July 24, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-48


               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-48

இரண்டு : பொய்யாக நட்பு
            கொள்பவனின் நட்பு

பொய்யாக நட்பு
கொள்பவன்
முக்கியமாக நான்கு
செயல்களைச் செய்கிறான்,

ஒன்று :தப்பான
       செயலைச்
       செய்யச் சொல்வது
இரண்டு: காட்டிக் கொடுப்பது
மூன்று : போட்டுக் கொடுப்பது
நான்கு  : சேர விடாமல் செய்வது

தன்னுடைய நண்பன்
தப்பான செயலைச்
செய்யப் போகிறான்.
என்பதை அறிந்து
நண்பன் செய்யப்போகும்
அந்த தப்பான
செயலால் நண்பனுக்கு
துன்பமான விளைவுகளே
ஏற்படும் என்பது
உறுதியாக தெரிந்திருந்தும்
இந்த தப்பான
செயலைச் செய்வதால்
ஏற்படக்கூடிய விளைவுகளை
நண்பனிடம்
விளக்கமாக எடுத்துக்கூறி
அந்த தப்பான
செயலைச் செய்ய
வேண்டாம் என்று
சொல்லாமல்
இந்த செயலைச்
செய் என்ன
நடக்கும் பார்க்கலாம்
என்று நண்பனுக்கு
தப்பான அறிவுரை
கொடுத்து
தப்பான செயலைச்
செய்ய வைப்பது
தப்பான செயலைச்
செய்யச் சொல்வது
எனப்படும்

நம்முடன் 
நண்பராக இருந்து
நம்மைப் பற்றி
முழுவதும் தெரிந்து
கொண்டவர்
நமக்கு நண்பராக
இருந்து கொண்டே
நமக்கு விரோதியாக
இருக்கும் வேறு
ஒருவரிடம்
மறைமுகமாக நட்பு
கொண்டு அவரிடம்
கள்ளத்தனமாக
இணைந்து கொண்டு
நம்மிடம் உள்ள
நிறை குறைகளை
அவரிடம்
எடுத்துச் சொல்லி
நம்மை அழிப்பதற்குத்
தேவையான செயல்களைச்
செய்வது
காட்டிக் கொடுப்பது
எனப்படும்.

நம்மிடம்
பழகும் நண்பர்
நம்மிடம்
பழகிக் கொண்டே
நமக்கு பிடிக்காதவரிடமோ
அல்லது
நமக்கு பிடித்தவரிடமோ
நம்மைப் பற்றி
தவறான
தகவல்களைச் சொல்லி
நம்முடைய தகுதியை
குறைக்க முயற்சி
செய்வது
போட்டுக் கொடுப்பது
எனப்படும்.

முதல் நண்பருடன்
நட்பு வைத்திருக்கும்
இரண்டாவது நண்பர்
தன்னுடன் நட்பு
வைத்திருக்கும்
மற்றொரு நண்பரான
மூன்றாம் நண்பர்
முதல் நண்பரைப்
போலவே
ஒத்த கருத்துடன்
இருக்கிறார்
என்பதை உணர்ந்து
இத்தகைய ஒரே
கருத்தைக் கொண்ட
மூன்றாம் நண்பரையும்
முதல் நண்பரையும்
ஒன்றாக
சேர்த்து வைப்பதன்
மூலம்
முதல் நண்பரும்
மூன்றாம் நண்பரும்
உயர்ந்துவிடப்போகிறார்கள்
என்ற தப்பான
எண்ணம் கொண்டு
அவர்களை
ஒருவருக்கொருவர்
அறிமுகப் படுத்தி
வைக்காமலும்
ஒருவரை ஒருவர்
சந்திக்க விடாமலும்
ஒருவரை ஒருவர்
சேர விடாமலும் தடுப்பது
சேர விடாமல்
தடுப்பது எனப்படும்

இத்தகைய கெடுதல் தரும்
தீமையான செயல்களைச்
செய்யும் நண்பன்
பொய்யான நண்பன்
இத்தகைய பொய்யான
நண்பனின் நட்பு தான்
பொய்யாக நட்பு
கொள்பவனின் நட்பு

அதாவது
நண்பன் நண்பனாக
இருந்து நண்பன்
செய்ய வேண்டிய
நன்மை தரும்
செயல்களைச் செய்யாமல்
தீமை தரும் செயல்களைச்
செய்பவன் தான்
பொய்யாக நட்பு கொள்பவன்
இத்தகைய பொய்யாக நட்பு
கொள்பவனின் நட்பு தான்
முகநக  நட்பு
எனப்படும்.

நண்பன் நண்பனாக
இருந்து நண்பன்
செய்ய வேண்டிய
நன்மை தரும்
செயல்களைச் செய்யாமல்
தீமை தரும்
செயல்களைச் செய்யும்
பொய்யாக நட்பு
கொள்பவனின் நட்பு
நட்பே கிடையாது

நண்பன் நண்பனாக
இருந்து நண்பன்
செய்ய வேண்டிய
நன்மை தரும்
செயல்களைச் செய்யும்
உண்மையாக நட்பு
கொள்பவனின் நட்பே
நட்பு என்பதை

“”””முகநக நட்பது
நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு””””

என்ற திருக்குறளின்
மூலம் விளக்குகிறார்.
திருவள்ளுவர்.

--------- இன்னும் வரும்
----------24-07-2018
//////////////////////////////////////////////