Showing posts with label cardinal sartori. Show all posts
Showing posts with label cardinal sartori. Show all posts

April 11, 2019

திருக்குறள்-பதிவு-134


                      திருக்குறள்-பதிவு-134

“தசுக்கனியி பேரரசரான
இரண்டாம் பெர்டினாண்டோ
இவரது தந்தையும்
முன்னோரும் அடக்கம்
செய்யட்டுள்ள
சாந்தோ குரோசில்
உள்ள பாசிலிக்காவில்
முதன்மைப் பகுதியில்
அடக்கம் செய்து
ஒரு சலவைக்கல்
நினைவுச் சின்னமும்
எழுப்பிட விரும்பி
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையிடம் அனுமதி
கேட்டபோது ,
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
தண்டிக்கப்பட்டவர்
கலிலியோ
என்ற காரணத்தினால்
எட்டாம் உர்பன் போப்பும்,
பேராயர் பிரான்செசுகோ
பார்பெரினியும் அனுமதி
அளிக்க மறுத்து விட்டனர் “

“டாலமி சொன்ன
பூமியை மையமாக
வைத்து சூரியன் சுற்றி
வருகிறது என்ற
பூமி மையக் கோட்பாடு
தவறானது
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றி
வருகிறது என்ற
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
சூரிய மையக் கோட்பாடே
சரியானது என்று
சொன்னதுடன் நிற்காமல்
அதனை கலிலியோ
தன்னுடைய
தொலைநோக்கியின்
மூலம் நிரூபித்துக்
காட்டினார் ;
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
கருத்து சொல்லி
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”

“பைபிளில் சொல்லப்பட்டுள்ள
ஆண்டவரின்
வார்த்தைகளுக்கு எதிராக
கலிலியோ தான் சொன்ன
கருத்துக்களை தவறு
என்று சொல்லி
மன்னிப்பு கேட்டுக்
கொண்டால் அவரை
விட்டு விடுகிறோம்
என்று எவ்வளவு
எடுத்துச் சொல்லியும்
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”

 “கலிலியோவிற்கு
அவருடைய அன்றாடக்
கடமைகளை
நிறைவேற்றுவதற்குத்
தேவையான பொருட்களை
கூட வழங்காமல் ;
தேவையான மருத்துவ
உதவிகள் தனக்கு
வேண்டும் என்று கேட்டும் ;
தேவைப்படும் மருத்துவ
உதவிகளை தேவைப்படும்
காலத்தில் வழங்காமல்
பல்வேறு ரூபங்களில்
கலிலியோவை- வீட்டுச்
சிறையில் வைத்து
சித்திரவதை செய்த போதும் ;
தான் கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டது
தவறு என்று
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”


“தன்னுடைய
அன்பு மகள் இறந்து
கலிலியோ மீளாத் துயரில்
வீழ்ந்த போதும் ;
தன்னுடைய கண்களை
இழந்து வாழ்க்கையை
ஒட்டுவதற்கு கஷ்டப்
பட்ட போதும் ;
தன்னுடைய ஆராய்ச்சியை
நிறுத்திக் கொள்ளாமல்
தொடர்ந்து செய்து
கொண்டிருந்த போதும் ;
கணக்கிலடங்கா துயரங்கள்
தன்னை தாக்கிய போதும் ;
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”

“கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை, சர்ச்சுகள்,
கிறிஸ்தவர்கள் ஆக
மொத்தம் உலகில்
உள்ள அனைத்து
கிறிஸ்தவர்களும்
கலிலியோவிற்கு
எதிரியாகி எதிராக
நின்ற போதும் ;
பல்வேறு விதமான
கஷ்டங்களை கலிலியோ
சாகும் வரை
அனுபவித்த போதும் ;
சாகும் வரை
தன்னுடைய உயிரை
காப்பாற்றிக் கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்கவில்லை கலிலியோ”

“தன்னடைய உயிரை
காப்பாற்றிக்
கொள்வதற்காக
மண்டியிட்டு மன்னிப்பு
கேட்காத கலிலியோவை
சாந்தா குரோசில் உள்ள
பாசிலிக்காவில்
முதன்மைப் பகுதியில்
அடக்கம் செய்ய அனுமதி
கேட்டபோது- கலிலியோ
கிறிஸ்தவ மதத்திற்கும்
கிறிஸ்தவர்களுக்கும் 
எதிராக செயல்பட்டார்
என்ற காரணத்திற்காகவும் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
தண்டிக்கப்பட்டவர்
கலிலியோ என்ற
காரணத்திற்காகவும் ;
அனுமதி மறுக்கப்பட்டது”

