April 04, 2019

திருக்குறள்-பதிவு-132


                    திருக்குறள்-பதிவு-132

“1500 ஆண்டுகளாக
மக்களால் நம்பப்பட்டு
பின்பற்றப்பட்டு வந்த
பூமியை மையமாக வைத்து
சூரியன் சுற்றி வருகிறது
என்ற டாலமியின்
பூமி மையக் கோட்பாட்டு
தவறு என்றும்
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றி
வருகிறது என்ற - சூரிய
மையக் கோட்பாட்டே சரி
என்றும் சொன்ன காரணத்திற்காக
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் (1473 - 1543)
பைபிளில் உள்ள கருத்துக்கு
எதிராக செயல்பட்டார்
பைபிளில் சொல்லப்பட்ட
ஆண்டவனின் வார்த்தைகளை
களங்கப்படுத்தினார்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை
கிறிஸ்தவ மதவாதிகள்
கிறிஸ்தவர்கள்
ஆகியோருக்கு எதிராக
செயல்பட்டார் என்று
பல்வேறு விதமான
குற்றச் சாட்டுக்கள்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் மீது சுமத்தப்பட்டது”

“இனி இதுபோன்ற
கருத்துக்களை பொதுமக்கள்
மத்தியில் பேசக்கூடாது
புத்தகம் அச்சிட்டு வெளியிடக்
கூடாது - என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
அச்சுறுத்தப்பட்டார்”

“நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் கிறிஸ்தவர்கள் மீது
ஒருவித அச்சத்துடனேயே
இருக்கும் வகையில்
அவருடைய வாழ்க்கையை
கழிக்கவைத்து துன்பம்
நிறைந்த மனதுடனேயே
நிம்மதி இல்லாமல் வாழ
வைத்து அவரைக் கொன்றனர்”

“டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறு என்றும்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
சூரியனை மையமாக
வைத்துத்தான் பூமி
சுற்றுகிறது என்ற - சூரிய
மையக் கோட்பாடே சரி
என்றும் தனது
தொலைநோக்கி மூலம்
நிரூபித்துக் காட்டிய
கலிலியோவின் (1564-1642)
கருத்துக்கள் - பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக இருப்பதாகவும்
பைபிளை இழிவு படுத்தும்
விதத்தில் இருப்பதாகவும்
கிறிஸ்தவ மத
நம்பிக்கைகளுக்கு எதிராக
இருப்பதாகவும் - கிறிஸ்தவ
மத நம்பிக்கைகளை
தகர்க்கும் விதத்தில்
இருப்பதாகவும்- கலிலியோ
மீது குற்றம் சுமத்தப்பட்டது “

“குற்றம் சுமத்தப்பட்ட
கலிலியோ மன்னிப்பு கேட்டால்
விட்டு விடுகிறோம் என்று
விசாரணைக் குழு
கலிலியோவை வற்புறுத்தி
பார்த்தும் - கலிலியோ
மன்னிப்பு கேட்க
மறுத்து விட்டார்”

“அதனால் கலிலியோ
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால் வீட்டுச்
சிறையில் அடைக்கப்பட்டார்
அவருக்கு செய்து தரவேண்டிய
எந்தவிதமான அடிப்படை
வசதிகளும் செய்து
தரப்படவில்லை- மருத்துவ
உதவிகள் கேட்டும் தகுந்த
மருத்துவ உதவிகளும்
அவருக்கு வழங்கப்படவில்லை
மருத்துவ உதவி வேண்டும்
என்று கலிலியோ பலமுறை
கேட்டும் செய்து தரப்படவில்லை”

“கலிலியோவிற்கு தேவையான
மருத்துவ உதவிகள்
வழங்கப்படாத காரணத்தினால்
அவருடைய பார்வைத்திறன்
படிப்படியாக குறைந்து
பார்வையை இழக்கும்
அவல நிலைக்கு வந்து
பார்வையையும் இழந்து
விட்டார் கலிலியோ”

பார்வையை இழந்த
நிலையிலும் கலிலியோ
வீட்டுச் சிறையில் தனது
ஆராய்ச்சியைத் தொடர்ந்து
செய்து கொண்டிருந்தார்”

“இவர்களைத் தவிர்த்து
வேறு யாரேனும்
சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்ற கருத்தை சொல்லி
இருக்கிறார்களா என்று
ஆய்வு செய்த போது
ஜியார்டானோ புருனோ
(1548-1600) என்ற தத்துவ
மேதை சொல்லி இருப்பது
தெரிய வந்தது”

“சூரியனை மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது என்று
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன  கருத்து
சரியானது தான் என்று
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
ஜியார்டானோ புருனோ
சொன்ன காரணத்தினால்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்டார் என்று
பல்வேறு விதமான
குற்றச்சாட்டுக்கள் அவர் மேல்
வரிசையாக சுமத்தி
குற்றவாளியாக்கி
7 ஆண்டுகள் சிறையில்
சித்திரவதை செய்து
மன்னிப்பு கேட்டால் விட்டு
விடுகிறோம் என்று
சொல்லியும் மன்னிப்பு
கேட்காத காரணத்தினால்
ஜியார்டானோ புருனோவை
உயிரோடு எரித்துக்
கொன்று விட்டனர்”

“சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று - முதலில்
நிக்கோலஸ் கோப்பர் நிக்கஸ்
சொன்ன காரணத்தினால்
அச்சுறுத்தப்பட்டு
அச்சத்தினாலேயே இறந்தார்
அடுத்து- ஜியார்டானோ
புருனோ உயிரோடு எரித்துக்
கொல்லப்பட்டார்,
அடுத்து- கலிலியோ வீட்டுச்
சிறையில் அடைக்கப்பட்டு
கண்களை இழந்த
நிலையில் இருக்கிறார்”

“கலிலியோ கண்களை
இழந்த நிலையில் வீட்டுச்
சிறையில் என்ன செய்து
கொண்டிருக்கிறார் என்பதைப்
பற்றிப் பார்ப்போம்

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  04-04-2019
/////////////////////////////////////////////////////