July 17, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-44


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-44

கிருஷ்ணர் வாழ்ந்து
கொண்டு இருக்கும்
செல்வச் செழிப்பைப்
பார்த்து வியந்த
குசேலர்
தான் கொண்டு
வந்த அவலை
கிருஷ்ணருக்கு
கொடுக்கலாமா
வேண்டாமா என்று
யோசித்துக்
கொண்டிருந்ததை
குறிப்பால் உணர்ந்த
கிருஷ்ணர்
நண்பா என்னை
பார்க்க வந்தால்
வெறும் கையுடன்
வர மாட்டேயே
என்ன கொண்டு
வந்திருக்கிறாய்
என்று குசேலரைப்
பார்த்து கேட்டார்
கிருஷ்ணர்.
குசேலர் தான் கொண்டு
வந்த அவலை
வெட்கப் பட்டுக்
கொண்டே
கிருஷ்ணரிடம் கொடுத்தார்

ஒன்றாகப் படித்து
நண்பராக இருந்த
இருவரில் ஒருவர்
உயர்ந்த நிலையிலும்
மற்றொருவர்
தாழ்ந்த நிலையிலும்
இருக்கும் நிலையில்
பிற்காலம்
சந்தித்துக் கொண்டால்
உயர்ந்த இடத்தில்
உள்ள நண்பர்
தாழ்ந்த நிலையில்
உள்ள நண்பருடன்
நட்பு வைத்துக்
கொள்ள மாட்டார்

உயர்ந்த இடத்தில்
இருப்பவர்கள் தனக்கு
சமமானவர்களுடன்
தான் நட்பு
வைத்துக் கொள்வார்கள்

இவரை நண்பராக
வைத்துக்
கொள்வதன் மூலம்
தனக்கு என்ன
லாபம் என்பதை
கணக்கில்
எடுத்துக் கொண்டு தான்
நட்பு வைத்துக்
கொள்வர்.

ஆனால் கிருஷ்ணர்
அரசராக இருந்தும்
தன்னுடன் படித்தவர்
தனக்கு
நண்பராக இருந்தவர்
என்பதை
நினைவில் கொண்டு
ஏழையாக இருந்தாலும்
குசேலரை கட்டி
அணைத்து ஆனந்தக்
கண்ணீர் விட்டு
அன்புடன் உபசரித்த
கிருஷ்ணரின் செயலிலிருந்து
கிருஷ்ணரின்
உண்மையான நட்பு
வெளிப்பட்டது.
இது தான் எதையும்
எதிர்பார்க்காத நட்பு

என்னுடைய
நண்பரான குசேலர்
செல்வம் வேண்டும்
என்று என்னைத் தேடி
ஒரு நாளும்
வந்ததில்லை
அவருடைய மனைவி
மக்களுக்காக வந்திருக்கிறார்
குசேலருடைய
ஏழ்மையை போக்குவதற்கு
நான் செல்வச்
செழிப்பை
அவருக்கு அளிப்பேன்
என்று முடிவு
எடுத்தார் கிருஷ்ணர்

கிருஷ்ணர் ஒருபிடி
அவலை எடுத்து வாயில்
போட்டு மென்றார்
இரண்டாவது பிடியை
சாப்பிட முயற்சிக்கும்போது
ருக்மணி கிருஷ்ணரின்
கையைப் பற்றினாள்
எல்லா இடங்களிலும்
நீக்கமற நிறைந்து
இருப்பவனே
ஒருவருக்கு இந்த
உலகத்திலோ அல்லது
மேல் உலகத்திலோ
எல்லாவிதமான
சம்பத்துக்களையும்
அடைவதற்கு
இந்த ஒரு
பிடி போதுமே
என்றவுடன் கிருஷ்ணர்
போதும் என்று
நிறுத்தினார்.

கிருஷ்ணர் அவலை
ரசித்து ருசித்து
சாப்பிட்டதைப்
பார்த்த குசேலர்
ஏழையாக இருப்பவனை
எந்தவித ஆதாயமும்
இல்லாத ஒருவனை
ஒரு காலத்தில்
ஒன்றாக படித்தோம்
நண்பர்களாக இருந்தோம்
என்பதை
நினைவில் வைத்து
ராஜா என்ற உயர்ந்த
நிலையில் இருந்தும்
ஏழையாக இருக்கும்
என்னை
நினைவில் வைத்து
நட்பு பாராட்டிய
கிருஷ்ணரின் உயர்ந்த
குணத்தை எண்ணி
மகிழ்ச்சி கொண்ட
குசேலர் இவ்வளவு
உயர்ந்த குணங்கள்
கொண்ட கிருஷ்ணரிடம்
உதவி கேட்பது
எனது நட்புக்கு
களங்கம்
ஏற்படுத்தி விடும்
என்று நினைத்த
குசேலர்
கிருஷ்ணரிடம் தன்
குடும்ப ஏழ்மையைச்
சொல்லி உதவி
கேட்கவில்லை.
இதன் மூலம்
“”””குசேலரின்
நட்பு வெளிப்பட்டது
இது தான் எதையும்
எதிர்பார்க்காத நட்பு”””””

குசேலர்
கஷ்டத்தில் இருக்கிறார்
என்பதை உணர்ந்தும்
குசேலர் நான்
ஏழ்மையால் கஷ்டப்
படுகிறேன்
என்னுடைய கஷ்டத்தை
போக்குவதற்கு
உதவி செய்யுங்கள்
என்று தன்னிடம்
கேட்கவில்லை
என்பதை உணர்ந்தும்
குசேலர் ஏழ்மையால்
கஷ்டப்படுகிறார்
என்பதை உணர்ந்து
குசேலருக்கு
உதவி செய்த
“””””கிருஷ்ணரின் நட்பு
எதையும்
எதிர்பார்க்காத நட்பு””””


---------இன்னும் வரும்
---------17-07-2018
///////////////////////////////////////////////////////////