April 23, 2017

இயேசுகிறிஸ்து-காகபுசுண்டர்-இருந்திட்-பதிவு-80-1

        இயேசு கிறிஸ்து--காகபுசுண்டர்-இருந்திட்டேன்-பதிவு-80-(1)

                                  """"பதிவு எண்பதை விரித்துச் சொல்ல
                          ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

இயேசு கிறிஸ்து:

"அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்."
                                                ---------- லூக்கா - 5 : 4

"அதற்கு சீமோன்: ஐயரே, இரா முழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்"
---------- லூக்கா - 5 : 5

"அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்"
---------- லூக்கா - 5 : 6

"அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள் அவர்கள்வந்து இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்"
---------- லூக்கா - 5 : 7

"சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போக வேண்டும் என்றான்."
---------- லூக்கா - 5 : 8

"அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டான படியினால் அப்படிச் சொன்னான்."
 ---------- லூக்கா - 5 : 9

"சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்."
---------- லூக்கா - 5 : 10

"அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்."
---------- லூக்கா - 5 : 11


உலக அளவில் எடுத்துக் கொண்டால்
மனிதர்கள் செய்யும் தொழிலை
இரண்டு நிலைகளில்
பிரித்து விடலாம்

                     ஒன்று  :   பரம்பரைத் தொழில்
                 இரண்டு  :   பரம்பரை அல்லாத  தொழில்

பரம்பரைத் தொழிலை
பரம்பரை பரம்பரையாக செய்யும்
தொழில் என சொல்லலாம்.

பரம்பரை அல்லாத தொழிலை
பரம்பரைத் தொழிலிருந்து விலகி செய்யும்
தொழிலைச் சொல்லலாம்.


பரம்பரைத் தொழில்:
பரம்பரைத் தொழிலை
பரம்பரை பரம்பரையாக செய்யும்
தொழில் என சொல்லலாம்.

பரம்பரைத்  தொழிலை
மூன்று நிலைகளில் பிரித்து விடலாம்

1.ஒரு தொழில் செய்யும்போது அதனால் நன்மை ஏற்பட்டால்
                   அதை பரம்பரை பரம்பரையாக செய்வது

2.ஒரு தொழில் செய்யும்போது பயன் விளையாவிட்டாலும்
                   கலையின் மேல் உள்ள பற்றால் அதை விடாமல்
                   அதை பரம்பரை பரம்பரையாக செய்வது

3.ஒரு தொழில் செய்யும்போது பயன் அதிகம் இல்லாவிட்டாலும்
                   பிழைப்புக்காக விருப்பம் இல்லாமல் பரம்பரை பரம்பரையாக 
                    செய்வது.

பரம்பரைத் தொழிலின்
மூன்று நிலைகள்,
வெவ்வேறு தன்மைகளைத்
தன்னுள் கொண்டது;
வெவ்வேறு இயல்புகளைத்
தன்னுள் கொண்டது;
மூன்று நிலைகளைப் பற்றி
நாம் அறிந்து,
கொண்டோமேயாகில்,
பரம்பரைத் தொழிலைப் பற்றி
நாம் தெரிந்து கொள்ளலாம்.


1.ஒரு தொழில் செய்யும்போது
  அதனால் நன்மை ஏற்பட்டால்
   அதை பரம்பரை பரம்பரையாக செய்வது

ஒரு தொழில் ஒருவர் செய்யும் போது
அதனால் விளையும் பயன்களைப் பார்த்து,
அதனால் விளையும் நன்மைகளைப் பார்த்து,
அதனால் விளையும் உணர்வுகளைப் பார்த்து,
அதனால் விளையும் புகழினைப் பார்த்து,
அதனால் விளையும் நன்மைகளைப் பார்த்து,
அதனால் விளையும் பெருமைகளைப் பார்த்து,
அதனால் விளையும் இன்பங்களைப் பார்த்து,
அதனால் விளையும் உயர்வுகளைப் பார்த்து,
அதனால் விளையும் சந்தோஷங்களைப் பார்த்து,
அதனால் விளையும் சிறப்புகளைப் பார்த்து,
தன்னுடைய வேலையை
தன்னுடைய மகனும் பார்க்க வேண்டும்;
தன்னுடைய வேலையை
தன்னுடைய மகனும் செய்ய வேண்டும்;
தன்னுடைய வேலையை
தன்னுடைய மகனும் பின்பற்ற வேண்டும்;
என்று முடிவெடுத்து,
தன் மகனை அதே வேலையை ,
தான் செய்த அதே வேலையை,
தன் மகன் செய்ய வேண்டும்
என்ற முடிவெடுத்து,
தன் மகனுக்கு
அந்த வேலையை,
தான்  செய்த வேலையை,
தன் மகனை செய்யச் சொல்வது.
மகன் மட்டும்
அதை விருப்பப்படாமல்
செய்வது கிடையாது.
தந்தை சொல்வதால் மட்டும்
மகன் தந்தை
செய்த தொழிலை செய்வதில்லை.
தந்தை செய்த தொழில்
மகனுக்கு பிடித்திருக்க
வேண்டும்;
தந்தை செய்த தொழிலை
மகன் விரும்ப வேண்டும்;
தந்தை செய்த தொழிலை
செய்வதற்கு மகனுக்கு
ஆர்வம் இருக்க வேண்டும்;
தந்தை செய்த தொழிலை
செய்வதற்கு மகனுக்கு
விருப்பம் இருந்தால் மட்டுமே,
தந்தை செய்த தொழிலை
மகன் செய்வார்.

மகனுக்கு விருப்பம் இல்லாமல்,
மகனுக்கு ஆர்வம் இல்லாமல்,
தந்தை சொல்கிறார்
என்பதால் மட்டுமே,
ஒரு மகன் தந்தையின் தொழிலை
செய்ய மாட்டார்.
விருப்பப்பட்டால் மட்டுமே
மகன் தந்தையின் தொழிலை செய்வார்.

தந்தையை எடுத்துக் கொள்வோம்
தந்தை சினிமாத் துறையில் இருக்கிறார்;
நடிப்புத் துறையில் நடிகனாக இருக்கிறார்;
போற்றப்படும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்;
புகழப்படும் நிலை உள்ள இடத்தில் இருக்கிறார்;
மக்களை வசீகரிக்கும் இடத்தில் இருக்கிறார்;
ரசிகர்கள் வணங்கும் இடத்தில் இருக்கிறார்;
புகழின் உச்சியில் இருக்கிறார்;
இன்பத்தில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்;
சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருக்கிறார்;
உற்சாகத்தில் தவழ்ந்து கொண்டு இருக்கிறார்;
சந்தோஷத்தில் தவழந்து கொண்டு இருக்கிறார்;
உயர்வுகளில் உயர்ந்து கொண்டு இருக்கிறார்;
இத்தகைய உயர்ந்த நிலையை
அனுபவித்த தந்தை,
தான் நடிப்புத் துறையில் அனுபவித்த
இந்த நிலையை,
தான் சினிமாத் துறையில் அனுபவித்த
இந்த நிலையை,
தான் பெரிய திரையில் அனுபவித்த
இந்த நிலையை,

தான் அடைந்த
இத்தகைய உயர்ந்த நிலைகளை
தன் மகனும் அனுபவிக்க வேண்டும்;
தான் அடைந்த
இத்தகைய மகிழ்ச்சி நிலைகளை
தன் மகனும் அடைய வேண்டும்;
தான் அடைந்த
இத்தகைய புகழ் நிலைகளை
 மகனும் அடைய வேண்டும்;
இத்தகைய புகழ் நிலைகளை
தன் மகனுக்கும்
கிடைக்க வேண்டும் என்று நினைத்து,
இதே நிலை தன் மகனும்
அடைய வேண்டும்
என்று விருப்பம் கொண்டு,
தான் செய்த தொழிலையே
தன் மகனை செய்யச் சொல்வது;
தான் செய்த தொழிலில்
தன் மகனை ஈடுபடச் சொல்வது;

தந்தை வற்புறுத்துகிறார்
என்ற காரணத்தினாலோ,
தந்தை தொந்தரவு செய்கிறார்
என்ற காரணத்தினாலோ,
எந்த மகனும்
தந்தை  செய்த தொழிலை
செய்வதில்லை.
விருப்பம் இருந்தால் மட்டுமே
ஆர்வம் இருந்தால் மட்டுமே
தந்தை செய்த தொழிலை
மகன் செய்வார்.
இல்லையென்றால்
தந்தை செய்த தொழிலை மகன்
செய்ய மாட்டார்.

பலன் இருந்தால் மட்டுமே;
ஆர்வம் இருந்தால் மட்டுமே;
உபயோகம் இருந்தால் மட்டுமே;
நன்மை இருந்தால் மட்டுமே;
மகன் தந்தை  செய்த
தொழிலை செய்வார்;

மகன்
தந்தை பெறும் புகழினைப் பார்க்கிறார்;
தந்தை பெறும் இன்பங்களைப் பார்க்கிறார்;
தந்தை பெறும் உயர்வுகளைப் பார்க்கிறார்;
தந்தை பெறும் சந்தோஷங்களைப் பார்க்கிறார்;
தந்தை பெறும் சிறப்புகளைப் பார்க்கிறார்;
தானும் அவ்வாறு
தந்தை செய்த தொழிலையே பின்பற்றி
செய்வதன் மூலம்,
நாமும் தந்தை அடைந்த
அந்தகைய இன்பங்களைப் பெறலாம்;
துன்பம் நீங்கி இன்பம் பெற்று வாழலாம்;
கவலை நீங்க¤ சந்தோஷம் பெற்று வாழலாம்;
என்று நினைத்து,
தந்தை செய்த தொழிலில் மகன் ஈடுபடுவார்.
தந்தை, மகன், பேரன் என்று
அடுத்து அடுத்து தொடர்ந்தாற்போல்
அதே தொழிலைச் செய்வார்கள்.

பலன் இருந்தால் மட்டுமே
ஒரு தொழிலை தொடர்ந்து
பரம்பரை பரம்பரையாக செய்வது என்பது,
பயனுடன் கூடிய பரம்பரைத் தொழில்
என்று சொல்லலாம்.

பயன் இருந்தால் மட்டுமே
பரம்பரை பரம்பரையாக தொழிலைச் செய்வது
பயன் இருந்தால் மட்டுமே செய்யக்கூடிய
பரம்பரைத் தொழில்.



2.ஒரு தொழில் செய்யும்போது
 பயன்   விளையாவிட்டாலும்
  கலையின் மேல் உள்ள பற்றால்
  அதை விடாமல்
  அதை பரம்பரை பரம்பரையாக செய்வது

பரம்பரைத் தொழிலை விருப்பம்
கொண்டு பயன் இல்லாவிட்டாலும்
செய்வது.

ஒருவர் ஒரு தொழிலைச் செய்கிறார்
அதனால் பணவரவு இல்லை,
அதனால் உபயோகம் இல்லை,
அதனால் எந்தப் பயனும் இல்லை,
அதனால் எந்த உயர்வும் இல்லை,
வாழ்க்கையை ஓட்டுவது
கஷ்டமாக இருக்கிறது;
வாழ்க்கையை நடத்துவதே
கஷ்டமாக இருக்கிறது;

வாழ்க்கையை நடத்துவதே
கவலையாக இருக்கிறது;
வாழ்க்கையை நடத்துவதே
சிக்கலாக இருக்கிறது;
வாழ்க்கையை நடத்துவதே
துயரமாக இருக்கிறது;
என்ற நிலை  இருந்தாலும்
பரவாயில்லை
உயர்ந்த கலை அது
அழிந்து விடக் கூடாது;
உயர்ந்த கலை அது
மறைந்து விடக்கூடாது;
உயர்ந்த கலை அது
இறந்து விடக் கூடாது;
என்று முடிவெடுத்து
தந்தை தன் மகனை
வருமானம் அதிகம்
இல்லாவிட்டாலும் பரவாயில்லை
உயர்ந்த கலையை அழியாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்;
உயர்ந்த கலையை மறையாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்;
உயர்ந்த கலையை இறக்காமல்
பார்த்துக் கொள்ள வேண்டும்;
உயர்ந்த கலையை இச்சமுதாயம்
இழக்காமல் பார்த்துக்
கொள்ள வேண்டும்;
என்ற உயர்ந்த நோக்கில்
தன் வேலையை
தன் பிள்ளையும் செய்ய வேண்டும்;
தன் வேலையை தன்
பிள்ளையும் பின்பற்ற வேண்டும்;
என்று முடிவெடுத்து
மகனை பின்பற்றச் சொல்லலாம்.

ஆனால் மகன்
விருப்பப்பட்டால் மட்டுமே
பின்பற்றுவான்.

தந்தை படும் கஷ்டங்களைப் பார்த்தும்;
தந்தை படும் இன்னல்களைப் பார்த்தும்;
தந்தை படும் அவதிகளைப் பார்த்தும்;
தந்தை படும் துயரங்களைப் பார்த்தும்;
தந்தை படும் அவமானங்களைப் பார்த்தும்;
தந்தை படும் துன்பங்களைப் பார்த்தும்;
தந்தை பெற்ற இழப்புகளைப் பார்த்தும்;
தந்தை பெற்ற சம்பளத்தைப் பார்த்தும்;
தந்தை சிந்திய கண்ணீரைப் பார்த்தும்;
மனம் கலங்காமல் இருந்தால் மட்டுமே.
மனம் அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே,
மனம் உயர்ந்த கலை அழியக்கூடாது
என்று உணர்ந்தால் மட்டுமே,
மகன் குறைவான வருமானம்
இருந்தாலும் பரவாயில்லை;
வாழ்வில் கவலைகள்
இருந்தாலும் பரவாயில்லை;
வாழ்வில் துயரங்கள் கண்ணை
நனைத்தாலும் பரவாயில்லை;
வாழ்வில் அவமானங்கள்
இதயத்தை நனைத்தாலும் பரவாயில்லை;
உயர்ந்த கலை அழியக்கூடாது
அதை நாம் பின்பற்றி,
அந்த தொழிலைச் செய்து,
அந்த தொழிலை
அந்த உயர்ந்த தொழிலை
மறையாமல் பாதுகாப்போம்
என்று முடிவெடுத்து,
பின்பற்றினால் மட்டுமே,
எந்தவித பயனும் இல்லாத
குறைவான வருமானம் கொண்ட,
குறைவான வருமானம் மட்டுமே
கொடுக்கக்கூடிய,
தொழிலை செய்வார்.

தந்தை மட்டுமே உயர்ந்த
மனப்பான்மை கொண்டவராக
இருந்தால் மட்டும் போதாது;
மகனும் உயர்ந்த மனப்பான்மை
கொண்டவராக இருக்க வேண்டும்;
அப்படி இருந்தால் மட்டுமே,
வருமானம் குறைவாக இருக்கும்;
வருமானம் குறைவாக அளிக்கும்;
தொழிலை ,
உயர்ந்த கலையாக கருதப்படும் தொழிலை,
பரம்பரை பரம்பரையாக செய்ய முடியும்.

சிற்பம் வடிப்பது என்பது
ஒரு உயர்ந்த கலை;
சிற்பம் செதுக்குவது என்பது
ஒரு உயர்ந்த கலை;
ஒரு உயிரோட்டமான கலை;
ஒரு உன்னதமான கலை;
ஒரு சிறப்பு வாய்ந்த கலை;
கல்லில் கலை வண்ணம் படைப்பது;
கல்லில் கவித்துவம் படைப்பது;
கல்லில் உயிரோட்டம் படைப்பது;
கல்லை உயிருள்ளதாக மாற்றுவது;

கல்லை உயிரோட்டமுள்ள
ஒரு சிற்பமாக
மாற்றுகிறார்கள் சிற்பிகள்.
சிலையில் உயிரோட்டம்
தவழும் வகையில்
சிற்பம் வடிக்கிறார்கள்;
சிற்பம் செய்வதால்,
சிற்பம் வடிப்பதால்,
சிற்பம் செதுக்குவதால்,
தற்போது அதிக அளவில்
வருமானம் இல்லை;
பிழைப்பை நடத்துவதே
கடினமாக உள்ளது;
இருந்தாலும் உயர்ந்த கலை
அழியக்கூடாது என்பதற்காக,
ஒருவர் பின்பற்றுவது மட்டுமல்லாமல்,
தன் மகனையும் பின்பற்றச் சொல்லுவது,
மகனும் பெருந்தன்மையுடன்
இருந்தால் மட்டுமே,
தந்தைக்கு இருந்த பெருந்தன்மை
மகனுக்கும் இருந்தால் மட்டுமே,
மகனும் உயர்ந்த மனப்பான்மையுடன்
இருந்தால் மட்டுமே,
வருமானம் குறைவாக இருந்தாலும்,
எந்தவிதமான உயர்வுகளும் ஏற்படாது
என்று தெரிந்தாலும்,
உயர்வதற்கு வழி இல்லை
என்று தெரிந்தாலும்,
எந்த புகழும் ஏற்படாது
என்று தெரிந்தாலும்,
எந்த உயர்ந்த நிலைகளும்
கிடைக்காது என்று தெரிந்தாலும்,
ஒரு கலையை அழியாமல்
பாதுகாக்க வேண்டும்,
என்று மகன் நினைத்து,
தந்தை பின்பற்றிய உயர்ந்த கலையை
உயர்ந்த தொழிலாக மதிக்கப்பட
வேண்டிய கலையை,
உயர்ந்த தொழிலாக போற்றப்பட
வேண்டிய கலையை,
உயர்ந்த நிலையில்
வைத்துப் போற்றப்பட வேண்டிய
கலையை,
மகன் விருப்பப்பட்டு பின்பற்றி
அந்த தொழிலை செய்தால் மட்டுமே,
வருமானம் குறைவாக இருந்தாலும்,
உயர்ந்த கலை என்ற நோக்கில்
மகன் பின்பற்றினால் மட்டுமே,
மகன் செய்தால் மட்டுமே,
தந்தைக்குப் பிறகு மகன்
ஏற்று செய்தால் மட்டுமே,
அந்த தொழிலை மகன் பின்பற்றுவான்
இல்லையென்றால் மகன்
பின்பற்ற மாட்டான்.
மகன் விருப்பப்பட்டு செய்தால்
மட்டுமே பின்பற்றுவான்.

இது தான்
பயன் இல்லாவிட்டாலும்
தந்தை செய்வது உயர்ந்த கலை
என்பதை உணர்ந்து
அத்தகைய உயர்ந்த கலை
அழிந்து விடக்கூடாது
என்ற நோக்கில்
மகன் உயர்ந்த மனப்பான்மை
கொண்டு தந்தை பின்பற்றிய
தொழிலை செய்வது.



3.ஒரு தொழில் செய்யும்போது
  பயன் அதிகம் இல்லாவிட்டாலும்
  பிழைப்புக்காக விருப்பம் இல்லாமல்
  பரம்பரை பரம்பரையாக 
  செய்வது.

