April 23, 2017

இயேசுகிறிஸ்து-காகபுசுண்டர்-இருந்திட்-பதிவு-80-4

       இயேசு கிறிஸ்து--காகபுசுண்டர்-இருந்திட்டேன்-பதிவு-80-(4)

                                  """"பதிவு எண்பதை விரித்துச் சொல்ல
                          ஈசர் பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்""""

காகபுசுண்டர்

""""""""இருந்திட்டேன் காகத்தின் சொரூபமாக
இன்பமுடன் வசிஷ்டருந்தான் யென்னிடத்தில்
                வருந்தியே வந்து யென்றன் முன்னேநின்று
வாய்திறந்து கோடியுகம் கல்லால்தன்னில்
பொருந்தியே யிருந்துதான் வந்தீரையா
புகழாக யிருந்துவந்த விதங்கடன்னை
                திருந்தியே சொலவேணு மென்றுகேட்க
செப்பினே னுண்மைதனைத் திறந்து தானே

                தானென்ற ஞானமதை வெளியதாகத்
தான் சொல்ல வேணுமென்று வசிஷ்டர்கேட்க
ஏனென்ற சித்தர்களும் வசிஷ்டரோடே
இட்டமுடன் றான்சேர்ந்து ஞானந்தன்னை
தேனென்றே அமுர்தம்போல் சொல்ல வேண்டும்
திருவருளால் கடைத்தேறச் செய்யவேண்டும்
கோனென்ற வேண்டினதால் வசிஷ்டருக்கு
குறிப்பாக ஞானமதைச் செப்பினேனே

                நோக்கினே னிதையறிந்து வசிஷ்டர்தானும்
                                நுவலுமென்று சொல்லவுமே அடியேனுந்தான்
                ஆக்கியே யெதைவெளியாய்ப் பேசவேண்டும்
சாற்றுமெனக் கேட்கவுமே வசிஷ்டரப்போ
பாக்கியில்லா தெல்லாமுஞ் சொல்லவேண்டும்
பண்பாய்மா னிடர்பிறக்கு மார்க்கமுந்தி
தாக்கியே சொலவேண்டு மென்றுகேட்க
அந்தரமாய் வசிஷ்டருக்குச் சொல்லினேனே""""""""

                                                ------------காகபுசுண்டர்

------------காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000


அஃறிணையில்
இயற்கையாக உள்ளவைகளானாலும்,
செயற்கையாக தயாரிக்கப் பட்டவைகளானாலும்,
புறத்திலிருந்து தரப்படும்
புற உதவியினாலோ அல்லது
புறத்திலிருந்து தரப்படும்
புறத்தூண்டுதலினாலோ
ஒரு பொருள் தன் தன்மையை
வெளிப்படுத்துகிறது.

புற உதவிக்கும்,
புறத்தூண்டுதலுக்கும்
வேறுபாடு இருக்கிறது.

இதனை நான்கு நிலைகளில் பிரித்து விடலாம்

              1. அஃறிணையில் இயற்கையாக உள்ள
                   ஒரு பொருள் புற உதவியினால்
                   தன் தன்மையை வெளிப்படுத்துவது

               2. அஃறிணையில் செயற்கையாக
                      மனிதனால் தயாரிக்கப்பட்ட
                      ஒரு பொருள்
                      புற உதவியினால் தன்
                      தன்மையை வெளிப்படுத்துவது

                3. அஃறிணையில் இயற்கையாக உள்ள
                     ஒரு பொருள் புறத்தூண்டுதலினால்
                    தன் தன்மையை வெளிப்படுத்துவது

                  4. அஃறிணையில் செயற்கையாக உள்ள
                     ஒரு பொருள் புறத்தூண்டுதலினால்
                     தன் தன்மையை வெளிப்படுத்துவது


இதனை கீழ்க்கண்டவாறு சொல்லாம்
அஃறிணை - இயற்கை - புற உதவி
அஃறிணை - செயற்கை - புற உதவி
அஃறிணை - இயற்கை - புறத்தூண்டுதல்
அஃறிணை - செயற்கை - புறத்தூண்டுதல்

