June 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-29


                 ஜபம்-பதிவு-521
           (அறிய வேண்டியவை-29)

“வீரம்
செறிந்த
அபிமன்யுவின்
கதையில்
இருந்து நாம்
இரண்டு
முக்கியமான
உண்மைகளை
அறிந்து
கொள்ள
வேண்டும்”

ஒன்று
“பிள்ளைகள்
கல்வி
பயிலும்
போது தாய்
உறங்கக்
கூடாது - தாய்
உறங்கினால்
பிள்ளையின்
கல்வியும்
உறங்கி
விடும்
அதாவது
பிள்ளையின்
கல்வியும்
பாதியில்
நின்று விடும்
இங்கு
உறக்கம்
என்பது
பிள்ளை
மேல்
அக்கறை
இல்லாததைக்
குறிக்கிறது ;”

“பிள்ளையின்
கல்வி
பாதியில்
நின்று
விட்டால்
பிள்ளைகள்
இந்த
உலகத்தில்
வாழ
முடியாது
உயிரை
விட
வேண்டியது
தான்”

“அர்ஜுனன்
சக்கர
வியூகத்தைப்
பற்றி
சொல்லும்
போது
சுபத்திரை
உறங்கி
விட்டதால்
அபிமன்யுவால்
சக்கர
வியூகத்தை
உடைத்துக்
கொண்டு
உள்ளே
செல்வது
எப்படி
என்பதைப்
பற்றி
மட்டுமே
கற்க
முடிந்தது ;
சக்கர
வியூகத்தை
விட்டு
வெளியே
வருவது
எப்படி
என்பதை
அவனால்
கற்றுக்
கொள்ள
முடியவில்லை  ;
இதற்கு
காரணம்
அபின்யுவின்
தாய்
உறங்கியதே
காரணம்
ஆகும் “

இரண்டு :
“நாம்
எந்த
ஒரு
செயலைச்
செய்தாலும்
அந்த
செயலைப்
பற்றி
முழுமையாகத்
தெரிந்த
பிறகே
செயலைச்
செய்ய
செயலில்
இறங்க
வேண்டும்  ;
ஒரு
செயலைப்
பற்றி
அரைகுறையாகத்
தெரிந்து
கொண்டு
செயலில்
இறங்கினால்
நம்முடைய
உயிருக்குத்
தான்
ஆபத்து 
ஏற்படும் ;
நாம்
இறக்க
வேண்டி
வரும் ;

“சக்கர
வியூகத்தைப்
பற்றி
முழுமையாகத்
தெரிந்து
கொள்ளாமல்
அபிமன்யு
சக்கர
வியூகத்திற்குள்
சென்றது
ஒரு
செயலைப்
பற்றி
முழுமையாகத்
தெரிந்து
கொள்ளாமல்
அதில்
இறங்கியதைக்
குறிக்கிறது “

“அபிமன்யுவின்
வீரம் செறிந்த
வாழ்க்கையிலிருந்து
நாம் அறிந்து
கொள்ள
வேண்டியது
இந்த இரண்டு
உண்மைகளைத்
தான் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-28


               ஜபம்-பதிவு-520
          (அறிய வேண்டியவை-28)

“ஆனால்
அபிமன்யு
கோழைகளின்
கையால் இறந்தான்
என்று வரலாறு
வருங்காலத்தில்
சொல்லி
விடக்கூடாது
என்பதற்காகத்
தான் கவலைப்
படுகிறேன் “

“மரணபயம் இருப்பதால்
நீங்கள் அனைவரும்
ஒன்றாக இணைந்து
என்னை எதிர்த்துப்
போரிட்டுக்
கொண்டிருக்கிறீர்கள் ;
மரணபயம்
எனக்கு இல்லாத
காரணத்தினால் - நான்
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருக்கிறேன்;”

“இப்போதாவது
புரிந்து
கொண்டீர்களா
மரணபயம்
இல்லாதவன்
அபிமன்யு என்று “

“உலகத்திலேயே
மிகச்சிறந்த
வீரர்களுடன்
அபிமன்யு
போரிட்டான் என்று
நாளைய வரலாறு
சொல்லாது “

“உலகத்திலேயே
சிறந்த
கோழைகளகாகக்
கருதப்படக்
கூடியவர்கள்
ஒன்றாக இணைந்து
அபிமன்யுவை
எதிர்த்தார்கள்
என்று தான்
நாளைய வரலாறு
சொல்லப் போகிறது “

“கடவுளே வீரர்களின்
கையால் சாகும்
வரத்தை எனக்கு
அளிக்காமல்
விட்டு விட்டாயே
கோழைகளின் கையிலா
இந்த அபிமன்யு
சாக வேண்டும் “

(அனைவரும்
ஒன்றாகச் சேர்ந்து
அபிமன்யுவைத்
தாக்குகிறார்கள்
வாழ்வின்
இறுதிக் கட்டத்தில்)

