June 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-29


                 ஜபம்-பதிவு-521
           (அறிய வேண்டியவை-29)

“வீரம்
செறிந்த
அபிமன்யுவின்
கதையில்
இருந்து நாம்
இரண்டு
முக்கியமான
உண்மைகளை
அறிந்து
கொள்ள
வேண்டும்”

ஒன்று
“பிள்ளைகள்
கல்வி
பயிலும்
போது தாய்
உறங்கக்
கூடாது - தாய்
உறங்கினால்
பிள்ளையின்
கல்வியும்
உறங்கி
விடும்
அதாவது
பிள்ளையின்
கல்வியும்
பாதியில்
நின்று விடும்
இங்கு
உறக்கம்
என்பது
பிள்ளை
மேல்
அக்கறை
இல்லாததைக்
குறிக்கிறது ;”

“பிள்ளையின்
கல்வி
பாதியில்
நின்று
விட்டால்
பிள்ளைகள்
இந்த
உலகத்தில்
வாழ
முடியாது
உயிரை
விட
வேண்டியது
தான்”

“அர்ஜுனன்
சக்கர
வியூகத்தைப்
பற்றி
சொல்லும்
போது
சுபத்திரை
உறங்கி
விட்டதால்
அபிமன்யுவால்
சக்கர
வியூகத்தை
உடைத்துக்
கொண்டு
உள்ளே
செல்வது
எப்படி
என்பதைப்
பற்றி
மட்டுமே
கற்க
முடிந்தது ;
சக்கர
வியூகத்தை
விட்டு
வெளியே
வருவது
எப்படி
என்பதை
அவனால்
கற்றுக்
கொள்ள
முடியவில்லை  ;
இதற்கு
காரணம்
அபின்யுவின்
தாய்
உறங்கியதே
காரணம்
ஆகும் “

இரண்டு :
“நாம்
எந்த
ஒரு
செயலைச்
செய்தாலும்
அந்த
செயலைப்
பற்றி
முழுமையாகத்
தெரிந்த
பிறகே
செயலைச்
செய்ய
செயலில்
இறங்க
வேண்டும்  ;
ஒரு
செயலைப்
பற்றி
அரைகுறையாகத்
தெரிந்து
கொண்டு
செயலில்
இறங்கினால்
நம்முடைய
உயிருக்குத்
தான்
ஆபத்து 
ஏற்படும் ;
நாம்
இறக்க
வேண்டி
வரும் ;

“சக்கர
வியூகத்தைப்
பற்றி
முழுமையாகத்
தெரிந்து
கொள்ளாமல்
அபிமன்யு
சக்கர
வியூகத்திற்குள்
சென்றது
ஒரு
செயலைப்
பற்றி
முழுமையாகத்
தெரிந்து
கொள்ளாமல்
அதில்
இறங்கியதைக்
குறிக்கிறது “

“அபிமன்யுவின்
வீரம் செறிந்த
வாழ்க்கையிலிருந்து
நாம் அறிந்து
கொள்ள
வேண்டியது
இந்த இரண்டு
உண்மைகளைத்
தான் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment