October 24, 2019

பரம்பொருள்-பதிவு-75


            பரம்பொருள்-பதிவு-75

"நாரதர் பேசிய
வார்த்தையில் இருந்த
அர்த்தங்களையும் ;
அவர் வழங்கிய
அறிவுரையில் இருந்த
உண்மைகளையும்;
அவர் சொன்ன
கதையில் இருந்த
நிஜங்களையும்;
பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும் தீவிரமாக
ஆராய்ந்து பார்த்து ;
ஆலோசனையில்
ஈடுபட்டனர்;"

"அதுமட்டுமில்லாது
இறந்த காலத்தில்
தாங்கள் ஒற்றுமையாக
இருந்த
நிலைமைகளையும் ;
நிகழ்காலத்தில் தாங்கள்
ஒற்றுமையாக இருந்து
கொண்டிருக்கின்ற
நிலைமைகளையும்;
யோசித்துப் பார்த்து
எதிர்காலத்தில் தாங்கள்
இவ்வாறே ஒற்றுமையாக
இருக்க வேண்டுமென்றால்
ஒரு விதியை உருவாக்க
வேண்டியது அவசியம்
என்பதை உணர்ந்து ;
பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும் சிந்தித்து
ஒரு முடிவு எடுத்து
ஒரு விதியை
உருவாக்கினர்,"

விதி :
"பஞ்ச பாண்டவர்களில்
ஒவ்வொருவரும்
சுழற்சி முறையில்
ஒரு வருடம்
திரௌபதியுடன் குடும்பம்
நடத்த வேண்டும்;
அவ்வாறு திரௌபதியுடன்
பஞ்ச பாண்டவர்களில்
ஒருவர் குடும்பம் நடத்திக்
கொணடிருக்கும் போது
அவருக்கு மட்டுமே
திரௌபதியின் மேல்
முழு உரிமை உண்டு ;,
அவருக்கு மட்டுமே
திரௌபதி மனைவியாக
இருந்து கொண்டிருப்பார்;  
அவருக்கு மட்டுமே
திரௌபதி மனைவியாக
இருந்து கணவனுக்கு
செய்ய வேண்டிய
அனைத்து கடமைகளையும்
செய்து கொண்டிருப்பார்;
அந்த காலகட்டத்தில்
அவர்கள் இருவருக்கு
மட்டுமே கணவன்
மனைவியாக வாழும்
உரிமை உண்டு;
மற்ற பஞ்ச
பாண்டவர்களுக்கு அந்த
உரிமை இல்லை ;".

"அந்த காலகட்டங்களில்
பஞ்ச பாண்டவர்களில்
உள்ள மற்றவர்களுக்கு
திரௌபதியின் மேல்
எந்தவிதமான
உரிமையும் கிடையாது ;
திரௌபதியுடன்
குடும்பம் நடத்திக்
கொண்டிருப்பவரைத்
தவிர்த்து மற்றவர்கள்
திரௌபதியிடம்
எந்தவிதமான உரிமையும்
கோரவும் முடியாது ;
கோரவும் கூடாது. ; "

"திரௌபதியும்
திரௌபதியுடன் குடும்பம்
நடத்திக் கொண்டிருக்கும்
பஞ்ச பாண்டவர்களில்
ஒருவரும் தனித்து
ஒரு அறையில்
இருக்கும் போது
பஞ்ச பாண்டவர்களில்
மற்றவர்கள்
அந்த அறைக்குள்
நுழையக்கூடாது ;
அவ்வாறு நுழைந்தால்
அது குற்றச்
செயலாகக் கருதப்படும்;  
அந்த குற்றச் செயலுக்கு
தண்டனையாக குற்றம்
இழைத்தவர்
12 மாதங்கள் வனத்தில்
பிரம்மச்சாரியாக
வசிக்க வேண்டும் ;"

--------என்ற விதியை
வகுத்தனர்"

"பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும் கலந்து
ஆலோசித்து முடிவு
செய்து தாங்கள்
எதிர்காலத்தில்
ஒற்றுமையாக
இருக்க வேண்டும்
என்பதற்காக தாங்கள்
தங்களுக்காக வகுத்த
விதியை நாரதரிடம்
சொன்னார்கள்"

"இதனைக் கேட்ட
நாரதர் மிக்க மகிழ்ச்சி
அடைந்து பஞ்ச
பாண்டவர்களையம்,
திரௌபதியையும்
ஆசிர்வதித்து வாழ்த்தி
விடைபெற்றார், "

"பஞ்ச பாண்டவர்களில்
மூத்தவராக தர்மர்
இருந்த காரணத்தினால்
முதலில் தர்மர்
திரௌபதியுடன்
ஒரு வருடம்
குடும்பம் நடத்தும்
உரிமை பெற்றார்.
தர்மர் திரௌபதியுடன்
ஒரு வருடம்
குடும்பம் நடத்திக்
கொண்டிருக்கும் போது
பஞ்ச பாண்டவர்களும்
திரௌபதியும் தாங்கள்
வகுத்த விதியை
எந்தவிதமான
பிசகும் இல்லாமல்
கடைபிடித்து பின்பற்றி
வாழ்ந்து வந்தனர்"

"தர்மரும்., திரௌபதியும்
ஒரு வருடம் குடும்பம்
நடத்திக் கொண்டிருந்த
சூழ்நிலையில்
ஒரு நாள்……….?"

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
------------24-10-2019
//////////////////////////////////////////