அபிமன்யு :
“தந்தையே !
என்னுடைய
கடமையைச் செய்து
முடித்து விட்டேன் “

“பெரிய தந்தையை
கைது செய்து
போரினை
நிறுத்தி விடுவதற்கு
செய்யப்பட்ட
சதித்திட்டத்தை
முறியடித்து
விட்டேன் “

“என்னால்
முடிந்தவரை
தர்மத்தை
நிலைநாட்டுவதற்கு
முயற்சி செய்து
விட்டேன் “

“அபிமன்யுவை
தன்னந்தனியாக
யாராலும்
வீழ்த்த முடியாது
கூட்டமாக
சேர்ந்தால் தான்
வீழ்த்த முடியும்
என்பதை
இந்த உலகத்திற்கு
உணர்த்தி விட்டேன் “

“அர்ஜுனனைப்
போலவே
அர்ஜுனனின்
மகன் அபிமன்யுவும்
வீரம் மிக்கவன்
என்பதை
நிரூபித்து விட்டேன்”

“நான் செல்கிறேன்
தந்தையே
நான் செல்கிறேன்”

“என் தாய்த்
திருநாடே
இந்த அபிமன்யு
செல்வதற்கு
விடை கொடு !”

“என் தாய் மண்ணே
உன்னை
வணங்குகிறேன்
இந்த அபிமன்யுவை
ஏற்றுக் கொள்”

(அபிமன்யு இறந்து
விடுகிறான்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-27


               ஜபம்-பதிவு-519
         (அறிய வேண்டியவை-27)

“அவனுக்காக
நாம் கடவுளை
வேண்டுவதைத்
தவிர நம்மால்
எதுவும் செய்ய
முடியாது”

“தர்மத்தாயே!
தர்மத்தை நிலை
நாட்டுவதற்காக
தன்னந்தனியாக
போராடிக்
கொண்டிருக்கும்
உன் பிள்ளை
அபிமன்யுவிற்கு
துணையாக இரு”

“சூரியனே
ஏன் இன்னும்
அஸ்தமனம்
ஆகாமல்
இருக்கிறாய் ;
அபிமன்யு
போராடிக்
கொண்டிருப்பதைப்
பார்த்தும்
உனக்கு இரக்கம்
வரவில்லையா?”

“காலமே
ஏன் இன்னும்
கண்ணை
மூடிக் கொண்டு
வேடிக்கைப்
பார்த்துக் கொண்டு
இருக்கிறாய்?”

“கடவுளே
அந்த சிறுவன்
அபிமன்யுவிற்கு
துணையாக இரு”

“கடவுளே
உன்னுடைய
துணை இருந்தால்
மட்டுமே
அபிமன்யு
குருஷேத்திரப்
போர்க்களத்திலிருந்து
இன்று உயிரோடு
வர முடியும்,”

“கடவுளே !
அபிமன்யுவைக்
காப்பாற்று “

(அபிமன்யுவை
அனைவரும்
ஒன்றாகச்
சேர்ந்து வெறி
கொண்டு
தாக்குகின்றார்கள் ;

கர்ணனின்
பாணங்கள்
அபிமன்யுவின்
தேர்ச்சக்கரங்களை
உடைத்து
விடுகிறது ;

துரோணரின்
பாணங்கள்
அபிமன்யுவின்
தேரின் கொடியை
வெட்டி விடுகிறது ;

சகுனி
அபிமன்யுவின்
தேர்க்குதிரைகளைக்
கொன்று
விடுகிறான் ;

துரியோதனனின்
கதாயுதம்
அபிமன்யுவின்
தேரோட்டியைக்
கொன்று
விடுகிறது ;

கிருபாச்சாரியார்
அபிமன்யுவின்
வில்லை
உடைத்து
விடுகிறார் ;

அஸ்வத்தாமன்
அபிமன்யுவின்
ஈட்டியை
உடைத்து
விடுகிறான் ;

தேரில்லாத
அபிமன்யு
வாளுடன்
கீழே குதித்து
விடுகிறான் ;

துரோணரின்
அம்பு
அபிமன்யுவின்
வாளை
உடைத்து
விடுகிறது
அபிமன்யு
நிராயுதபாணியாக
நின்று
கொண்டிருக்கிறான் “

“அனைவரையும்
பார்த்து
அபிமன்யு
பேசுகிறான்”

அபிமன்யு :
“உங்களுடைய
இந்த செயலைக்
கண்டு நான்
வெட்கப்படுகிறேன்  ;
வீரர்களுடன்
போரிட வந்தேன்
என்று
நினைத்தேன்
ஆனால்
இப்போது தான்
தெரிகிறது - நான்
கோழைகளுடன்
போரிட்டுக்
கொண்டு
இருக்கிறேன்
என்று 

“நான் இறக்கப்
போகிறேன்
என்று எனக்குத்
தெரியும் - நான்
இறந்து
கொண்டிருக்கிறேன்
என்பதும்
எனக்குத்
தெரியும் “

“என்னுடைய
இறப்பைப்
பற்றி நான்
எப்போதும்
கவலைப்பட்டதே
இல்லை ;
இறப்பை
எப்போதும்
புன்முறுவலுடன்
வரவேற்கக்
காத்துக்
கொண்டிருப்பவன்
நான்  ;
இப்போதும்
அப்படித் தான்
இறப்பை எதிர்
நோக்கிக்
காத்துக்
கொண்டிருக்கிறேன் ;”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

அறிய வேண்டியவை-பதிவு-26


                ஜபம்-பதிவு-518
          (அறிய வேண்டியவை-26)

துரியோதனன் :
“குருவே !
அபிமன்யுவைக்
கட்டுப் படுத்த
முடியாதா?
அவனை
வீழ்த்த
முடியாதா ?”