“பாசிலிக்காவின்
தென்வளாகத்துக்கு
அருகில் அமைந்த
நோவிசெசு கல்லறைத்
தோட்டத்திற்கு அண்மையில்
ஒரு சிறிய அறையில்
கலிலியோவை அடக்கம்
செய்ய அனுமதி
வழங்கப்பட்டு அந்த
இடத்தில் கலிலியோ
அடக்கம் செய்யப்பட்டார்”

“ வரலாற்றையே மாற்றி
அமைத்த சூரிய
மையக் கோட்பாட்டை
கண்டுபிடித்த
கலிலியோவின் இறப்பிற்கு
பின்னும் மதம்
மதவெறியுடன் நடந்து
கொண்டது வெட்கப்பட
வேண்டிய விஷயம் “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  11-04-2019
/////////////////////////////////////////////////////


February 10, 2019

திருக்குறள்-பதிவு-102


                      திருக்குறள்-பதிவு-102


(போப் அறையில்
பாதர் டிராகாக்லியோலோ
அமைதியாக நின்று
கொண்டிருக்க ;
போப் கிளமெண்ட்-VIII ;
கார்டினல் சார்டோரி  ;
பெல்லரமினோ  ;
ஆகியோரிடையே
சூடான வாக்கு வாதம்
நடைபெற்றுக்
கொண்டிருந்தது)


போப் கிளமெண்ட்-VIII :
“ கார்டினல் சார்டோரி
உங்களைக் கண்டு
நாங்கள் பலமுறை
பொறாமைப்பட்டிருக்கிறோம் ;
உங்களுடைய அறிவுத்
திறமையைக் கண்டு
நாங்கள் வியந்திருக்கிறோம் ;
சந்தேகம் என்ற
ஒன்றே ஏற்படாதவர் ;
என்று பெருமைப்
பட்டிருக்கிறோம் ; “

“ உங்களுக்கு ஏதேனும்
சந்தேகம் ஏற்பட்டு
இருக்கிறதா…….? “

கார்டினல் சார்டோரி :
“ புனித தந்தையே !
எனக்கு எந்த சந்தேகமும்
ஏற்படவில்லை “

“ ஆனால் தாங்கள்
என்ன நினைக்கிறீர்கள் ?
என்பதையும் ;
தாங்கள் என்ன
சொல்ல வருகிறீர்கள் ?
என்பதையும் ;
என்னால் புரிந்து
கொள்ள முடியவில்லை ; “

பெல்லரமினோ :
ஞகத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கும்
கிறிஸ்தவ மதத்திற்கும்
எதிராக செயல்பட்டவர்களை
தூக்கில் போடுவது ;
உயிரோடு எரிப்பது ;
என்று அளிக்கப்பட்ட பல
தண்டனைகளை மக்கள்
பார்த்து விட்டார்கள் “

“ இனிமேலும்
இதைப்போல் தண்டனைகள்
வழங்கப்பட்டால் - மக்கள்
இதைப் பார்த்துக் கொண்டு
சும்மா இருப்பார்களா
என்று தெரியவில்லை; “

கார்டினல் சார்டோரி :
“ ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிப்பதன் மூலம்
மக்களுக்கு ஒன்றை
புரிய வைக்கலாம் ;
கிறிஸ்தவ மதத்தை
எதிர்ப்பவர்களுக்கு
இத்தகைய நிலை தான்
ஏற்படும் என்பதை
புரிய வைக்கலாம் ; “

“ ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிக்காவிட்டால் ;
கிறிஸ்தவ மதத்தை
எதிர்ப்பவர்களுக்கும் ;
கிறிஸ்தவ
மதத்தை எதிர்க்க
நினைப்பவர்களுக்கும்
மனதில் தைரியம்
வந்து விடும் “

“ யார் வேண்டுமானாலும்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின்
நடவடிக்கைகளை
எதிர்க்கலாம் ;
கிறிஸ்தவர்கள் பின்பற்றும்
மத நம்பிக்கைகளை
இழிவு செய்யலாம் ;
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
கருத்து சொல்லலாம் ;
என்ற நிலை
உருவாகி விடும் “

