March 22, 2012

இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-முத்திசேறச்-பதிவு-26



               இயேசு கிறிஸ்து-சிவவாக்கியர்-முத்திசேறச்-பதிவு-26

               “”பதிவு இருபத்துஆறை விரித்துச் சொல்ல
                                  ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

இயேசு கிறிஸ்து :
உபவாசித்தல் எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும்,
எத்தகைய உபவாசித்தலை பிதா ஏற்றுக் கொள்வார்  
என்பதைப் பற்றியும் ,
எத்தகைய உபவாசித்தலை பிதா ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதைப்
பற்றியும் ,
இயேசு கீழ்க்கண்ட வசனங்கள் மூலம் விளக்குகிறார் :

நீங்கள் உபவாசிக்கும் போது , மாயக்காரரைப் போல முகவாடலாய் இராதேயுங்கள் ; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள் ;அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று , மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்                                                                 
                                                                     --------மத்தேயு - 6 : 16

நீயோ உபவாசிக்கும் போது , அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல் , அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக ,உன் தலைக்கு எண்ணெய் பூசி ,உன் முகத்தைக் கழுவு.”
                                                                          -------மத்தேயு - 6 : 17  
                           
அப்பொழுது ,அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.”
                                                                        ---------மத்தேயு - 6 : 18                                    

இறைவன் என்றால் யார்  என்றும் ;
இறைவனின் சக்திகள் எவை என்றும் ;
இறைவனின் தன்மைகள் எவை என்றும் ;
இறைவனின் மகிமைகள் எவை என்றும் ;
          அறிந்து கொள்வதற்கும் ;
          உணர்ந்து கொள்வதற்கும் ;
          புரிந்து கொள்வதற்கும் ;
          பல்வேறு மதங்களில்
          பல்வேறு பெயர்களில்
          வடிவமைக்கப்பட்டு ,
          பயன்படுத்தப்பட்டு ,
          பின்பற்றப்பட்டு ,
செயல்பட்டு வந்த உபவாசம் , விரதம் , நோன்பு - இன்று
கால மாற்றத்தாலும் ;
மனிதனின் சுய நலத்தாலும் ;
மனிதனின் தீர்க்க முடியாத ஆசையாலும் ;
அதனுடைய அடிப்படை குணம் மாற்றப்பட்டு

மனிதன் தன் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கும் ;
ஆசையை பூர்த்தி செய்து கொள்வதற்கும் ;
கனவுகளை நிஜமாக்குவதற்கும் ;
கற்பனைகளை கைக்கொள்வதற்கும் ;
தன் விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதற்கும் ;
ஒரு வடிகாலாக விரதத்தை மாற்றி விட்டான் .

பேரின்ப நுழைவாயிலின் திறவுகோலாக இருந்த விரதம் - இன்று
சிற்றின்பத்தை அடைந்து வாழ்க்கை சுகத்தை
துய்க்கும் சாளரமாக மாறி விட்டது .
 
காலங்கள் மாறினாலும் ;
விரதத்தின் அடிப்படைகள் மாறினாலும் ;
விரதத்தின் குணங்கள் மாறினாலும் ;
மனிதனின் தன்மைகள் மாறினாலும் ;
மனிதனின் சிந்தனைகள் மாறினாலும் ;
மனிதனின் தேவைகள் மாறினாலும் ;
மனிதனின் ஆசைகள் மாறினாலும் ;
விரதம் என்பது பல்வேறு முறைகளில் பயன் படுத்தப்பட்டு ,
பின்பற்றப்பட்டு வருகிறது .

விரதம் இரண்டு முறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது :
    1. நேரத்தை அடிப்படையாகக் கொண்டது
    2. நாட்களை அடிப்படையாகக் கொண்டது

1.நேரத்தை அடிப்படையாகக் கொண்டது :
நேரத்தை அடிப்படையாகக் கொண்ட விரதத்தைக் கீழ்க்கண்ட இரண்டு முறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டும் :

முறை - 1 :
1.  காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செய்ய வேண்டும் .
2.  அன்று இடைப்பட்ட கால அளவில் துhங்கக் கூடாது .
3.  சிகரெட்,புகையிலை,போதைவஸ்துகளை உபயோகப் படுத்தக் கூடாது.
4.  மீன் ,இறைச்சி போன்ற அசைவ உணவுகளை உண்ணக் கூடாது .

