October 19, 2011

மந்திரம் - யந்திரம் - தந்திரம்

                     மந்திரம் - யந்திரம் - தந்திரம்


மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக பயன்படுத்தும் ஒரு ஆயுதம் தான் மந்திரம்.

அந்த ஆயுதத்தை இயக்கத்திற்கு கொண்டு வரும் ஒரு பொருள் தான் யந்திரம்.

பொருள் மூலம் இயக்கப்பட்ட ஆயுதம் தன் இலக்கை எவ்வாறு அடைகிறது என்ற சூட்சுமம் தான் தந்திரம்.
தந்திரம் என்பது மறைபொருளாக வைக்கப்பட்டிருக்கிறது.

இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம்:
வில்லும் அம்பும் மந்திரம் அதாவது இயக்கம் இல்லாமல் அமைதியாக ஒரே இடத்தில் இருக்கிறது.

மனிதன் யந்திரம் அதாவது வில்லில் அம்பை மாட்டி அம்பை செலுத்துகிறான் அது செல்கிறது.

அம்பு செல்லுவது தந்திரம் அதாவது அம்பு இந்த பிரபஞ்சத்தில் எவ்வாறு சென்று இலக்கை அடைகிறது என்பது தந்திரம்.
         
இதை இன்னொரு உதாரணத்தின் மூலமும் இதை விளக்கலாம்:மந்திரம்:
சைக்கிளை இயக்க மனிதன் இல்லையென்றால் அது தனியாக வைக்கப்பட்ட இடத்திலேயே இருக்கும் .

இங்கு சைக்கிள் என்பது மந்திரம்.

அதைப் போல ஒரு காரியம் சித்தி பெற அதாவது அக்காரியம் கைகூட காரிய சித்தி மந்திரம் என்ற ஒரு மந்திரம் சொல்கிறோம் .மந்திரத்தை உச்சாடணம் செய்பவர் எவ்வளவு தான் மந்திரத்தின் எண்ணிக்கையை அதிகரித்தாலும் கூட அதன் சக்தியானது அவரைச் சுற்றியே இருக்கும் அவரை விட்டு நகராது.
யந்திரம் :
சைக்கிள் என்பது மந்திரம் என்றால் அதை இயக்க வரும் ஒரு மனிதன் தான் யந்திரம்.

சைக்கிளை மனிதன் இயக்கும் போது அது இருக்கும் இடத்தை விட்டு நகர ஆரம்பிக்கிறது.

அதைப்போல மந்திரத்தை இயக்கத்திற்குக் கொண்டு வர ஒரு தகடு செய்து நாம் எந்த மந்திரம் உச்சாடணம் செய்கிறோமோ ,அந்த மந்திரத்திற்குரிய படம் வரைந்து சொல்கிறோம் .

யந்திரம் வைத்து மந்திரம் சொல்லும் போது நம்மைச் சுற்றி மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும் மந்திரம் நம்மை விட்டு நகர ஆரம்பிக்கிறது.
தந்திரம்:
சைக்கிளை மனிதன் ஓட்டும் போது அவன் கண் ,கை ,கால் ,மனம் உடலில் உள்ள பல உறுப்புகள் ஒன்றாக செயல் பட்டு செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சைக்கிளை எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்த்து விடுகிறது.

அதைப் போல யந்திரம் வைத்து மந்திரம் சொல்லும் போது மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கும் மந்திரமானது பிரபஞ்ச வெளியில் எவ்வாறு தொடர்பு கொண்டு எவ்வாறு பயணம் செய்து செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று முடிக்க வேண்டிய காரியத்தை அதாவது நாம் எந்த காரியம் சித்தி பெற வேண்டும் என்று நினைத்தோமோ அதாவது முடிய வேண்டும் என்று நினைத்தோமோ அந்த காரியத்தை முடிப்பது தான் தந்திரம்.

இந்த தந்திரம் தான் மறை பொருளாக வைக்கப் பட்டிருக்கிறது.

ஆகவே எந்த ஒரு காரியம் முடிய வேண்டும் என்று நாம் ஆசைப் பட்டாலும் மந்திரம் யந்திரம் தந்திரம் ஆகிய மூன்றும் ஒன்றாக செயல் பட்டால் தான் அந்த காரியம் முடியும் இல்லையென்றால் அந்த காரியம் முடியாது.

