July 12, 2021

பதிவு-6- உலகத்தார்- திருக்குறள்-

 

பதிவு-6-

உலகத்தார்-

திருக்குறள்-

 

ஒரு குறிப்பிட்ட

நேரத்திற்குள்

கர்மாவானது

தன்னுடைய

விளைவைத்

தரவில்லை என்றால்

அந்த கர்மாவானது

முற்றிலும் எரிந்து

அழிந்து விடும்.

 

அதனால் தான்

புளியந்தோப்புக்கு

07.35 மணிக்கு சென்ற

நமக்கு விபத்து

எதுவும் ஏற்படவில்லை

 

கர்மாவினால்

ஏற்படக்கூடிய

விளைவிலிருந்து

நம்மைக்

காப்பாற்றுவதற்காக

காலம்

நம்மைக் கல்லில்

இடிக்கக்கூடிய

செயலைச்

செய்ய வைத்து

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையை

சொல்ல வைத்து

நமக்கு ஏற்படக்கூடிய

ஆபத்தை நமக்கு

உணரும்படிச்

செய்ய வைத்து

நம்மை

ஆபத்திலிருந்து

காப்பாற்றக் கூடிய

செயலைச்

சகுனங்கள் மூலம்

காலம் செய்திருக்கிறது

என்பதைத் தெரிந்து

கொள்ள வேண்டும்.

 

கல் என்னை

இடித்து

விட்டது என்ற

வார்த்தைக்கு

அர்த்தம் இதுதான்

 

கல் என்னை

இடித்து விட்டது என்ற

வார்த்தைக்குள்

இருக்கும்

ஆழமான அர்த்தத்தைத்

தெரிந்து

கொள்ளும் போது

சகுனங்கள் எப்படி

செயல்படுகின்றன

என்பதையும்

சகுனங்கள்

உண்மை

என்பதையும்

நம்முடைய

முன்னோர்கள்

உணர்ந்து

சொல்லிச் சென்றவைகள்

உண்மை

என்பதையும்

தெரிந்து

கொள்ளலாம்

 

இதைத்தான்

திருவள்ளுவர்

 

“”நம்முடைய

முன்னோர்கள்

ஆராய்ந்து

ஆனுபவித்து

உணர்ந்து

சொன்னவைகளில்

உள்ள

உண்மைகளை

உணர்ந்து

அதைப்பின்பற்றி

நிம்மதியாக

வாழத் தெரியாதவன்

இறந்தும் நிம்மதியற்ற

வாழ்வை வாழும்

ஒரு பேயைப்

போலத் தான்

தானும்

உயிரோடு

இருக்கும் போதே

நிம்மதியற்று

வாழ்வான்”””

 

என்று

 

“”உலகத்தார்

உண்டுஎன்பது

இல்என்பான்

வையத்து

அலகையா

வைக்கப்படும்””

 

என்ற

திருக்குறளின்

மூலம் தெளிவு

படுத்துகிறார்.

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

------12-07-2021

////////////////////////////////////////

 

பதிவு-5- உலகத்தார்- திருக்குறள்-

 

பதிவு-5-

உலகத்தார்-

திருக்குறள்-

 

இதைத் தான் கர்மா

தன்னுடைய விளைவைக்

கொடுக்கப் போகிறது

என்று பொருள்

 

அதாவது கர்மா

07.25 மணி முதல்

07.30 மணிக்குள்

இயங்கி தன்னுடைய

விளைவை

கொடுக்கப் போகிறது

என்று பொருள்

 

அதாவது

07.25 மணி முதல்

07.30 மணிக்குள் நாம்

புளியந்தோப்பில்

பஸ்ஸிலிருந்து

கீழே விழுந்து விபத்து

நடக்க வேண்டிய

சூழ்நிலையை கர்மா

ஏற்படுத்தப் போகிறது

என்று பொருள்.

 

நாம் செய்த

கர்மாவானது

தன்னுடைய விளைவை

கொடுப்பதற்காகத்

தயார் நிலையில்

இருக்கிறது

 

கர்மா தன்னுடைய

விளைவைக்

கொடுக்கப் போகிறது

என்பது தெரியாமல்

நாம் தெருவில்

நடந்து சென்று

கொண்டிருக்கிறோம்

 

அப்போது ஒரு

கல்லில் இடிபடுகிறோம்

அப்போது நாம்

என்ன சொல்கிறோம்

என்றால்

கல் என்னை

இடித்து விட்டது

என்கிறோம்.

 

சகுனத்துடன்

தொடர்புடைய கர்மா

தன்னுடைய விளைவைக்

கொடுக்கத் தயாராக

இருக்கும் போது

சகுனத்துடன்

தொடர்புடைய காலம்

நமக்கு வரக்கூடிய

ஆபத்திலிருந்து

நம்மை எச்சரிக்கை

செய்து நம்மைக்

காப்பாற்ற வேண்டும்

என்பதற்காக

கல்லில் இடிபட்ட

நிகழ்வை வைத்து

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையைச்

சொல்ல வைத்து

காலம்

சகுனத்தின் மூலம்

நம்மைக்

காப்பாற்றுவதற்கான

செயலைச் செய்கிறது

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

நாம் செய்தோம்

என்பதைக்

குறிக்கவில்லை.