உலகத்தில் உள்ள பொருட்களை
எடுத்துக்  கொண்டால்,
அஃறிணையில் இயற்கையாக இருந்தாலும்,
அஃறிணையில் செயற்கையாக இருந்தாலும்,
அது தன் தன்மையை
வெளிப்படுத்த வேண்டுமானால் அதற்கு
புறத்திலிருந்து ஒரு உதவியோ - அல்லது
புறத்திலிருந்து ஒரு தூண்டுதலோ
தேவைப்படுகிறது


1. அஃறிணையில் இயற்கையாக உள்ள
       ஒரு பொருள் புற உதவியினால்
       தன் தன்மையை வெளிப்படுத்துவது

அஃறிணையில் இயற்கையாக
உள்ள ஒரு பொருள்
சந்தன மரம் 
தன்னுள் இருக்கும்
மணம் என்ற இயல்பை,
அதாவது
தன்னுள் இருக்கும் சக்தியை,
தன்னுள் இருக்கும் தன்மையை,
எந்தவித உதவியும் இல்லாமல்
அதனால் தானாக வெளிப்படுத்த முடியாது,

சந்தன மரத்திலிருந்து
வாசனை வெளியேறுகிறது;
சந்தன மரத்தில்
வாசனை இருக்கிறது என்பதை
நாம் உணர வேண்டுமானால்,
நாம் அதனை நுகர வேண்டும்;
அவ்வாறு நுகர வேண்டுமானால்,
சந்தனமரத்தின் வாசனை
நம் மூக்கை அடைய வேண்டும்;
சந்தன மரத்திலிருந்து வாசனை
நம் மூக்கை அடைய
சந்தன மரத்திற்கு ஒரு ஊடகம்,
அதாவது புறத்திலிருந்து
ஒரு உதவி அதற்கு தேவைப்படுகிறது;
அது தான் காற்று;
காற்று சந்தன மரத்திலிருந்து
காற்றை நம் மூக்கிற்கு
கொண்டு வருகிறது.
அதன் மூலம் நாம்
சந்தன மரத்திலிருந்து வாசனை வருகிறது
என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அஃறிணையில் இயற்கையாக உள்ள
சந்தனமரம் தன் வாசனையை
வெளிப்படுத்த வேண்டுமானால்,
அதற்கு புறத்திலிருந்து
ஒரு உதவி அதாவது
புற உதவி தேவைப்படுகிறது;
புறத்திலிருந்து
அதற்கு  உதவி
கிடைக்கவில்லையென்றால்,
சந்தன மரத்தால்
அதனுடைய வாசனையை
வெளிப்படுத்த முடியாது.

அதைப்போல்
அஃறிணையில்
இயற்கையாக உள்ள
ஒரு பொருள் மல்லிகை;
மல்லிகையும் தன் மணத்தை
தானே வெளிப்படுத்த முடியாது;
தனது மணத்தை
வெளிப்படுத்த வேண்டுமானால்
அதற்கு புறத்திலிருந்து
ஒரு உதவி தேவை;
அது தான் புற உதவி;
இதிலிருந்து,
அஃறிணையில்
இயற்கையாக உள்ள ஒரு பொருள்
தன் தன்மையை வெளிப்படுத்த வேண்டுமானால்
புற உதவி தேவை என்பது
தெளிவாகிறது.