உதாரணத்திற்கு இப்பொழுது ஒரு பைரவர் மந்திரம் ,பைரவர் தந்திரம் எடுத்துக்கொள்வோம்

ஸ்ரீ பைரவர் 3000 ஆண்டுகளாக இந்துக்களாலும், கிறிஸ்துவர்களாலும், புத்தமதத்தினராலும் , சைவம் மற்றும் வைணவ மார்க்கத்தினராலும் பல்வேறு பெயர்களில் இன்று வரை வழிபடப்பட்டு வருகின்றனர் .

ஸ்ரீபைரவர் சிவனின் அம்சங்களில் ஒருவர் .

சிவனின் அம்சம் என்பதும் மூர்த்தம் என்பதும் ஒன்று தான் .

அவதாரம் என்பது இறைவன் மனிதனாகப் பிறந்து வளர்ந்து நல்லது செய்வதாகும் . அது சமயம் அக்கடவுளின் இடம் காலியாக இருக்கும் . மூர்த்தம் என்பது அப்படி அல்ல. எங்கும் அந்த இறைவன் இருப்பவர்.

தமிழ் நாட்டில் ஸ்ரீபைரவர்  என்றும், கடவுளை பைரவர் எனவும் அழைக்கின்றனர்.

இவரே கிராமக் காவல் தெய்வமாக நின்று தந்திர சாத்திரப்படி பலி ஏற்கின்றார். கோயில்களில் முதலில் தொடங்கும் கால பூஜையும் இறுதியாக நடக்கும் இரவு பூசையும் இவருக்கு உகந்தவை.

ஏழரைச் சனி, அட்டம சனி, அர்த்தாஷ்டம சனி பிடித்துள்ளவர்கள் ஸ்ரீபைரவரை வழிபாடு செய்வதின் மூலம் மட்டும் விடுபடுவர்.

ஒரு மனிதனுக்குள் சூட்சுமமாக இருந்து அவனுக்கு தைரியத்தை கொடுக்கும் காவல் தெய்வம் ஸ்ரீபைரவரே.இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவர் மந்திரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
ஓம் பைரவா
உத்தண்ட பைரவா ,
ஏந்திய கபாலமும் , ரத்தின மாலையும் , நாக பாஷமும் ,
போக வேஷ்டியும், ஸ்வாநத் வாகனமும் ,அடித்த தண்டும் ,
பிடித்த பார்வையும் ,நேரிட்ட மேனியும் ,
இதோ என் காளீக்களீள் எனக்கு அருள் செய்ய புறப்பட்டார்.          

என்னுடைய பைரவனார் தன்மையைப் போல் யாம் இருப்போமென்று,
பூத பிரேத பிசாசு கணங்களைக் கட்டு,
பிற்பில்லி சூன்யம் வஞ்சனை நோயைக் கட்டு,
இரும்பு வலையை உருக்கியே எட்டுத்  திக்கும் பதினாறு கோணமும் கட்டு,
ஆகாசம் பூமி அதிரவே கட்டு,
எமனைக் கட்டு ,
எம துhதரைக் கட்டு ,
நாட்டைக் கட்டு ,
நகரத்தைக் கட்டு ,
சந்தனப் பாடு தனித்தனியே கட்டு ,
சொப்பனப் பேய்களை சுட சுட கட்டு ,
அகார உகார ஈஸ்வர புத்திராய ,
வடுக நாதாய ,
கிணி கிணி சற்வேத்நாய,
ரண்டி ரண்டி அகோர வீர பத்திராய ,
ஓம் குருவே நமசிவய சுவாஹா
இந்த பைரவர் மந்திரத்திற்குரிய  பைரவர் யந்திரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ளது .


             
ஓன்றை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

மந்திரத்திற்கு உரிய யந்திரம் எவ்வாறு மாறுபடுகிறதோ அதே போல் தந்திரமும் மாறுபடுகிறது.

பைரவர் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட நம் வாழ்க்கையில் என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் என்பதை இப்பொழுது பார்ப்போம்.

மந்திரத்தை தினமும் கண்களை மூடி ஒரே இடத்தில் ஒரே திசையில் ஒரே நேரத்தில் சொல்வதால் வரும் நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இவை கண்களை மூடி மந்திரம் சொல்லும் போது நடப்பவை ஆகும்.


நிலை 1ல்-- நம் எதிரே ஒரே ஒரு கண் தோன்றும்.
நிலை 2ல்-- நம் எதிரே இரு கண்கள் தோன்றும்.
நிலை 3ல்-- முகம் முழுவதும் தெரியும்.
நிலை 4ல்-- மார்பளவு உருவம் தெரியும்.
நிலை 5ல்-- உருவம் முழுவதும் தெரியும் .
நிலை 6ல்--  தான் வந்ததை தெரியப்படுத்தும் விதமாக பொருட்களை  
                          கீழே தள்ளும்.
நிலை 7ல்-- நடந்து வரும் சத்தம் கேட்கும் பெண் தெய்வமாக
                           இருந்தால் சலங்கை ஒலி கேட்கும்.

