September 06, 2018

திருக்குறள்-பதிவு-14


                   திருக்குறள்-பதிவு-14

கிறிஸ்தவர்களின்
புனித நூலான
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு மாறுபட்டு
டார்வினின்
கண்டுபிடிப்பு இருந்ததால்
ஒட்டுமொத்த
கிறிஸ்தவர்களும்
டார்வினுக்கு எதிராக
திரும்பினர்.

கிறிஸ்தவர்கள்
டார்வினை
இவர் குரங்கு
இவர் அப்பா குரங்கு
இவர் மூதாதையர்
அனைவரும் குரங்கு
என்று திட்டி தீர்த்தனர்.
டார்வின் தலையையும்
குரங்கு உடலையும்
இணைத்து கேலி
சித்திரம் போட்டார்கள்.

டார்வின் கடவுளின்
முதல் எதிரி என்றனர்;
இவர் நரகத்துக்குத்
தான் போவார்
என்றனர்;
டார்வினின் பிறந்த
நாளை பேய்
தினம் என்று
அறிவித்தனர்;

டார்வினுடைய புத்தகத்தை
மொத்தமாக வாங்கி
மக்கள் கூடும்
இடங்களில் எல்லாம்
கிழித்து வானத்தை
நோக்கி எறிந்தனர்

டார்வினின் புத்தகம்
சாக்கடையில் தான்
இருக்க வேண்டும் என்று
டார்வின் புத்தகத்தை
வாங்கி அதை கிழித்து
சாக்கடையில் போட்டனர்

டார்வின் புத்தகத்தை
மொத்தமாக வாங்கி
குவியலாக தெருவில்
ஒரே இடத்தில்
குவியலாக குவித்து
தீயிட்டு கொளுத்தினர்

பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
டார்வினின் கண்டுபிடிப்பு
இருக்கிறது
கிறிஸ்தவர்களின்
நம்பிக்கையை
இழிவு படுத்துவதாக
டார்வினின் கண்டுபிடிப்பு
இருக்கிறது என்று
டார்வின் புத்தகத்தை
கிறிஸ்தவ சர்ச்சுகளிள்
படிக்கட்டுகளில் வைத்தனர்
சர்ச்சுகளுக்கு வருபவர்கள்
அந்த புத்தகத்தை
மிதித்து விட்டு
ஆண்டவரை வணங்க
கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குள்
செல்லும் வகையில்
படிக்கட்டுகளில்
வரிசையாக அடுக்கி
வைத்தனர்
அவ்வாறே டார்வின்
புத்தகத்தை மிதித்து
விட்டு சர்ச்சுகளுக்குள்
சென்றனர்.

கிறிஸ்தவ சர்ச்சுகளில்
கருப்பு உடை தரித்த
விவிலிய பக்தர்கள்
தங்களின் கால்களின் கீழ்
டார்வினின் புத்தகத்தை
மிதித்தவாறு இறைவனின்
புனிதக் கொள்கையை
சாத்தானாகிய
டார்வினிடமிருந்து
காப்பதாக உறுதி
பூண்டார்கள்

புத்தகம் வெளியான
ஒரு சில நாட்களில்
முழு இங்கிலாந்தில்
ஏற்பட்ட புயல்
ஒரு சில
மாதங்களுக்கெல்லாம்
அகில உலகையும்
தாக்க ஆரம்பித்து
உலகில் உள்ள
பல மொழிகளில்
டார்வினின் புத்தகம்
மொழி பெயர்க்கப்பட்டது       

உலகில் உள்ள
கிறிஸ்தவர்கள் அனைவரும்
ஒட்டு மொத்தமாக
டார்வினை எதிர்த்தனர்.

டார்வினை
ஆதரிப்பவர்கள் கூட
டார்வின் புத்தகத்தை
அதிக அளவில்
வாங்கவில்லை
டார்வினை
எதிர்ப்பவர்கள் தான்
டார்வின் புத்தகத்தை
அதிக அளவில்
வாங்கினர்

டார்வின் புத்தகத்தில்
அப்படி என்னதான்
எழுதப் பட்டிருக்கிறது
என்பதைத்
தெரிந்து கொள்வதற்கு
உலகில் உள்ள
கிறிஸ்தவ மத
குருமார்கள் மட்டுமல்ல
உலகில் உள்ள
கிறிஸ்தவர்களில்
பெரும்பாலானவர்கள்
வாங்கினர்

டார்வின் புத்தகத்திற்கு
கிறிஸ்தவர்களால்
எவ்வளவு எதிர்ப்பு
டார்வினுக்கு இருந்ததோ
அதற்கு சமமான ஆதரவு
கடவுள் இல்லை
என்று சொல்பவர்களால்
டார்வினுக்கு உண்டானது

டார்வின் ஆதரவாளர்கள்
உண்மையான குரங்கைப்
பிடித்து வந்து
குரங்கை அழகாக
அலங்கரித்து
வண்டியில் வைத்து
வீதிவீதியாக அழைத்து
வந்தனர்
டார்வின் வாழ்க
நம் மூதாதையர்
வாழ்க என்று
கோஷங்கள் எழுப்பிக்
கொண்டு சென்றனர்.

சிலர் டார்வின்
படத்தையும்,
சிலர் டார்வின்
புத்தகத்தையும்,
சிலர் குரங்கையும்
வண்டியில் வைத்து
டார்வின் வாழ்க
என்று கோஷம் எழுப்பிக்
கொண்டு சென்றனர்.

டார்வினுக்கு எதிராக
அனைத்து கிறிஸ்தவர்கள்
ஒரு புறமும்,
டார்வினுக்கு ஆதரவாக
கடவுள் இல்லை
என்று சொல்பவர்கள்
மறுபுறமும்,
இருந்து கொண்டு
ஒருவருக் கொருவர்
மோதிக் கொண்ட
மோதல் உலக அளவில்
உச்ச நிலையை
அடைந்தது.

அடுத்து என்ன நடக்கப்
போகிறது என்று
உலகமே நடக்கும்
நிகழ்வுகளை வேடிக்கைப்
பார்த்துக் கொண்டிருந்தது


---------  இன்னும் வரும்
---------  06-09-2018
/////////////////////////////////////