June 26, 2019

பரம்பொருள்-பதிவு-31


                   பரம்பொருள்-பதிவு-31

“ இந்த உலகம் முழுவதும்
அருஉருவ நிலை ;
உருவ நிலை ;
அருவ நிலை ;
என்று மூன்று நிலைகளில்
வெளிப்பட்டுக்
கொண்டிருக்கக்கூடிய
இறைவனுடன் தொடர்பு
கொள்பவர்கள்
யாராக இருந்தாலும்
ஒவ்வொருவரும் தாங்கள்
அடையும் ஆன்மீக
நிலைக்கேற்ப வேண்டியதை
பெற்றுக் கொள்கின்றனர்  

1.அருஉருவ நிலை

வாழ்க்கைக்குத்
தேவையானவைகள்
வேண்டும் என்று
சாதாரண நிலையில்
உள்ள மக்கள் இறைவனை
அருஉருவ நிலையில்
வணங்குகின்றனர் “

“பணம், பதவி,
புகழ், அதிகாரம்
ஆகியவையும் ;

“ இருப்பதற்கு பெரிய வீடு
உடுக்க ஆடம்பர ஆடைகள்
உண்ணுவதற்கு
விலையுயர்ந்த உணவுகள்
ஆகியவையும் ;

“ அதிகப்படியான
சம்பளம் கொண்ட வேலை,
அளப்பறிய செல்வம்
கவலையே இல்லாத வாழ்க்கை
கஷ்டமே படக்கூடாத மனசு
நோயே வரக்கூடாத உடல்
ஆகியவையும் ;

“தான், தன்னுடைய
குடும்பம் தன்னுடைய
சந்ததிகள் வாழ்வதற்கு
தேவையான பாதுகாப்புகள்
ஆகியவையும் ;

வேண்டும் என்று
நினைப்பவர்கள்
தங்கள் ஆசைகளை
பூர்த்தி செய்து கொள்ள
வேண்டும் என்று
அருஉருவ நிலையில்
உள்ள இறைவனை நோக்கி
வணங்குபவர்களுக்கு
இறைவன் அருஉருவ
வடிவில் அவர்களுக்கு
தேவையானவைகளை
அவர்களுடைய – முன்வினை ;
முயற்சி ; பயிற்சி ;
ஆகியவைகளுக்கு
ஏற்ப வழங்குகிறான் “

“இவர்களுக்கு
பிறப்பு ; இறப்பு ; உண்டு “

2.உருவ நிலை

“ வாழ்க்கைக்குத்
தேவையானவைகளைத்
தவிர்த்து அருள் வேண்டி
இறைவனை
உருவ நிலையில்
வணங்குகின்றனர் “

“அருள் வேண்டி இறைவனை
உருவ நிலையில்
வணங்கும் போது
அருஉருவ நிலையில்
உள்ள இறைவனின்
அருவம் மறைந்து
உருவம் வெளிப்படுகிறது
உருவநிலையில் உள்ள
இறைவனை அருள் வேண்டி
வணங்குகின்றனர் “

“ஆன்மீகத்தின் ஆரம்பம்
உருவ நிலையில்
ஆரம்பித்து ;
ஆன்மீகத்தின்
இறுதி யாத்திரை
உருவத்திலேயே முடிந்தால் ;
அவர்களுக்கு
பிறப்பு ; இறப்பு ; உண்டு “

“ஆனால்
ஆன்மீகத்தின் ஆரம்பம்
உருவ நிலையில்
ஆரம்பித்தாலும் ;
ஆன்மீகத்தின்
இறுதி யாத்திரை
அருவத்தில் முடிந்தால் ;
அவர்களுக்கு
பிறப்பு ; இறப்பு ; கிடையாது”

“ வாழ்க்கைக்குத்
தேவையானவைகள்
வேண்டும் என்றால்
இறைவனின் அருள்
கிடைக்காது ;
இறைவனின் அருள்
வேண்டும் என்றால்
வாழ்க்கைக்குத்
தேவையானவைகள்
கிடைக்காது ;
இரண்டில் ஏதேனும்
ஒன்று தான் கிடைக்கும் ;
இரண்டுமே கிடைக்காது ;”

3.அருவ நிலை

“முக்தி வேண்டி
இறைவனை வணங்குபவர்கள்
அருவநிலையில்
இறைவனை வணங்குகின்றனர்
அவ்வாறு வணங்கும்
போது இறைவனின்
உருவநிலை மறைந்து
அருவநிலை வெளிப்படுகிறது “

“ஆன்மீகத்தின் ஆரம்பம்
அருவ நிலையில் ஆரம்பித்து ;
ஆன்மீகத்தின்
இறுதி யாத்திரை
அருவத்தில் முடிந்தால் ;
அவர்களுக்கு
பிறப்பு ; இறப்பு ; கிடையாது “

“வாழ்க்கைக்குத்
தேவையானவைகள்
வேண்டும் என்றால்
முக்தி கிடைக்காது ;
முக்தி வேண்டும்
என்றால் வாழ்க்கைக்குத்
தேவையானவைகள்
கிடைக்காது;
இரண்டில் ஏதேனும்
ஒன்று தான் கிடைக்கும் ;
இரண்டுமே கிடைக்காது ;

“அதாவது வாழ்க்கைக்குத்
தேவையானவைகளை
தன்னுடன் வைத்துக்
கொண்டிருப்பவர்கள் ;
கர்மாவை சுமந்து
கொண்டிருப்பவர்கள் ;
கர்மாவை சுமந்து
கொண்டிருப்பவர்களுக்கு
இறைவனின் அருளும்
முக்தியும் எப்படி
கிடைக்கும் என்பதை
சற்று சிந்தித்துப்
பார்க்க வேண்டும் “

“ இந்த உலகத்தில்
இறைவன் தன்னை
அருவ நிலை ;
உருவ நிலை ;
அருஉருவ நிலையில்;
வெளிப்படுத்தினாலும்
இறைவன் அன்றும் ;
இன்றும் ;என்றும் ;இருப்பது
ஒரே நிலையில் தான் ;
இந்த ரகசியத்தை
உணர்த்துவது தான்
சிவலிங்கம் -அதன்
ரகசியம் என்ன…………………….?

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 26-06-2019
//////////////////////////////////////////////////////////