வேறு யாரோ

நமக்காக செய்தார்

நம்மைச்

செய்ய வைத்தார்

என்பதைக் குறிக்கிறது

 

அதாவது நமக்கு

ஏற்படப்போகும்

ஆபத்திலிருந்து நம்மைக்

காப்பாற்றுவதற்காக

காலம் செய்தது

என்று பொருள்

 

காலம் நம்மை

கல்லில்

இடிக்க வைத்து நம்மை

சிறிது நேரம்

அதே இடத்தில்

அந்த இடத்தை

விட்டு நகராமல்

அப்படியே

இருக்க வைத்து

விடுவதால்

புளியந்தோப்பில்

07.25 மணிக்கு

இருக்க வேண்டிய

நாம் பத்து நிமிடம்

கால தாமதாக

சென்று

07.35 மணிக்குத் தான்

புளியந்தோப்பு

செல்கிறோம்

 

புளியந்தோப்புக்கு

நாம் 07.35 க்கு

செல்வதால்

நமக்கு விபத்து

எதுவும் நடக்காது

 

ஏனென்றால்

கர்மாவானது

ஒரு குறிப்பிட்ட

காலத்தில்,

ஒரு குறிப்பிட்ட

இடத்தில்,

ஒரு குறிப்பிட்ட

நேரத்தில்,

ஓரு குறிப்பிட்ட

சூழ்நிலையில் தான்

விளைவை

ஏற்படுத்தும்

 

07.25 மணி முதல்

07.30 மணிக்குள்

சென்று இருந்தால்

நமக்கு விபத்து

ஏற்பட்டிருக்கும்

ஆனால் நாம்

07.35 மணிக்கு

புளியந்தோப்பு

சென்றதால்

நமக்கு விபத்து

என்பது

ஏற்படவில்லை

 

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

------12-07-2021

////////////////////////////////////////

பதிவு-4- உலகத்தார்- திருக்குறள்-

 

பதிவு-4-

உலகத்தார்-

திருக்குறள்-

 

நம் முன்னோர்களால்

பயன்படுத்தப்பட்டு

வந்து கொண்டு

இருக்கும் வார்த்தை

 

அனுபவ ரீதியாக

உணர்ந்து

சொல்லப்பட்ட வார்த்தை

எப்படி தவறாக

இருக்க முடியும்

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தைக்கு

அர்த்தம் தெரியவில்லை

என்று சொல்லலாம்

ஆனால் தவறு என்று

சொல்லக்கூடாது.

 

ஒன்றைப் பற்றிய

விவரங்கள்

எதுவும் தெரியாமல்

தெரியாத ஒன்றை

தவறு என்று

சொல்லக் கூடாது.

 

காலம் காலமாக

இருக்கும் ஒரு சொல்

எப்படி தவறாக

இருக்கும்

நம்முடைய

முன்னோர்கள்

பயன்படுத்திய

ஒரு சொல்

எவ்வாறு தவறாக

இருக்கும்

என்பது கூட

தெரியாமல்

அதன் அர்த்தத்தை

புரிந்து கொள்ள

முடியாமல் எவ்வாறு

அந்த வார்த்தை

தவறு என்று

சொல்ல முடியும்

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

சரியான

வார்த்தை தான்

இந்த வார்த்தை

தவறான வார்த்தை

கிடையாது

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையை

நன்றாக

ஆராய்ந்து பார்த்தால்

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

சரியான வார்த்தை

தான் என்பதைத்

தெரிந்து

கொள்ள முடியும்

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

இரண்டு

முக்கியமான

விஷயங்களை

தன்னுள் கொண்டு

இருக்கிறது

 

ஒன்று காலம்

இரண்டு கர்மா

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்ததை

காலம் கர்மா என்ற

இரண்டு முக்கியமான

விஷயங்களைத்

தன்னுள் கொண்டு

மிகப்பெரிய

ரகசியத்தை

தன்னுள் கொண்டு

இந்த பிரபஞ்சத்தில்

உலா வந்து

கொண்டு இருக்கிறது

 

சகுனங்கள் வரப்போகும்

துன்பத்திலிருந்து

நம்மை எவ்வாறு

பாதுகாக்கின்றன

என்பதையும்,

அதற்காக சகுனங்கள்

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையை

எவ்வாறு

பயன்படுத்துகின்றன

என்பதையும்

ஒரு நிகழ்வின்

மூலம் தெரிந்து

கொள்ளலாம்.  

 

பெரம்பூரில்

காலை 07.00 மணிக்கு

பஸ்ஸில் ஏறி

பிரயாணம் செய்தால்

டவுட்டன் சென்று

அடைவதற்கு

காலை 08.00 மணி

ஆகி விடுகிறது

என்று

வைத்துக் கொள்வோம்.

