January 27, 2019

திருக்குறள்-பதிவு-90


                     திருக்குறள்-பதிவு-90

கார்டினல் சார்டோரி :
“ சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றி
வருகிறது என்று
சொல்லி இருக்கிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ அந்த கருத்தை
நான் சொல்லவில்லை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
கருத்தைத் தான்
நான் சரியானது
என்று சொன்னேன் “

கார்டினல் சார்டோரி :
“இரண்டும் ஒன்று தான்”

ஜியார்டானோ புருனோ :
“அப்படியும் எடுத்துக்
கொள்ளலாம்”

கார்டினல் சார்டோரி :
“நீங்கள் சொன்னது
பைபிளில் ஆண்டவரால்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக இருக்கிறது “

“ காலம் காலமாக
பைளிளை புனித
நூலாகக் கருதி
பின்பற்றி வரும்
கிறிஸ்தவர்களின்
மத நம்பிக்கைக்கு
எதிராக இருக்கிறது “

ஜியார்டானோ புருனோ :
“ நான் பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக எதுவும்
சொல்லவில்லை ;
அறிவியல் ரீதியாக
கண்டுபிடித்ததை
சரியானது என்று
சொன்னேன் ; “

கார்டினல் சார்டோரி :
“ அதைத் தான்
நாங்கள் கிறிஸ்தவ
மத நம்பிக்கைக்கு
எதிராக இருக்கிறது
என்கிறோம் “

ஜியார்டானோ புருனோ :
“ விஞ்ஞானத்தை
மதத்துடன்
தொடர்புபடுத்தி
எதிரானது என்கிறீர்கள் ;
விஞ்ஞானத்தை
மதத்துடன் தொடர்பு
படுத்தாதீர்கள் ;
விஞ்ஞானத்தை
சுதந்திரமாக
இருக்க விடுங்கள் ;
மதத்திற்கு அடிமையாக
விஞ்ஞானத்தை மாற்ற
முயற்சி செய்யாதீர்கள் ; “

கார்டினல் சார்டோரி :
“என்ன செய்வது என்று
எங்களுக்கு தெரியும் ;”
அதைப் பற்றி நீங்கள்
பேச வேண்டாம் ; “

ஜியார்டானோ புருனோ :
“நான் சொன்ன
விஞ்ஞான கருத்தை
சரியானதா? தவறானதா?
என்று ஆராய்ந்து
கூட பார்க்காமல்
மத நம்பிக்கைக்கு
எதிராக இருக்கிறது
என்கிறீர்கள் “

கார்டினல் சார்டோரி :
“ சரியானதா?
தவறானதா? என்று
ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்க நாங்கள்
ஒன்றும் ஆராய்ச்சியார்கள்
இல்லை “

ஜியார்டானோ புருனோ :
“ அதைத் தான் நானும்
சொல்கிறேன் நீங்கள்
ஆராய்ச்சியாளர்கள்
இல்லை ;
மதவாதிகள் என்று;
ஆராய்ச்சி செய்து
கண்டுபிடிக்கப்பட்ட
கண்டுபிடிப்பை தவறு
என்று மதவாதிகளாகிய
நீங்கள் சொல்வதை
தவறு என்று எப்படி
ஏற்றுக் கொள்ள முடியும் ;
நான் சொன்னது
சரியானதா?
தவறானதா? என்று
ஆராய்ச்சியாளர்கள்
ஆராய்ச்சி செய்து
சொல்லட்டும் ; “

“ அதை விடுத்து
மதவாதிகளாகிய நீங்கள்
என்னுடைய கருத்தை
தவறு என்றும்,
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராகவும் இருக்கிறது
என்றும்,
சொல்வதை எப்படி
ஏற்றுக் கொள்ள முடியும் “

(ஜியோர்டானோ
புருனோவிடம்
வார்த்தைகளால்
மாட்டிக் கொண்டதை
உணர்ந்து கொண்ட
கார்டினல் சார்டோரி
கோபத்துடன் பேசலானார்)

கார்டினல் சார்டோரி :
“ புருனோ கேட்ட
கேள்விகளுக்கு மட்டும்
பதில் சொல்லுங்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ நான் கேட்ட
கேள்விகளுக்கு தான்
பதில் சொல்லிக்
கொண்டு இருக்கிறேன் “

கார்டினல் சார்டோரி :
“கேட்ட கேள்விகளுக்கு
தகுந்த பதில்களை
நீங்கள் சொல்வதேயில்லை “

ஜியார்டானோ புருனோ :
“ தகுந்த பதில்களை
சொல்வதற்கு தேவையான
கேள்விகளை நீங்கள்
கேட்பதேயில்லை “

கார்டினல் சார்டோரி :
“ நீங்கள் தேவையற்றதை
பேசிக் கொண்டிருக்கிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ நீங்கள் மட்டும்
தேவையானவற்றை பேசிக்
கொண்டு இருக்கிறீர்களா…….? “

கார்டினல் சார்டோரி :
“ போதும் புருனோ
நிறுத்துங்கள் “

(ஜியார்டானோ
புருனோவுக்கும் ;
கார்டினல் சார்டோரிக்கும் ;
வாக்குவாதம் உச்ச
கட்டத்தை அடைந்ததால்
அதை பார்த்துக்
கொண்டிருந்த
விசாரணைக்குழு
பதற்றத்தைத் தணிக்க
கேள்விகள் கேட்க
தொடங்கியது)

விசாரணைக்குழு
அதிகாரி 1
“ Father Bruno…………..!
நீங்கள் ஜெர்மனியில்
லூத்தரன்களுக்காகவும்,
(Lutherans)
ஜெனிவாவில்
கால்வானிஸ்ட்டுகளுக்காகவும்
(Calvinists)
பணியாற்றி இருக்கிறீர்கள்  

“ நீங்கள் செய்யும்
தவறுகள் அனைத்தையும்
உங்களுடைய அபரிதமான
சாமர்த்தியத்தால் மறைத்து
விடுகிறீர்கள் “


---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  27-01-2019
/////////////////////////////////////////////////////////////