May 17, 2020

பரம்பொருள்-பதிவு-244


                ஜபம்-பதிவு-492
              (பரம்பொருள்-244)

“அப்படியே
உண்மையை
உணர்ந்தவர்கள்
இந்த உலகத்தில்
பிறந்தாலும்
இந்த சமுதாயத்தை
மாற்ற முடியாது
திருத்த முடியாது
சீரமைக்க முடியாது
என்று வருத்தப்பட்டு
பிரபஞ்ச ரகசியங்கள்
முதல்
பிரம்ம ரகசியம்
வரை
தன்னைச்
சார்ந்தவர்களுக்கோ
தன்னுடைய
குடும்பத்தைச்
சார்ந்தவர்களுக்கோ
தன்னுடைய
உறவினர்களுக்கோ
தன்னுடைய
நண்பர்களுக்கோ
சொல்லாமல்
உண்மையின்
ரகசியத்தை
தன்னுடைய
சீடர்களுக்கு
மட்டுமே சொல்லி
உண்மையை
உணர்ந்தவர்கள்
உண்மையை
காத்து
வந்திருக்கின்றனர் “

“உண்மையானது
இந்த சமுதாயத்தில்
மறைந்து தான்
வாழ்ந்து
கொண்டிருக்கிறது
உண்மை கூட
இந்த உலகத்தில்
வாழ்வதற்கு
மறைந்து தான்
சுவாசிக்க
வேண்டியதிருக்கிறது”

“உண்மைக்கே
இந்த நிலைமை
என்றால்
உண்மையை
கடைபிடிப்பவர்கள்
உண்மையை
உணர்ந்தவர்களுடைய
நிலையை சொல்ல
வேண்டியதில்லை”

“இந்த உலகம்
கெட்டு விட்டது
இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
கெட்டு விட்டனர்
என்று பிறரையே
குறை சொல்லித்
திரிந்து
கொண்டிருப்பவர்கள்
தாங்கள்
நல்லவர்களா
என்று ஒரு
நிமிடம்
கூட நின்று
யோசிப்பதேயில்லை ;
இவர்கள்
பக்கத்து வீடு
தீப்பிடித்து
எரியும் போது
அதை அணைக்க
ஓடி வராமல்
வேடிக்கை
பார்த்துக்
கொண்டிருப்பவர்கள்
அடுத்து தன்னுடைய
வீடும் எறியப்
போகிறது என்ற
அறிவு இல்லாமல்
இருப்பவர்கள் “

“பொய்யானது
நல்லது என்ற
போர்வையில்
இந்த உலகத்தில்
சுதந்திரமாக
உலா வரும் போது
உண்மைகள்
மறைந்து
வாழ வேண்டிய
நிலை தான்
ஏற்படும் “

“ஆனால்
உண்மையை
உணர்ந்தவர்கள்
உண்மையை
இந்த உலகத்தில்
செத்து விடக்
கூடாது
என்பதற்காக
தங்களுடைய
உயிரையே
கொடுத்துக்
கொண்டு தான்
இருக்கின்றனர்”

“உண்மையை
உணர்ந்தவர்கள்
தங்களை
வெளிப்படுத்திக்
கொள்ளாமல்
இந்த உலகத்தில்
வாழ்ந்து
கொண்டிருந்தாலும்
உண்மையானது
இந்த உலகத்தில்
உயிர்த்துடிப்போடு
வாழ்ந்து கொண்டு
தான் இருக்கும் “

“உண்மை
என்பதில் கடவுள்
என்பவர் குடி
கொண்டிருக்கிறார் ;
என்பதை
உணர்ந்து
கொண்டால்
கோயில்கள்
எதற்காக கட்டி
வைக்கப்பட்டு
இருக்கிறது
என்பதையும் ;
கோயிலில்
கடவுள்
சிலைகள்
எதற்காக வடித்து
வைக்கப்பட்டிருக்கிறது
என்பதையும் ;
அறிந்து
கொள்ளலாம் “

“உண்மை
என்பது
நம்முடைய
மனதில்
குடியேறாத வரை
கடவுள் என்ற
உண்மையை
யாராலும்
உணர்ந்து
கொள்ள முடியாது “