துரோணர் :
“ஒன்றை
நன்றாக ஞாபகம்
வைத்துக் கொள்
துரியோதனா !
அபிமன்யுவை
வீழ்த்தவில்லை
என்றால் நம்மால்
யுதிஷ்டிரனை
நெருங்க முடியாது
அப்புறம்
யுதிஷ்டிரனை
கைது செய்வது
என்பது இயலாத
காரியம் ஆகி விடும் “

“யுதிஷ்டிரனைக்
கைது செய்ய
வேண்டும் என்றால்
அபிமன்யு
வீழ்த்தப்படத் தான்
வேண்டும் “

“யுதிஷ்டிரனுக்கும்
எனக்கும் இடையில்
தடையாக இருந்து
யுதிஷ்டிரனைக்
கைது செய்ய
விடாமல் தடுத்துக்
கொண்டிருப்பது
அபிமன்யு மட்டுமே
அபிமன்யுவை
வீழ்த்துவதற்கு
முயற்சி செய் “

துரியோதனன் :
“அதற்கு நான்
என்ன செய்ய
வேண்டும் குருவே”

துரோணர் :
“அர்ஜுனனின்
மகனான
அபிமன்யுவை
யாராலும்
கட்டுப் படுத்த
முடியாது
அவனை
வீழ்த்துவது
அவ்வளவு
எளிதான
காரியம்
கிடையாது “

“முதலில் அவனை
நிராயுதபாணியாக்குங்கள்
ஆயுதங்கள்
ஏதுமின்றி
நிராயுதபாணியாக
தன்னந்தனியாக
இருக்கும் போது
மட்டும் தான்
அபிமன்யுவைக்
கொல்ல முடியும்”

“ஆயுதத்தை
அவன் கையில்
வைத்திருக்கும்
போது அவனைக்
கொல்ல முடியாது”

“முதலில்
அபிமன்யுவை
நிராயுதபாணியாக்குங்கள்”

துரியோதனன் :
“அப்படியே செய்கிறோம்”

(பாண்டவர்கள்
கூடாரத்தில்)

தர்மர் :
“பீமா !
எனக்கு
பயமாக
இருக்கிறது “

“உலகத்திலேயே
சிறந்த வீரர்கள்
என்று
சொல்லப்படக்
கூடியவர்களுடன்
அபிமன்யு
யாருடைய
துணையும்
இல்லாமல்
தன்னந்தனியாக
போரிட்டுக்
கொண்டிருக்கிறான்  ;
போரிட்டுக்
கொண்டிருக்கிறான்
என்று சொல்வதை
விட போராடிக்
கொண்டிருக்கிறான்
என்று தான்
சொல்ல வேண்டும் ;”

“அவர்கள்
ஒவ்வொருவருமே
ஆயிரக்
கணக்கானவர்களைக்
கொல்லக் கூடிய
ஆற்றல்
படைத்தவர்கள் ஆயிற்றே ;
போர் தந்திரத்தில்
அவர்களை
மிஞ்சியவர்கள்
யாரும் இருக்க
முடியாதே !”

“அனைவரும்
ஒன்றாகச் சேர்ந்து
அபிமன்யுவை
எதிர்க்கிறார்களே !
அவர்களை
அபிமன்யு
எப்படி தடுக்கப்
போகிறான் ;
சிறுவனாயிற்றே
அவனால் எவ்வளவு
நேரம் அவர்களை
தடுக்க முடியும் “

“நாம் அனைவரும்
அபிமன்யுவிற்கு
உதவ முடியாமல்
போய் விட்டதே ;
அபிமன்யுவிற்கு
ஏதும் நேர்ந்து
விட்டால்
நான் எப்படி
அர்ஜுனனைப்
பார்ப்பேன் ;
அர்ஜுனன்
என்ன கேள்வி
கேட்டாலும்
அதற்கு என்னிடம்
பதில் இருக்காதே “

“இப்படி ஒரு
இக்கட்டான
சூழ்நிலையில்
மாட்டிக்
கொண்டானே “

“என்னைக் கைது
செய்து போரை
முடிவுக்குக் கொண்டு
வரக்கூடாது
என்பதற்காக
சிறுவனான
அபிமன்யு
தன்னந்தனியாக
போராடிக்
கொண்டிருக்கிறான்”

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////