முறை - 2 :
1.   காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செய்ய வேண்டும் .
2.   அன்றைய குறிப்பிட்ட கால இடை வெளியில் துhங்கக் கூடாது.
3.   எந்த உணவையும் சாப்பிடக் கூடாது .
4.   நீர் பருகக் கூடாது.
5.   யாருடனும் பேசக் கூடாது .
6.   சிகரெட்,புகையிலை,போதைவஸ்துகளை உபயோகப் படுத்தக் கூடாது.
7.  மீன்,இறைச்சி,போன்ற அசைவ உணவுகளை உண்ணக் கூடாது.
8.  இறைவனின் நாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்க வேண்டும்.
9.   இறை சிந்தனையுடனே இருக்க வேண்டும்.
10.  இறை சம்பந்தப்பட்ட புத்தகங்களை படிக்க வேண்டும்.
11.  வீட்டில் இருந்தபடியே செய்ய வேண்டும்.
12.   வெளியிலோ,பணி நிமித்தமாகவோ,வியாபாரம் சம்பந்தப்பட்டோ, வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.
13.  அன்னியர்  யாரையும் பார்க்கக் கூடாது.
14.  போன்,தொலைபேசி கொண்டு யாருடனும் பேசக் கூடாது.
15.   பொய்,சூது,கொலை,கொள்ளை,கற்புநெறி பிறழ்தல் ஆகியவற்றை எண்ணம்,சொல்,செயலால் தீண்டக் கூடாது .
16.   பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு - தாழ்வு மனப்பான்மை ,வஞ்சம் எனப்படும் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியங்களை எண்ணம், சொல், செயலால் தீண்டக் கூடாது .

இவைகள் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் விரதம் ஆகும்.

 2 . நாட்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் விரதம்
நாட்களை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் விரதத்தை கீழ்க்கண்ட இரண்டு முறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டும் :

முறை - 1:
1.  41 நாட்கள் ( அல்லது ) 45 நாட்கள் ( அல்லது ) 48 நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் .
2.  புகையிலை ,சிகரெட், போதை வஸ்துகளை சாப்பிடக் கூடாது .
3.  மீன், இறைச்சி, அசைவ உணவுப் பொருள்களைச் சாப்பிடக் கூடாது.

முறை - 2 :
1.   41 நாட்கள் ( அல்லது ) 45 நாட்கள் ( அல்லது ) 48 நாட்கள் செய்ய வேண்டும் .
2.  புகையிலை, சிகரெட், போதை வஸ்துகளை சாப்பிடக் கூடாது.
3.  மீன் ,இறைச்சி, அசைவ உணவுப் பொருள்களைச் சாப்பிடக் கூடாது.
4.  ஒரே இடத்தில் அதாவது எந்த ஊரில்,எந்த வீட்டில் விரதத்தை செய்கிறோமோ அங்கே தான் 48 நாட்களும் செய்ய வேண்டும் .
5.  குடும்ப விவகாரங்கள், விழாக்கள், வியாபார வேலைகள், பணி நிமித்தம் வெளியூர்  செல்லக் கூடாது.
6.   எந்த வீட்டில் செய்கிறோமோ அந்த வீட்டில் தான் இரவு வந்து படுக்க வேண்டும் .
7.     காலையும், மாலையும் குளிக்க வேண்டும் .
8.    இறைவன் நாமத்தை உச்சாடணம் செய்ய வேண்டும் .
9.     இறைவனை நினைத்து ஜெபம் செய்ய வேண்டும்.
10.  பொய் ,சூது, கொலை, கொள்ளை, கற்புநெறி பிறழ்தல் ஆகிய பஞ்சமா பாதகங்களை எதன் பொருட்டும் செய்யக் கூடாது எண்ணம், சொல், செயலால் தீண்டக் கூடாது  .
11.  பேராசை ,சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு - தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய அறுகுணங்களை காம ,குரோத, லோப, மோக ,மத, மாச்சரியங்களை எண்ணம், சொல், செயலால் தீண்டக் கூடாது.
12.  இறப்பு நிகழ்ந்த வீட்டிற்கோ,பிணத்தின் அருகிலேயே செல்லக் கூடாது.

மேற்கண்ட முறைப்படி விரதங்களை மேற்கொண்டு செய்யும் போது
மற்றவர் தன்னை பாராட்ட வேண்டும்
புகழ்ந்து பேச வேண்டும்
கடவுள் மேல் எவ்வளவு பக்தி வைத்துள்ளார் ;
கடவுள் நெறி முறைகளை எப்படி பின் பற்றுகிறார் ;
கடவுளுக்காக எவ்வாறெல்லாம் தன்னை அர்ப்பணிக்கிறார் ;
கடவுளுக்காக தன் உடலை எப்படி வருத்துகிறார் ;
கடவுளின் தன் மனதை எவ்வாறு கஷ்டப்படத்தி செலுத்துகிறார் ;
கடவுள் மேல் எவ்வளவு பக்தி கொண்டிருக்கிறார் - என்று
மற்றவரெல்லாம் பாராட்ட வேண்டும்

என்ற நினைப்பை மனதில் கொண்டு
        முகத்தை வாட்டமாகவும் ,
        உடலை களைப்பாகவும் ,
        செயலை தளர்ச்சியாகவும் ,
        சொல்லை குறைவாகவும் ,
        வைத்துக் கொண்டு
        அலங்காரம் செய்யாமல் ,
        நல்ல ஆடை அணியாமல்,
        துhய்மையாக இல்லாமல் இருந்தால் ,

கடவுளிடம் பக்தி இருப்பது போல்
வெளி வேஷம் போட்டுக் கொண்டால் ,
மக்கள் வேண்டுமானால் உண்மையான பக்தி என்று
ஏமாறுவார்களே ஒழிய இறைவன் ஏமாறமாட்டார்.

ஏமாற்றுக் காரர்களுக்கு,
நயவஞ்சக மனம் கொண்டோருக்கு ,
வெளி வேஷம் போட்டு நடிப்பவருக்கு ,
எத்தகைய தண்டனையை கொடுக்க வேண்டுமோ?
அத்தகைய தண்டனையை கடவுள் கொடுப்பார்
எனவே கடவுள் மேல் உண்மையான பக்தி கொண்டு
வெளி உலகுக்கு நடிக்காமல்
நல்ல உடை உடுத்தி
துhய்மையாக இருந்து கொண்டு

விரதம் இருப்பதை அனைவருக்கும்
வெளிக் காட்டும் படி நடிக்காமல்
உண்மையான உள்ளம் கொண்டு,
துhய்மையான நெஞ்சம் கொண்டு,
கருணையான இதயம் கொண்டு,
கண்ணியமான செயல் கொண்டு,
செயல்படுத்தும் போது மட்டுமே
இறைவன் நம் விரதத்தை ஏற்றுக் கொண்டு
அதற்குரிய பலனை அளித்து நம்மை வாழ்வில் உயர்த்துவார்
என்கிறார்  இயேசு.     



சிவவாக்கியர்:
முத்திசேறச் சித்தியிங்கு முன்னளிப்பேன் பாரெனச்
சத்தியங்கள் சொல்லியங்குஞ் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம்வ யிறுவவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப்ப ணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே
                     ----சிவவாக்கியர்-----பெரியஞானக் கோவை----

களவாடும் போது கள்வனுக்கு பயம் !
காதலிக்கும் போது காதலர்க்கு பயம் !
ஈன்றெடுக்கும் போது தாய்க்கு பயம் !
தேர்தல் முடிவு வரும் போது அரசியல்வாதிக்கு பயம் !
பரிட்சை முடிவு தெரியும் போது மாணவனுக்கு பயம் !
திருமணத்தின் போது பெண்ணுக்கு பயம் !
திருமணம் முடிந்த போது ஆணுக்கு பயம் !
பசி வாட்டும் போது ஏழைக்கு பயம் !
படித்து முடித்த போது பட்டதாரிக்கு பயம் !
சிந்திக்கும் போது கற்பனைக்குப் பயம் !
உறவாடும் போது ஒழுக்கத்துக்குப் பயம் !
முன்னேறும் போது முயற்சிக்கு பயம் !
வாழும் போது நம்பிக்கைக்கு பயம் !
இறக்கும் போது இறப்பிற்கு பயம் !

என்று பல்வேறு வகைப்பட்ட பயத்தால்
வாழ்க்கையை ஓட்டும் மக்களுக்கு

  இன்பத்தின்  கதவுகளைத் திறந்து காட்டுகிறேன் ;
  இல்லாமையை நீக்கி காட்டுகிறேன் ;
  துன்பத்தைத் துரத்திக் காட்டுகிறேன் ;
  வறுமையை விரட்டிக் காட்டுகிறேன் ;
  ஏழ்மையை விலக்கிக் காட்டுகிறேன் ;
  சோகங்களை ஓட்டிக் காட்டுகிறேன் ;
  முக்திக்கான திறவுகோலைக் காட்டுகிறேன் ;
  ஞானத்திற்கான வழியைக் காட்டுகிறேன் ;
  ஆன்மீகத்தின் உயர்வுகளை காட்டுகிறேன் ;
  பிரபஞ்சத்தின் ரகசியத்தைக் காட்டுகிறேன் ;
  மறைபொருளின் சூட்சுமத்தைக் காட்டுகிறேன் ;
  ஆதிஅந்தத்தை முடிச்சவிழ்த்துக் காட்டுகிறேன் ;