“கடவுளை
உணர்ந்து
கொள்ள
வேண்டும்
என்றால்
உண்மையை
உணர்ந்து
தான்
ஆக வேண்டும் “

---------- பரம்பொருள் சுபம்-----

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 17-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-243


               ஜபம்-பதிவு-491
              (பரம்பொருள்-243)

“உண்மையை
உரக்கச்
சொல்வதின் மூலம்
என்னுடைய
உயிர்
எடுக்கப்படுமானால்
நான்
என்னுடைய
உயிர்
இருக்கும் வரை
உண்மையை
சொல்லிக்
கொண்டு தான்
இருப்பேன்
என்று
சொல்லி
சாகும் வரை
உண்மையை
சொல்லி
உயிர் விட்டவர்
தான் சாக்ரடீஸ் “

“சாக்ரடீஸ்
சொல்லிச்
சென்ற உண்மை
மட்டுமல்ல
இந்த உலகத்தில்
உள்ள
அனைத்து
உண்மைகளும்
சீடர்களின்
மூலம் தான்
இந்த உலகத்தில்
காலம் காலமாக
கொண்டு செல்லப்
பட்டுக் கொண்டே
இருக்கிறது
உண்மையானது
இந்த உலகத்தில்
சீடர்களின்
மூலமே
வாழ்ந்து
கொண்டிருக்கிறது ”

“காலத்தை
கடந்து
உண்மையை
இந்த உலகத்தில்
கொண்டு செல்லும்
மிகப்பெரிய
பொறுப்பை
ஏற்று இருப்பவர்கள்
சீடர்கள் மட்டுமே ;
சீடர்கள்
மூலமே
உண்மையானது
இந்த உலகத்தில்
பரிமாற்றம்
செய்யப்பட்டுக்
கொண்டிருக்கிறது ;
உயிர்த்துடிப்புடன்
வாழ்ந்து
கொண்டிருக்கிறது ;”

“உண்மையை
உணர்ந்து
இந்த உலகத்திற்கு
சொல்ல
வந்தவர்களை
இந்த உலகம்
ஏற்றுக்
கொள்வதேயில்லை “

“பொய்யை
மூலதனமாகவும் ;
பித்தலாட்டத்தை
கடையாகவும் ;
தான் செய்யும்
தவறை
மறைத்து
நல்லவர்கள் போல்
தங்களை
காட்டிக் கொண்டு
பொய் வியாபாரம்
செய்பவர்களையும் ;
பணத்திற்காக
காலடியில் வீழ்ந்து
கிடப்பவர்களையும் ;
வாயில் இனிப்பு
வைத்து
மனதில்
நஞ்சு வைத்து
பேசிக் கொண்டு
திரிபவர்களையும் ;
தன்னுடைய
தவறை சரி
என்று நிரூபிக்க
ஆயிரம் பொய்க்
காரணங்களை
சொல்லிக் கொண்டு
நல்லவர்கள் போல்
நடித்துக் கொண்டு
திரிபவர்களையும் ;
தான் இந்த
உலகம்
தலை மேல்
வைத்து
கொண்டாடுகிறது”

“உண்மையை
உணர்ந்தவர்கள்
உண்மையை
இந்த உலகத்திற்கு
சொல்ல
வந்த போது
அதை கூட
இருப்பவர்கள்
யாரும்
உணர்ந்து
கொள்ளவேயில்லை
உண்மையை
உணர்ந்தவர்களை
அவர்களுடைய
எதிரிகளே
அதிகம்
உணர்ந்து
இருக்கின்றனர் ;”

“எதிரிகள்
மட்டுமே
நம்முடைய
திறமையை
சரியாகக்
கணிப்பார்கள்
எதிரிகளால்
மட்டுமே
நம்முடைய
திறமையை
சரியாகக்
கணிக்க
முடியும் - கூட
இருப்பவர்களால்
நம்முடைய
திறமையை
சரியாகக்
கணிக்க
முடியாது
என்பதற்கு
சாக்ரடீஸ்
அவர்களுடைய
மரணமே சாட்சி “

“சமுதாயம்
தான் என்ற
ஆணவத்தால்
தலை விரித்து
சதிராட்டம்
ஆடிக்
கொண்டிருப்பதால்
தான்
உண்மையை
உணந்தவர்கள்
இந்த உலகத்தில்
பிறப்பதேயில்லை “