நிலை 8ல்-- சிரிக்கும் சத்தம் கேட்கும்.
நிலை 9ல்-- நம்மை சுற்றி ,சுற்றி வந்து விளையாடும் .
நிலை 10ல்- நாம் துhங்கும் போது அந்த தெய்வம் வந்து சில
                            ரகசியங்கள் சொல்லி விட்டு போகும் .


நிலை 11ல்-- கண்ணை மூடி தியானத்தில் இருக்கும் போது அந்த
                           தெய்வம்  நம் எதிரே வந்து ஒரு செயல்செய்யும்.
நிலை 12ல்-- அந்த காரியம் முடிவடைந்தது நமக்குத் தெரியும்.
சித்தர்களும் 12 வது நிலை தான் முக்தி என்கிறார்கள். மந்திரத்திற்கும் இது பொருந்தும்


நான் மேலே சொன்ன நிலைகள் யாவும் மேற்கண்ட பைரவர் மந்திரத்திற்கும் பைரவர் யந்திரத்திற்கும் மட்டுமே பொருந்தும்.

இங்கே ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன் நான் பைரவர் மந்திரத்தையும் ,
பைரவர் யந்திரத்தையும் ,மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

பைரவர் மந்திரத்திற்குரிய தந்திரத்தை இங்கே சொல்லவில்லை அதை விளக்கவில்லை.
பைரவர் மந்திரத்திற்குரிய தந்திரம் தெரியாமல் மேற்கண்ட மந்திரத்தை பயன் படுத்தினால் மேலே சொன்ன 12 நிலைகளில் எந்த நிலையும் ஏற்படாது.
எத்தனை கோடி முறை பைரவர் மந்திரத்தை உச்சாடணம் செய்தாலும் ஒரு நிலையும் தெரியாது நினைத்த காரியம் நினைத்த படி முடியாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளவும்.
15 comments:

 1. அன்பரே அத் தந்திரத்தை அறிய ஏதும் மந்திரம் உண்டோ ???

  ReplyDelete
 2. நன்றி தந்திரத்தை அறிந்துகொள்ள தேவையான தகுதிகள் என்ன என்பதை விளக்குவீர்களா?

  ReplyDelete
 3. அந்த தந்திரத்தை சொன்னால் உதவியாக இருக்கும்,தயவு செய்து சொல்லுவீர்களா

  ReplyDelete
 4. அன்புள்ள பாலா ,
  இன்னும் விளக்கமாக எல்லோரும் கேட்கிறார்கள்.நானும் கேட்கிறேன்
  தெரிவிக்கவும் ஏனென்றால் இதனை பற்றி மேலும் அறிய விரும்புகிறேன்.

  ப்ளீஸ் எனக்கு தனி மெயில் கூட அனுப்புங்க
  ssetex@gmail.com
  srinivasan.K

  ReplyDelete
 5. நான் மந்திரம் , யந்திரம் , தந்திரம் ஆகியவற்றை விளக்கமாக ,தெளிவாக, கட்டுரைகள் பலவற்றை கூடிய விரைவில் எழுத இருக்கிறேன் .
  தாங்கள் தொடர்ந்து படித்து பயன் பெற கேட்டுக் கொள்கிறேன்.
  நன்றி !

  ReplyDelete
 6. இஸ்லாமிய மந்திர, யந்திர, தந்திரங்களையும்
  பதிவாக தாருங்கள் நண்பரே

  ReplyDelete
 7. வணக்கம் ஐயா. நான் மலேசியாவில் இருக்கின்றேன். நான் பைரவர் தொடர்பான மந்திரம் , யந்திரம் , தந்திரம் போன்றவற்றை அறிந்துகொள்ள விரும்புகின்றேன். தயவு செய்து விளக்கவும். எனது மெயில் : mohan.ppdpd@gmail.com
  தங்களின் அன்புக்கு எனது நன்றிகள்.

  ReplyDelete
 8. இதட்க்குரிய தந்தரம் மூன்று நாடுஸ்டானத்தால் கண்டு கொள்ள முடியும் நன்றி பதிவிட்க்கு

  ReplyDelete
 9. enakku karumpulli payirchiyin palangalum muraium koorungal my id ; legendsuresh1@gmail.com

  ReplyDelete
 10. Then what is the use in giving here?

  ReplyDelete