 

அதாவது, நாம்

பஸ்ஸில் ஏறி

பெரம்பூரிலிருந்து

டவுட்டன் சென்று

அடைவதற்கு

ஒரு மணி நேரம்

தேவைப்படுகிறது

 

07.00 மணிக்கும்

08.00 மணிக்கும்

இடைப்பட்ட நேரத்தில்

அதாவது

07.25 மணி முதல்

07.30 மணிக்குள்

பஸ்ஸைப் பிடித்து

பிரயாணம் செய்து

கொண்டிருக்கும் நாம்

அந்த இடைப்பட்ட

நேரத்தில்

புளியந்தோப்பில்

இருக்கும் போது

நாம் பஸ்ஸிலிருந்து

கீழே விழுந்து

பலத்த அடிப்பட்டு

கஷ்டப்பட

வேண்டியிருக்கிறது.

 

இது தான் நாம்

அனுபவிக்க வேண்டியது.

இதைத் தான்

நாம் கர்மா

என்கிறோம்.

 

----என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

------12-07-2021

////////////////////////////////////////////////////

 

பதிவு-3- உலகத்தார்- திருக்குறள்-

 

பதிவு-3-

உலகத்தார்-

திருக்குறள்-

 

அவரால் மட்டுமே

நாம் செய்யும் செயல்

நல்லவிதமாக

முடியுமா அல்லது

கெட்ட விதமாக

முடியுமா என்பதை

தெரிந்து கொள்வதற்கு

மட்டும்

சகுனங்கள்

பயன்படுவதில்லை

என்பதையும்

 

துன்பத்திலிருந்து

நம்மைப் பாதுகாக்கும்

வேலையையும்

சகுனங்கள்

செய்கின்றன

என்பதையும்

தெரிந்து

கொள்ள முடியும்.

 

நமக்கு வரப்போகும்

துன்பத்தை

நாம் உணர்ந்து

கொள்ள வேண்டும்

என்பதற்காக

நம்மாலோ அல்லது

நம்மைச் சுற்றி

உள்ளவர்களாலோ

எழுப்பப்படும்

வார்த்தைகள்

பலவாகும் அவற்றில்

ஒன்று தான்

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

நம்மைப்

பாதுகாப்பதற்காக

வெளிப்படும்

வார்த்தை என்று

கூட சொல்லலாம்

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தை

சமுதாயத்தில்

வாழ்ந்த நம்முடைய

முன்னோர்கள்

பயன்படுத்திய வார்த்தை

 

சமுதாயத்தில்

உள்ளவர்கள்

காலம் காலமாக

பயன்படுத்திக்

கொண்டு

இருக்கும் வார்த்தை

 

சமுதாயத்தில்

உள்ளவர்கள் தற்போது

பயன்படுத்திக் கொண்டு

இருக்கும் வார்த்தை

 

அற்புதம் நிறைந்த

பல விஷயங்களைத்

தன்னுள் கொண்டு

இயங்கிக் கொண்டு

இருக்கும் வார்த்தை

 

பிரபஞ்ச ரகசியங்களில்

முக்கிய

ரகசியங்களைத் தன்னுள்

மறைத்துக் கொண்டு

உலா வந்து கொண்டு

இருக்கும் வார்த்தை

 

கல் என்னை

இடித்து விட்டது என்ற

வார்த்தையில் உள்ள

உண்மைப் பொருளை

உணர்ந்தவர்கள்

அறிவு தெளிவு பெற்று

அமைதியாக

இச்சமுதாயத்தில்

வாழ்ந்து வருகின்றனர்

 

ஆனால் கல் என்னை

இடித்து விட்டது என்ற

வார்த்தையில் உள்ள

உண்மைப்

பொருளை உணர

முடியாதவர்கள் தான்

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையை

கிண்டல் கேலி

செய்து வருகின்றனர்.

 

கல் வந்து எப்படி

நம்மை இடிக்கும்

நாம் தான் கல்லில்

சென்று இடிக்க வேண்டும்

 

கல்லுக்கு என்ன

உயிர் இருக்கிறதா

கல் வந்து

நம்மை இடிப்பதற்கு

நமக்கு தான்

உயிர் இருக்கிறது

நாம் தான் சென்று

கல்லை இடிக்க வேண்டும்.

 

கல் என்னை

இடித்து விட்டது என்று

சொல்வது தவறு

நாம் தான்

கல்லில் இடித்தோம் என்று

சொல்வது தான்

சரி என்று

சொல்லக் கூடியவர்கள்

இச்சமுதாயத்தில் நிறைய

எண்ணிக்கையில்

இருக்கிறார்கள்

 

கல் என்னை

இடித்து விட்டது

என்ற வார்த்தையை

கேலி செய்பவர்கள்

கிண்டல் செய்பவர்கள்

இந்த வார்த்தை

தவறாக சொல்லப்பட்ட

வார்த்தை என்பர்

 

தவறாக சொல்லப்பட்ட

வார்த்தையை

நாம் தவறாக

சொல்லக்கூடாது

சரியாக

சொல்ல வேண்டும்

என்பர்

 

இந்த சமுதாயத்தில்

காலம் காலமாக

சொல்லப்பட்டு

வந்து கொண்டு

இருக்கும் வார்த்தை

 

-------என்றும் அன்புடன்

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

------12-07-2021

////////////////////////////////////////////////////