June 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-20


               ஜபம்-பதிவு-512
         (அறிய வேண்டியவை-20)

“நம்முடைய
முன்னோர்களையும்
நம்முடைய
முன்னோர்கள்
சொன்னதையும்
நாம் மறந்து விட்டதால்
நான் சொல்வது
புதியது போல்
இருக்கிறது
நீயும் அப்படித்
தான் நினைக்கிறாய் “

“நான் சொல்வது
ஒன்றும்
புதியது அல்ல
ஏற்கனவே
நம்முடைய
முன்னோர்கள்
சொல்லி விட்டு
சென்றதைத் தான்
நான் உனக்கு
சொல்லிக்
கொண்டிருக்கிறேன் “

“போரில்
பயன்படுத்தப்படும்
மிக முக்கியமான
வியூகம்
சக்கர வியூகம்
இந்த வியூகத்தை யார்
பயன்படுத்துகிறாரோ
அவரைப் பொறுத்து
சக்கர வியூகம்
நல்ல வியூகமா
அல்லது
கெட்ட வியூகமா
என்பது
தீர்மானிக்கப்படுகிறது”

உத்தரை :
“சக்கர வியூகம்
உங்களுக்கு
தெரியுமா ?”

அபிமன்யு :
“தெரியும்
ஆனால்
முழுமையாகத்
தெரியாது “

உத்தரை :
“அப்படி என்றால்?”

அபிமன்யு :
“சக்கர வியூகத்தை
உடைத்துக் கொண்டு
உள்ளே செல்வது
எப்படி என்பது
மட்டும் தான்
எனக்குத் தெரியும் “

“சக்கர வியூகத்தை
உடைத்துக் கொண்டு
உள்ளே சென்ற
பிறகு எப்படி வெளியே
வருவது என்பது
எனக்குத் தெரியாது”

உத்தரை :
“ஏன் தெரியாது?”

அபிமன்யு :
“அது பழைய
கதை மட்டுமல்ல
தெரிந்து கொள்ள
வேண்டிய
கதையும் கூட”

உத்தரை :
“என்ன கதை”

அபிமன்யு :
“நான் என் தாய்
சுபத்திரையின்
வயிற்றில்
இருக்கும் போது
என்னுடைய தந்தை
சக்கர வியூகத்தைப்
பற்றியும்; - அதன்
தன்மைகளையும்
பற்றியும் ;
சக்கர வியூகத்தை
எப்படி உருவாக்குவது
என்பதைப் பற்றியும் ;
சக்கர வியூகத்தை
உடைத்துக் கொண்டு
உள்ளே செல்வது
எப்படி என்பதைப்
பற்றியும் ; - என்
தாயிடம்
விளக்கமாகச்
சொல்லிக்
கொண்டிருந்தார் ;
தாயின் வயிற்றில்
இருந்த நான்
அவைகள்
அனைத்தையும்
நன்றாகக் கேட்டுக்
கொண்டிருந்தேன் “

“சக்கர வியூகத்தை
உடைத்துக் கொண்டு
உள்ளே சென்றபின்
சக்கர வியூகத்தை
விட்டு வெளியே
வருவது எப்படி
என்பதைப் பற்றி
என்னுடைய தந்தை
விளக்கமாகச்
சொல்லிக்
கொண்டிருந்த போது
என்னுடைய தாயார்
உறங்கி விட்டார்.”

“அதனால் நானும்
உறங்க வேண்டிய
நிர்ப்பந்தம்
உருவாகி விட்டது.”

“சக்கர வியூகத்தை
உடைத்துக் கொண்டு
உள்ளே செல்வது
எப்படி என்பதை
மட்டும் என்னால்
கற்றுக் கொள்ள
முடிந்தது ;
சக்கர வியூகத்தை
விட்டு வெளியே
வருவது எப்படி
என்பதைப் பற்றி
என்னால்
கற்றுக் கொள்ள
முடியவில்லை”

“சக்கர வியூகத்தை
விட்டு வெளியே
வருவது எப்படி
என்பதை நான்
அறிந்து கொள்ள
வேண்டும் என்ற
ஆவலில் - என்
தாய் மாமன்
கிருஷ்ணனிடம்
கேட்டேன் “

“உன் தந்தை
தானே ஆரம்பித்து
வைத்தார்
அவரையே முடித்து
வைக்கச் சொல் ;
அவரிடமே சென்று
கற்றுக் கொள் ;
என்று சொல்லி
விட்டு என்னைப்
பார்த்து சிரித்து
விட்டு சென்று
விட்டார் - அவர்
சிரித்த அந்த
சிரிப்பிற்கு
பொருள் என்ன
என்று யோசித்துப்
பார்க்கிறேன்
இதுவரை என்னால்
தெரிந்து கொள்ள
முடியவில்லை “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

----------- 19-06-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment