ப்போம்

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- படைப்பாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 15-01-2024

------திங்கட் கிழமை

///////////////////////////////////////////////




January 12, 2024

கோயில்கள்-(17)-இந்து மதக் கோயில்களில் கோபுரம் மற்றும் கருவறையில் உள்ள ரகசியங்கள்-12-01-2024

 

கோயில்கள்-(17)-இந்து மதக் கோயில்களில் கோபுரம் மற்றும் கருவறையில் உள்ள ரகசியங்கள்-12-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

இந்துமதக் கோயில்கள்

சக்தியின் களமாக இருக்கிறது

மக்களுடைய அனைத்து பிரச்சினைகளையும்,

கவலைகளையும்,

சோகங்களையும்,

துன்பங்களையும்

தீர்க்கும் சக்தி வாய்ந்த ஒரு இடமாக இருக்கிறது

 

கோயில்கள் சக்தி வாய்ந்த

ஒரு களமாக இருப்பதற்குக் காரணம்

கோபுரங்களும், கருவறைகளும்

ஆகும்.

 

இவைகள் எப்படி

சக்தியை எப்படி உண்டாக்குகிறது

சக்தியை எப்படி சேமித்து வைக்கிறது

சக்தியை எப்படி நாம் பெறலாம்

என்பதைப் பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 12-01-2024

------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////