March 08, 2020

பரம்பொருள்- பதிவு-152


             பரம்பொருள்- பதிவு-152

அரவான்  :
“களப்பலி ஆனாலும்
வெட்டுப்பட்ட என்
தலைக்கு உயிர்
இருக்க வேண்டும் ;
வெட்டுப்பட்ட என்னுடைய
தலையில் உள்ள
கண்களின் மூலம்
குருஷேத்திரப் போர்
முழுவதையும்
பார்க்கும் சக்தியை
எனக்குத் தர வேண்டும் ;”

இது என்னுடைய
முதலாவது வரம்”

கிருஷ்ணன்  :
“முதல் வரத்தில்
எந்த பிரச்சினையும்
இல்லை ;
அடுத்து ? “

அரவான்  ;
“நான் ஒரு பெண்ணை
திருமணம் செய்து
கொண்டு அவளுடன்
ஓர் இரவு
தாம்பத்ய சுகம்
அனுபவிக்க வேண்டும் “

கிருஷ்ணன்  :
“அரவான் நீ கேட்ட
முதல் வரத்தை
நிறைவேற்றி விடலாம் ; ”

“ஆனால்
இரண்டாவது வரத்தை
நிறைவேற்றுவது என்பது
கடினமான ஒன்று  ;
நிறைவேற்றுவதற்கு
தேவையான
சாத்தியக் கூறுகள்
எதுவும் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை ; “

“நாளை காலை - நீ
களப்பலியாகப் போகிறாய்
என்பது தெரிந்தால்
எந்த பெண் - உன்னை
இன்று இரவு
திருமணம் செய்து
கொள்ள சம்மதிப்பாள் ;

“சம்மதிக்கக்கூடிய பெண்
இந்த உலகத்தில்
எங்கே கிடைப்பாள் ;
எங்கே தேடினாலும்
கிடைக்க மாட்டாளே ; “

“அப்படி இருக்கும் போது
நீ கேட்ட இரண்டாவது
வரத்தை என்னால்
எப்படி நிறைவேற்ற
முடியும் என்று
எனக்குத் தெரியவில்லை “

“இருந்தாலும் எனக்கு
ஒரு சந்தேகம்
ஏற்பட்டுள்ளது அதை
நீ தான் தீர்க்க வேண்டும் “

அரவான்  ;
“நான் தீர்க்கும் அளவுக்கு
தங்களுக்கு அப்படி
என்ன சந்தேகம்
தங்களுக்கு
ஏற்பட்டுள்ளது பரந்தாமா ? “

கிருஷ்ணன்  :
“பெண் சுகம் அனுபவிக்க
வேண்டும் என்ற
எண்ணத்துடன் தானே
நீ இரண்டாவது
வரத்தைக் கேட்கிறாய் “

அரவான் :
“இல்லை நான்
அதற்காக கேட்கவில்லை “

“நான் கேட்ட வரத்தின்
அர்த்தத்தை தாங்கள்
தவறாக எடுத்துக்
கொண்டு இருக்கிறீர்கள் ‘

“கடவுளான தாங்களே
தவறான அர்த்தத்தை
எடுத்துக் கொண்டீர்கள்
என்றால் - இந்த
உலகத்தில் வாழும்  
மக்களுக்கு நான்
கேட்ட வரத்தின்
அர்த்தம் எப்படி புரியும் “

“நான் இரண்டாவது
வரத்தைக் கேட்டதற்கு
இரண்டு காரணங்கள்
இருக்கிறது “

“ஒன்று
நான் இறந்த பிறகு
கணவன் என்று சொல்லி
என் பிணத்தை
கட்டிபிடித்து கதறி
அழுவதற்கு  மனைவியாக
இந்த உலகத்தில்
எனக்கு ஒரு உறவு
இருக்க வேண்டும் - என்ற
காரணத்திற்காகவும் ;
நான் இறந்த பிறகு
என்னுடைய இறுதிச்
சடங்கை உரிமை
கொண்டாடி செய்து
முடிப்பதற்கு மனைவி
என்ற முறையில்
ஒரு பெண் இருக்க
வேண்டும் என்ற
காரணத்திற்காகவும் ;
தான் - நான் ஒரு
பெண்ணை திருமணம்
செய்து கொண்டு
தாம்பத்ய சுகம்
அனுபவிக்க வேண்டும்
என்று கேட்டேன் “

“இரண்டு
ஒரு மனிதனுடைய
வாழ்வில் எதிர்ப்படும்
நான்கு பருவங்களான
பிரம்மச்சரியம் ;
கிரகஸ்தம் ;
வானப்பிரஸ்தம் ;
சந்நியாசம் ;
ஆகியவற்றில்
பிரம்மச்சரியம் ;
வானப்பிரஸ்தம் ;
சந்நியாசம் ஆகிய
மூன்றையும்
பார்த்து விட்டேன் “

“இல்லறம் என்று
சொல்லப்படக்கூடிய
கிரகஸ்தம் என்பதையும்
பார்த்து விட்டால்
நான் முழுமையான
மனிதனாகி விடுவேன்  
என்ற காரணத்திறக்காகவும்
தான் – நான் ஒரு
பெண்ணை திருமணம்
செய்து கொண்டு
தாம்பத்ய சுகம்
அனுபவிக்க வேண்டும்
என்று கேட்டேன் “

“நான் இரண்டாவது
வரத்தைக் கேட்டதற்கு
இவைகள் இரண்டும்
தான் காரணம் ;
வேறு எந்தவொரு
காரணமும் இல்லை “

-----------இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 08-03-2020
------------மகளிர் தின
      வாழ்த்துக்கள்
//////////////////////////////////////////