 “ ஜியார்டானோ
புருனோவை உயிரிரோடு
எரிப்பதன் மூலம்
கிறிஸ்தவ மதத்தை யாரும்
எதிர்க்கவும் மாட்டார்கள் ;
கிறிஸ்தவ மதத்தை
எதிர்க்க வேண்டும்
என்ற தைரியமும்
யாருக்கும் வராது ;

போப் கிளமெண்ட்-VIII :
“ ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிக்கும் செயலைச்
செய்தால் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் ஆட்சி
கடவுளின் ஆட்சியாக இராது ;
பயங்கரவாதிகளின்
ஆட்சியாகத் தான் இருக்கும் ; “

கார்டினல் சார்டோரி :
“ ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்கள்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் மாளிகை
வரை வந்து விட்டது
என்று சொல்கிறார்கள் “


போப் கிளமெண்ட்-VIII :
“ போப்பை நீங்கள்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிரானவர் என்கிறீர்களா….? “

“போப்பையே நீங்கள்
சந்தேகப் படுகிறீர்களா……..? “


கார்டினல் சார்டோரி :
“அதை நான்
சொல்லவில்லை “

“அதை நான்
சொல்லவில்லை “

ஜியார்டானோ
புருனோவின் கருத்துக்கள்
புனித போப்பின்
ஆத்மாவிற்குள் புகுந்து
பாதிப்பை ஏற்படுத்துகிறது
என்றால் - இனிமேலும்
இத்தகைய ஒரு பிரச்சினை
ஏற்படக்கூடாது என்றால்
அதற்கு ஒரே வழி
ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரிப்பது மட்டும் தான். “


பெல்லரமினோ :
ஜியார்டோனோ
புருனோவை உயிரோடு
எரித்தால் - அவரை
உயிரோடு எரிப்பதற்காக
வைக்கப்பட்ட நெருப்பு
உயிரோடு எரித்ததோடு
மட்டுமில்லாமல்
எரித்த அந்த நெருப்பு
அணையாமல் தொடர்ந்து
பல நூற்றாண்டுகள்
எரிந்து மிகப்பெரிய
பாதிப்புகளை ஏற்படுத்திக்
கொண்டே இருக்கும் “

கார்டினல் சார்டோரி :
“நாம் கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராக
செயல்பட்ட ஜியார்டானோ
புருனோவிற்கு என்ன
தண்டனை வழங்க
வேண்டும் என்பதைப்
பற்றி பேசிக்
கொண்டிருக்கிறோமோ ?
( அல்லது )
அவருடைய பாவங்களை
எப்படி மன்னிப்பது ;
எப்படி அவருக்கு கடவுள்
அருள் கிடைக்கச் செய்வது ;
என்பதைப் பற்றி - நாம்
பேசிக் கொண்டிருக்கிறோமோ?
என்பது எனக்கு தெரியவில்லை.”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  09-02-2019
/////////////////////////////////////////////////////////////

January 27, 2019

திருக்குறள்-பதிவு-90


                     திருக்குறள்-பதிவு-90

கார்டினல் சார்டோரி :
“ சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றி
வருகிறது என்று
சொல்லி இருக்கிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ அந்த கருத்தை
நான் சொல்லவில்லை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
கருத்தைத் தான்
நான் சரியானது
என்று சொன்னேன் “

கார்டினல் சார்டோரி :
“இரண்டும் ஒன்று தான்”

ஜியார்டானோ புருனோ :
“அப்படியும் எடுத்துக்
கொள்ளலாம்”

கார்டினல் சார்டோரி :
“நீங்கள் சொன்னது
பைபிளில் ஆண்டவரால்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக இருக்கிறது “

“ காலம் காலமாக
பைளிளை புனித
நூலாகக் கருதி
பின்பற்றி வரும்
கிறிஸ்தவர்களின்
மத நம்பிக்கைக்கு
எதிராக இருக்கிறது “

ஜியார்டானோ புருனோ :
“ நான் பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக எதுவும்
சொல்லவில்லை ;
அறிவியல் ரீதியாக
கண்டுபிடித்ததை
சரியானது என்று
சொன்னேன் ; “

கார்டினல் சார்டோரி :
“ அதைத் தான்
நாங்கள் கிறிஸ்தவ
மத நம்பிக்கைக்கு
எதிராக இருக்கிறது
என்கிறோம் “