தந்தை செய்யும் தொழில்
இலாபம் இல்லாவிட்டாலும்
மகன் செய்வது
வேறு வழி இல்லாவிட்டாலும்
பிழைப்புக்காக பரம்பரைத்
தொழிலைச் செய்வது.
அப்பா செய்த தொழிலை
மகன் செய்வது.
அப்பா செய்த தொழில்
மகனுக்கு பிடிக்கவில்லை என்றாலும்,
அப்பா செய்த தொழில்
மகனுக்கு செய்ய விருப்பம் இல்லை என்றாலும்,
அப்பா செய்த தொழிலை
மகன் செய்ய விருப்பப்படவில்லை என்றாலும்,
அப்பா செய்த தொழிலை
மகன் செய்ய ஆர்வப்படவில்லை என்றாலும்,
அப்பா செய்த தொழிலை
மகன் செய்ய ஆசைப்படவில்லை என்றாலும்,
அப்பா செய்த தொழில் மகனுக்கு
பின்பற்ற விருப்பம் இல்லை என்றாலும்,
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு,
பிழைப்பைக் கருத்தில் கொண்டு,
வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு,
சாப்பாட்டை கருத்தில் கொண்டு,
பிடிக்கவில்லை என்றாலும்,
தந்தை செய்த தொழிலை
மகன் பின்பற்றுவது
பரம்பரைத் தொழிலில்
வலுக்கட்டாயமாக பிழைப்புக்காக
பரம்பரைத் தொழிலை
பின்பற்றுவது ஆகும்.

ஒருவர் கல்யாண புரோக்கராக இருக்கிறார்
கல்யாணக் காலங்களில்
மட்டும்  தான் வேலை.
மற்ற நாட்களில் வேலைக்கு பஞ்சம்;
வாழ்க்கையை ஓட்டுவதில் பஞ்சம்;
பணத்தை சம்பாதிப்பதில் பஞ்சம்;
சாப்பாடு கிடைப்பதில் பஞ்சம்;
இன்பத்தை காணுவதில் பஞ்சம்;
சந்தோஷத்தை அடைவதில் பஞ்சம்;
என்ற நிலைமை கவலைக்கிடமாக
இருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட நாட்கள் அல்லது
ஒரு குறிப்பிட்ட மாதங்கள்
மட்டுமே வேலை இருக்கும்.
ஆண்டு முழுவதும் வேலை இருக்காது.
தந்தை வேலையைக் கவனித்த மகன்,
தந்தையின் வேலையை ஆராய்ந்த மகன்,
தந்தையின் வேலையை சிந்தித்த மகன்,
தந்தையின் வேலையை உற்றுநோக்கிய மகன்,
தந்தையின் வேலையில் உள்ள
கஷ்டத்தை உணர்ந்து,
தந்தையின் வேலையில்
உள்ள  குறைகளை உணர்ந்து,
தந்தையின் வேலையில்
உள்ள இழப்புகளை உணர்ந்து,
தந்தையின் வேலையில்
உள்ள  அவமானங்களை உணர்ந்து,
தனக்கு இந்த வேலை வேண்டாம்
என்று முடிவு எடுத்தாலும்,
வேறு வேலை இல்லாததால்,
வேறு வேலை எதுவும் கிடைக்காததால்,
வாழ்க்கையை ஓட்டுவதற்காகவும்,
வாழ்க்கையை நடத்துவதற்காகவும்,
வேறு வழியில்லாமல் பிழைப்புக்காக,
தந்தையின் வேலையை
மகன் விருப்பம் இல்லாவிட்டாலும்,
செய்வது என்பது
தந்தை செய்த தொழில்
மகனுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும்,
பிழைப்புக்காக தந்தையின் வேலையை செய்வது.
பரம்பரைத் தொழிலில் விருப்பம் இல்லாமல்
மகன் செய்வது என்பதைக் குறிக்கும்.

---------இதன் தொடர்ச்சி
          இயேசு கிறிஸ்து--காகபுசுண்டர்-இருந்திட்டேன்-பதிவு-80-(2)

------------பார்க்கவும், படிக்கவும்