August 15, 2019

பரம்பொருள்-பதிவு-54


            பரம்பொருள்-பதிவு-54

சிவநேசர் :
“ஐயனே !
பூம்பாவை
இறந்து போனதால்
எங்களுக்கு
ஏற்பட்ட துயரத்தை
பூம்பாவையை
உயிரோடு
எழுப்பியதன்
மூலம் தாங்கள்
தீர்த்து வைத்து
விட்டீர்கள்”

“உங்களுக்கு
எப்படி நன்றி
சொல்வது என்றே
தெரியவில்லை!”

“எங்களுக்கு
ஏற்பட்ட
மகிழ்ச்சியை எப்படி
வெளிப்படுத்துவது
என்றே
தெரியவில்லை!”

“நன்றி !
சொல்வதற்கு
வார்த்தைகளை
வெளிப்படுத்த
எங்களுக்கு
தெரியவில்லை!”

“உணர்ச்சி
வசப்பட்டு
இருப்பதால் என்ன
செய்வது என்று  
தெரியவில்லை!”

“இருந்தாலும்
நான் ஏற்கனவே
வாக்கு
கொடுத்தது போல்
என்னுடைய
அன்பு மகள்
பூம்பாவையை
தங்களுக்கு
திருமணம்
செய்து கொடுக்க
விரும்புகிறேன்”

“தாங்கள்
பூம்பாவையை
தங்களுடைய
இல்லறத் துணையாக
ஏற்றுக் கொள்ள
வேண்டும்”

" ஏனென்றால்
பூம்பாவை
உங்களுக்கென்றே
வளர்க்கப்பட்டவள் ;
உங்களுக்கு
பணிவிடை
செய்வதற்கு என்றே
வளர்க்கப்பட்டவள் ;
உங்களுடைய
இல்லறத்
துணைவியாகி
உங்களுக்கு
சேவை செய்வதற்கு
என்றே
வளர்க்கப்பட்டவள் ; '

" பூம்பாவையை
உங்கள்
இல்லறத்
துணையாக
ஏற்றுக் கொள்ள
வேண்டும் “

திருஞான சம்பந்தர் :
" சிவநேசரே !
பூம்பாவை பிறக்கும்
போதும் தங்கள்
மகளாக பிறந்தாள் ;

 'பூம்பாவை வளரும்
போதும் தங்கள்
மகளாக வளர்ந்தாள் ;

" பூம்பாவை இறக்கும்
போதும் தங்கள்
மகளாக இறந்தாள் "

" ஆனால் .
இறந்த பூம்பாவைக்கு
நான் உயிர்
கொடுத்து உயிரோடு
எழுப்பிய
காரணத்தினால்
உயிர்ப் பெற்ற
பூம்பாவை
என்னுடைய
மகள் ஆகிறாள் "

"மகளை நான் எப்படி
திருமணம் செய்து
கொள்ள முடியும் ? "

(பூம்பாவையை
நோக்கி திரும்பி )

திருஞான சம்பந்தர் :
" பூம்பாவை…………….-"

அங்கம் பூம்பாவை :
“ஐயனே……………………….!”

திருஞான சம்பந்தர் :
“பூம்பாவையே !

நீ ! உயிர்த்தெழுந்தது
சிவபெருமானுக்கு
தொண்டு
செய்வதற்காகவே”

“நீ! இந்த
திருமயிலையிக்
கோயிலிலேயே
தொண்டு செய்து
வருவாயாக”

“சிவபெருமானுக்கு
தொண்டு செய்து
சிவனடி சேர்வாயாக”

அங்கம் பூம்பாவை :
“அப்படியே ஆகட்டும்”

“அங்கம் பூம்பாவை
திருமணம்
செய்து கொள்ளாமல்
சிவபெருமானுக்கு
தொண்டுகள்
பலவற்றை செய்து
சிவனடி சேர்ந்தார்”

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
---------  15-08-2019
//////////////////////////////////////////////////////////