ஜியார்டானோ புருனோ :
“ விஞ்ஞானத்தை
மதத்துடன்
தொடர்புபடுத்தி
எதிரானது என்கிறீர்கள் ;
விஞ்ஞானத்தை
மதத்துடன் தொடர்பு
படுத்தாதீர்கள் ;
விஞ்ஞானத்தை
சுதந்திரமாக
இருக்க விடுங்கள் ;
மதத்திற்கு அடிமையாக
விஞ்ஞானத்தை மாற்ற
முயற்சி செய்யாதீர்கள் ; “

கார்டினல் சார்டோரி :
“என்ன செய்வது என்று
எங்களுக்கு தெரியும் ;”
அதைப் பற்றி நீங்கள்
பேச வேண்டாம் ; “

ஜியார்டானோ புருனோ :
“நான் சொன்ன
விஞ்ஞான கருத்தை
சரியானதா? தவறானதா?
என்று ஆராய்ந்து
கூட பார்க்காமல்
மத நம்பிக்கைக்கு
எதிராக இருக்கிறது
என்கிறீர்கள் “

கார்டினல் சார்டோரி :
“ சரியானதா?
தவறானதா? என்று
ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்க நாங்கள்
ஒன்றும் ஆராய்ச்சியார்கள்
இல்லை “

ஜியார்டானோ புருனோ :
“ அதைத் தான் நானும்
சொல்கிறேன் நீங்கள்
ஆராய்ச்சியாளர்கள்
இல்லை ;
மதவாதிகள் என்று;
ஆராய்ச்சி செய்து
கண்டுபிடிக்கப்பட்ட
கண்டுபிடிப்பை தவறு
என்று மதவாதிகளாகிய
நீங்கள் சொல்வதை
தவறு என்று எப்படி
ஏற்றுக் கொள்ள முடியும் ;
நான் சொன்னது
சரியானதா?
தவறானதா? என்று
ஆராய்ச்சியாளர்கள்
ஆராய்ச்சி செய்து
சொல்லட்டும் ; “

“ அதை விடுத்து
மதவாதிகளாகிய நீங்கள்
என்னுடைய கருத்தை
தவறு என்றும்,
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராகவும் இருக்கிறது
என்றும்,
சொல்வதை எப்படி
ஏற்றுக் கொள்ள முடியும் “

(ஜியோர்டானோ
புருனோவிடம்
வார்த்தைகளால்
மாட்டிக் கொண்டதை
உணர்ந்து கொண்ட
கார்டினல் சார்டோரி
கோபத்துடன் பேசலானார்)

கார்டினல் சார்டோரி :
“ புருனோ கேட்ட
கேள்விகளுக்கு மட்டும்
பதில் சொல்லுங்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ நான் கேட்ட
கேள்விகளுக்கு தான்
பதில் சொல்லிக்
கொண்டு இருக்கிறேன் “

கார்டினல் சார்டோரி :
“கேட்ட கேள்விகளுக்கு
தகுந்த பதில்களை
நீங்கள் சொல்வதேயில்லை “

ஜியார்டானோ புருனோ :
“ தகுந்த பதில்களை
சொல்வதற்கு தேவையான
கேள்விகளை நீங்கள்
கேட்பதேயில்லை “

கார்டினல் சார்டோரி :
“ நீங்கள் தேவையற்றதை
பேசிக் கொண்டிருக்கிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ நீங்கள் மட்டும்
தேவையானவற்றை பேசிக்
கொண்டு இருக்கிறீர்களா…….? “

கார்டினல் சார்டோரி :
“ போதும் புருனோ
நிறுத்துங்கள் “

(ஜியார்டானோ
புருனோவுக்கும் ;
கார்டினல் சார்டோரிக்கும் ;
வாக்குவாதம் உச்ச
கட்டத்தை அடைந்ததால்
அதை பார்த்துக்
கொண்டிருந்த
விசாரணைக்குழு
பதற்றத்தைத் தணிக்க
கேள்விகள் கேட்க
தொடங்கியது)

விசாரணைக்குழு
அதிகாரி 1
“ Father Bruno…………..!
நீங்கள் ஜெர்மனியில்
லூத்தரன்களுக்காகவும்,
(Lutherans)
ஜெனிவாவில்
கால்வானிஸ்ட்டுகளுக்காகவும்
(Calvinists)
பணியாற்றி இருக்கிறீர்கள்  

“ நீங்கள் செய்யும்
தவறுகள் அனைத்தையும்
உங்களுடைய அபரிதமான
சாமர்த்தியத்தால் மறைத்து
விடுகிறீர்கள் “


---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  27-01-2019
/////////////////////////////////////////////////////////////