அஃறிணை - இயற்கை - சந்தனமரம் - புற உதவி

 
  2. அஃறிணையில் செயற்கையாக
    மனிதனால் தயாரிக்கப்பட்ட
    ஒரு பொருள்
   புற உதவியினால் தன்
    தன்மையை வெளிப்படுத்துவது

அஃறிணையில்
மனிதனால் செயற்கையாக
தயாரிக்கப்பட்ட பொருள்
தன்னுடைய இயல்பை வெளிப்படுத்த
அதற்கு புற உதவி தேவைப்படுகிறது
புற உதவியினால் அந்த பொருள்
தன் இயல்பை வெளிப்படுத்துகிறது

அஃறிணையில் மனிதனால்
செயற்கையாக தயாரிக்கப்பட்ட
வாசனை திரவியத்தை எடுத்துக் கொள்வோம்
வாசனை திரவியத்தின் வாசனை
நமக்கு தெரிய வேண்டுமானால்
நமக்கு ஒரு ஊடகம் தேவை
அதாவது ஒரு புற உதவி தேவை
அது தான் காற்று
வாசனை திரவியத்தில்
வாசனை இருக்கிறது
அந்த வாசனை நமக்கு
தெரிய வேண்டுமானால்
காற்று என்ற ஊடகம்
காற்று என்ற புற உதவி
தேவை
அஃறிணையில்
செயற்கையாக மனிதனால் தயாரிக்கப்பட்ட
வாசனை திரவியத்தில்
நிரம்பியுள்ள வாசனை
நம் மூக்கை அடைய
காற்று என்ற புற உதவி தேவைப்படுகிறது.
இது தான்
அஃறிணையில் செயற்கையாக
மனிதனால் தயாரிக்கப்பட்ட
ஒரு பொருள்
தன் தன்மையை
வெளிப்படுத்த  வேண்டுமானால்
அதற்கு புற உதவி தேவைப்படுகிறது

அஃறிணை - செயற்கை - வாசனை திரவியம்-புற உதவி


3.அஃறிணையில் இயற்கையாக உள்ள
   ஒரு பொருள் புறத்தூண்டுதலினால்
   தன் தன்மையை வெளிப்படுத்துவது

அஃறிணையில் இயற்கையாக
உள்ள ஒரு பொருள்
தன் தன்மையை வெளிப்படுத்த வேண்டுமனால்
அதற்கு ஒரு புறத்தூண்டுதல் தேவைப்படுகிது
அதற்கு உதாரணமாக
நாம் ஒரு மரத்தை எடுத்துக் கொள்வோம்
அதில்
தண்ணீரில் மிதக்கும் சக்தி;
எரியும் சக்தி;
எரியும் போது வெளிச்சத்தை தரும் சக்தி;
எரியும் போது வெப்பத்தை வெளிப்படுத்தும் சக்தி;
போன்ற பல்வேறு சக்திகள் நிரம்பி உள்ளன.
ஆனால் இந்த சக்திகள் அனைத்தும்
மரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

மரத்தை வெட்டி தண்ணீரில் போட்டால்
மரம் தண்ணீரில் மிதக்கிறது;
மரத்தை வெட்டி விறகாக்கி
நெருப்பை ஊட்டினால்
விறகு எரிகிறது;

இவ்வாறு
பல்வேறு நன்மைகளைத் தன்னுள் கொண்ட,
பல்வேறு தன்மைகளைத் தன்னுள் கொண்ட,
பல்வேறு திறமைகளைத் தன்னுள் கொண்ட,
பல்வேறு நிலைகளைத் தன்னுள் கொண்ட,
தன்மைகளை,
இயல்புகளை,
மரத்தால் சுயமாக
தன் தன்மையை வெளிப்படுத்தி
தான் யார் என்று காட்ட
அதனால் முடியவில்லை.
அதற்கு புறத்திலிருந்து
ஒரு புறத்துண்டுதல்
தேவைப்படுகிறது.