----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 17-05-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-242


               ஜபம்-பதிவு-490
             (பரம்பொருள்-242)

“மறைத்து
வைக்கப்பட்ட
உண்மை
என்று எதுவுமே
இந்த உலகத்தில்
இல்லை ;
தகுதியானவர்கள்
உண்மையை
உணரும் போது
பிரபஞ்சத்தில்
உள்ள அனைத்து
உண்மைகளும்
ஒரு நாள்
வெளிப்பட்டே
ஆக வேண்டும் “

“வெளிப்படாத
உண்மை என்று
எதுவுமே - இந்த
உலகத்தில்
இல்லை ;
வெளிப்படுத்தப்படாத
உண்மை தான்
இந்த உலகத்தில்
உண்டு ;”

“உண்மையை
அறிந்தவர்கள்
உண்மையின்
உருவை
இந்த உலகத்திற்கு
சொல்ல வேண்டும்
என்று நினைத்து
அதைச் சொல்ல
வந்த போது
சொல்ல
வந்தவர்களுடைய
தூய்மையான
மனதை புரிந்து
கொள்ளாமல்
தான் வாழ
வேண்டும் ;
தன்னுடைய
குடும்பம் வாழ
வேண்டும் ;
தன்னுடைய
சந்ததிகள்
வாழ வேண்டும் ;
என்று
சுய நலத்துடனும்
சுக போகத்தை
அனுபவிக்க
வேண்டும்
என்ற
எண்ணத்துடனும்
தன்னுடைய
சுயத்தை
வெளிக்காட்டி
தன்னுடைய
எண்ணங்களை
படம்
பிடித்துக் காட்டி
நல்லவர்கள்
போல் நடித்து
உண்மையை
உணர்ந்தவர்களை
அழித்தவர்களே
இந்த உலகத்தில்
அதிகம் “

“தன்னுடைய
சுயநலத்திற்காக
உண்மையை
உணர்ந்தவர்களை
அழித்து விட்டால்
உண்மை
எப்படி இந்த
உலகத்தில்
வாழும் ;
சுய நலம்
தான் வாழும் ;”

“உண்மையை
உணர்ந்து
அதை சொல்ல
வந்ததால்
அழிக்கப்பட்டவர்கள்
காலத்தால்
அழிந்து
போனதில்லை ;
உண்மையை
உணர்ந்தவர்களை
அழித்தவர்கள்
தான் இந்த
உலகத்தில்
அழிந்து போய்
இருக்கிறார்கள் “

“உண்மையை
உணர்ந்து
அதை சொல்ல
வேண்டும் என்று
வந்தவர்களை
அழித்து விட்டு
மகிழ்ச்சி
போதையில்
ஆனந்தக்
கூத்தாடியவர்களை
சரித்திரம்
தன்னுடைய
நினைவில்
வைத்துக்
கொள்ளவில்லை ;
உண்மையை
உணர்ந்து
அதை சொல்ல
வந்ததால்
அழிக்கபட்டவர்களைத்
தான் சரித்திரம்
தன்னுடைய
நினைவில்
வைத்திருக்கிறது “

“கிரேக்க
தத்துவ மேதை
சாக்ரடீஸ்
உண்மை
என்றால் என்ன
என்பதை
உணர்ந்து
தான் உணர்ந்த
உண்மையை
இந்த உலகமும்
அறிந்து பயன்
பெற வேண்டும்
என்பதற்காக
அதை இந்த
உலகத்திற்கு
சொல்ல
வேண்டும் என்று
உண்மையை
சொல்ல
வந்த போது
சில சுயநலவாதிகள்
அவரை விஷம்
வைத்து
கொல்லும்
தண்டனையை
அளித்து
ஆணவ வெறியை
தலையில் கொண்டும் ;
அதிகார வெறியை
மனதில் கொண்டும் ;
பண வெறியை
உயிரில் கொண்டும் ;
சுய நலத்தை
இரத்தத்தில்
கொண்டும் ;
தலை விரித்து
ஆடிய போது
அவருக்கு
உதவியாகவும் ;
ஆறுதலாகவும் ;
இருந்தது
அவருடைய
மனைவியான
சாந்திப்பி
என்பவரும்
அவருடைய
சீடர்களும் தான் “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 17-05-2020
//////////////////////////////////////////