என்று சாமிக்குரிய இலக்கணங்களாக
இந்த உலகம் வகுத்து வைத்திருக்கும்
காலம் காலமாக இந்த உலகத்தால்
பின்பற்றப்பட்டு வந்திருக்கும்
சாமியாருக்குடைய அங்க அடையாளங்கள் ,
பேச்சு வழக்கங்கள் ,
செயல்படும் விதங்கள் ,
நடைமுறை ஒழுக்கங்கள் ,
கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் ,
பின்பற்றப்படும் வாழ்வியல் நெறிமுறைகள் ,

ஆகியவற்றைக் கொண்டு
      சத்தியங்கள் சொல்லுகிறேன் ;
      உண்மையை உரைக்கிறேன் ;
      பொய்மையை விரட்டுகிறேன் ;
      நித்தியத்தை விதைக்கிறேன் ;
      அநித்தியத்தை புதைக்கிறேன் ;
      அறிவுக் கதவை திறக்கிறேன் ;
      ஞான ஒளி ஏற்றுகிறேன் ;
      முக்தியை அளிக்கிறேன் ;
      முழுமுதற் பொருள் ஆக்குகிறேன் ;
      பரம் பொருளுடன் இணைக்கிறேன் ;
      பிறப்பை அறுக்கிறேன் ;
      இறவாவரம் அளிக்கிறேன் ;

என்று தன்னைக் காத்துக் கொள்ள ;
தன் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள ;
தன் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள ;
தன் வம்சத்தை உயர்த்திக் கொள்ள ;
தனக்கு புகழை தேடிக் கொள்ள ;
தன் பெருமையை வளர்த்துக் கொள்ள ;

நீதியின் இலக்கணத்தைப் பற்றியும் ;
நீதி என்றால் என்ன என்பதைப் பற்றியும் ;
நீதியின் தன்மைகளைப் பற்றியும் ;
ஞானத்தின் வழிமுறைகளைப் பற்றியும் ;
ஞானத்தை அடைந்தவர்களைப் பற்றியும் ;
அன்றாடம் நாள் தவறாமல்,
நேரம் தவறாமல் , காலம் தவறாமல் ,

கதைகள் பல பேசிக்கொண்டு ;
கவிதைகள் பல இயற்றிக் கொண்டு ;
உதாரணங்கள் பல கொடுத்துக் கொண்டு ;
ஏமாந்தவர்களை எட்டி மிதித்துக் கொண்டு ;
ஆறியாமையை ஏழ்மையை தனக்கு
சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டு ;

பணம் சம்பாதித்து செல்வம் பல சேர்த்து
மாளிகைகள் பல கட்டி , வாகனங்கள் பல வாங்கி
நிலங்கள் பல பெற்று ,வீடுகள் பல கட்டி
வாழ்க்கையை நடத்துபவர்கள்
ஏமாந்தவர்களின் அறியாமையை
தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு,

சுக போக வாழ்க்கை நடத்தும்
உண்மையான சாமியாக இல்லாமல்
போலி சாமியார்  வேடம் போட்டு காலத்தை ஓட்டி
வாழ்க்கையை செல்வச் செழிப்பாக நடத்துபவர்கள்;

பாவத்திற்கான சம்பளத்தைப் பெற்று
விலக்க முடியாத தீர்க்க முடியாத
கொடுமையான துன்பங்களை
அதாவது நரக வாழ்க்கையை அனுபவிப்பார்கள்;

நரக வாழ்க்கை என்றால் ,
செய்த தீவினைக்கு ஏற்ற துன்பத்தின் பலன்
கொடுமையானதாக இருக்கும் ;
அது இப்பிறவியிலோ அல்லது அடுத்த ஜென்மத்திலோ
செய்த பாவத்திற்கான பலனை,

வார்த்தையில் சொல்ல முடியாத
அளவிற்கு மிகக் கொடிய பலனை அனுபவிப்பார்கள்
என்கிறார்  சிவவாக்கியர்.



இயேசு கிறிஸ்து - சிவவாக்கியர் :
இயேசு ,புறத்தில் போடப்படும் வேஷங்கள் இறை ஒளியை தராது .
அகத்தில் செய்யப்படும் இறை வழிபாடே இறை ஒளியை
ஏற்றி வைக்கும் .

புற தோற்றம் நரகத்தில் தள்ளி விடும் பாவத்தை
உண்டு பண்ணும் என்கிறார்.

அவ்வாறே,
சிவவாக்கியரும், புறத்தில் செய்யப்படும் வேஷங்கள்
இறைத் தன்மையைக் காட்டாது.
அவை மீள முடியாத துன்பத்தைக் கொடுக்கும் என்கிறார்.
  

        “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                           போற்றினேன் பதிவுஇருபத்துஆறு  ந்தான்முற்றே “”