அஃறிணையில்
இயற்கையாக உள்ள ஒரு மரம்
மரத்தில் மறைந்துள்ள தன்மைகளை
வெளிப்படுத்த வேண்டுமானால்
அதற்கு வெளியிலிருந்து ஒரு
புறத்தூண்டுதல் தேவைப்படுகிறது

புறத்தூண்டுதல் இல்லாமல்
அதனால் அதனுள் மறைந்திருக்கும்
தன்மையை வெளிப்படுத்த  முடியாது
இது தான் ,
அஃறிணையில் இயற்கையாக உள்ள
ஒரு பொருள் புறத்தூண்டுதலினால்
தன் தன்மையை வெளிப்படுத்துவது

அஃறிணை - இயற்கை - மரம் - புறத்தூண்டுதல்


 4. அஃறிணையில் செயற்கையாக உள்ள
    ஒரு பொருள் புறத்தூண்டுதலினால்
    தன் தன்மையை வெளிப்படுத்துவது
 
செயற்கையாக
மனிதனால் தயாரிக்கப்பட்ட
பொருள் ஒன்றில்
புறத்தூண்டுதல் மூலம்
அதனுள் இருக்கும்
அதன் தன்மையை வெளிப்படுத்த முடியும்.

மனிதனால் தயாரிக்கப்பட்டவை,
செயற்கையாக தயாரிக்கப்பட்டவை,
பட்டாசு எடுத்துக் கொள்வோம்
பட்டாசு மனிதனால் தயாரிக்கப்பட்டது.
பட்டாசில்,
சங்கு சக்கரம் ஒன்றை எடுத்துக் கொள்வோம்;
சங்கு சக்கரம் ஒன்றை எடுத்துக் கொண்டால்,
அதன் இயல்பு நமக்கு தெரியும்;
அதன் இயல்பு நம் மனதுக்கு தெரியும்;
சங்கு சக்கரம் என்றவுடன்
நம் நினைவுக்கு வருவது
சங்கு சக்கரம் என்பது சுற்றும்;
நெருப்பைக் கக்கிக் கொண்டே சுற்றும்;
வண்ணப் நிகழ்வுகளைக் கக்கிக் கொண்டே சுற்றும்;
என்பது நமக்குத் தெரியும்.

ஆனால் இவை அனைத்தும்
அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது;
அதனுள் இருக்கும்
அத்தனையும் வெளிப்பட வேண்டுமானால்,
அதனுள் இருக்கும் அத்தனை தன்மைகளையும்
நாம் பார்க்க வேண்டுமானால்,
அத்தனை தன்மைகளையும்
நாம் அறிந்து கொள்ள வேண்டுமானால்,
அத்தனை தன்மைகளையும்
நாம் ரசிக்க வேண்டுமானால்,
அத்தனை தன்மைகளையும்
நாம் விரும்ப வேண்டுமானால்,
அதன் சக்தி தூண்டப்பட வேண்டும்;
வெளியிலிருந்து
ஒரு சக்தி  அதற்கு
அளிக்கப்பட வேண்டும்;
வெளியிலிருந்து ஒரு புறத்தூண்டுதல்
அதற்கு அளிக்கப்பட வேண்டும்;
அந்த சக்தி தான் நெருப்பு
அந்த நெருப்பை நாம்
அந்த சங்கு சக்கரத்தில்
நாம் வைத்தால்
அந்த சங்கு சக்கரம் சுற்றும்;
நெருப்பை கக்கிக் கொண்டு சுற்றும்;
பலவிதமான வண்ண வண்ண
நிகழ்வுகளைக் காட்சியாகக் கொண்டு சுற்றும்.

செயற்கையாக
மனிதனால் தயாரிக்கப்பட்ட
சங்கு சக்கரத்தில் உள்ள  தன்மைகள்
வெளிப்பட வேண்டுமானால்
புறத்தூண்டுதல் தேவைப்படுகிறது.

இது தான்
அஃறிணையில்
செயற்கையாக
மனிதனால் தயாரிக்கப்பட்ட
ஒரு பொருள் புறத்தூண்டுதலினால்
தன் தன்மையை
 வெளிப்படுத்துவது ஆகும்

அஃறிணை - செயற்கை - பட்டாசு - புறத்தூண்டுதல்

---------இதன் தொடர்ச்சி
       இயேசு கிறிஸ்து--காகபுசுண்டர்-இருந்திட்டேன்-பதிவு-80-(5)

------------பார்க்கவும், படிக்கவும்






No comments:

Post a Comment