July 19, 2020

அறிய வேண்டியவை-பதிவு-105


              ஜபம்-பதிவு-597
          (அறிய வேண்டியவை-105)

“அத்தகைய
வாசுதேவ கிருஷ்ணனை
பாண்டவர்களை காத்துக்
கொண்டிருக்கும்
வாசுதேவ கிருஷ்ணனை
கௌரவர்களுக்கு
எதிராக சூழ்ச்சி
வேலைகளைச்
செய்து கொண்டிருக்கும்
வாசுதேவ கிருஷ்ணனை
நடுவராக்கினால்
எப்படி நடுநிலை
தவறாமல் தீர்ப்பு
சொல்லுவார் என்று
எதிர்பார்க்க முடியும்”

“கிருஷ்ணன் சொல்வது
அத்தனையும் உண்மை
அத்தனையும்
சத்தியவாக்கு என்று
கிருஷ்ணனுடைய
வார்த்தைகளுக்கு
தலையாட்டும் கூட்டம்
வேண்டுமானாலும்
கிருஷ்ணனை நடுநிலை
தவறாதவர் என்று
ஏற்றுக் கொள்ளலாம்
ஆனால் கிருஷ்ணனை
நான் நடுநிலையானவர்
என்று என்னால் ஏற்றுக்
கொள்ள முடியாது - ஏன்
கிருஷ்ணனைப் பற்றி
உண்மையாக
உணர்ந்தவர்கள்
யாரும் கிருஷ்ணனை
நடுநிலையானவர்
என்ற கருத்தை
ஏற்றுக் கொள்ளாது “

“ஆகவே கிருஷ்ணனை
நடுவராக்க
ஏற்றுக் கொள்ள
நான் விரும்பவில்லை”

“இருவருக்கும்
பொதுவாக இருக்கக்
கூடியவரை பொதுவாக
இருந்து கொண்டு
சிந்திக்கக் கூடியவரை
நடுநிலை தவறாமல்
செயல்படக் கூடியவரை
ஒரு தலைபட்சமாக
இருந்து
செயல்படாதவரை
நடுவராக தேர்ந்தெடுங்கள்”

(துரியோதனனுக்கும்
பீமனுக்கும்
கதாயுதச் சண்டை
நடப்பது என்பது
முடிவாகி விட்டது
நடுவர் யார் என்று
தீர்மானிக்காமல்
இருக்கும்
சூழ்நிலையில்
பனை மரத்தைக்
கொடியாகக்
கொண்டவரும்
கலப்பையை ஆயுதமாகக்
கொண்டவருமாகிய
பலராமர் அங்கு வந்தார்
பலராமரை அனைவரும்
வரவேற்றனர்
பலராமரை கிருஷ்ணர்
தழுவிக் கொண்டார்)

கிருஷ்ணன் :
“வாருங்கள் அண்ணா
உங்களை
வரவேற்கிறேன்
சரியான சமயத்தில்
தான் இங்கு
வந்திருக்கிறீர்கள்
திறமை வாய்ந்த
உங்களுடைய இரு
சீடர்களுக்கிடையே
கதாயுதச் சண்டை
நடக்க இருக்கிறது
வாருங்கள் அண்ணா
நடக்கவிருக்கும்
கதாயுத சண்டையை
காண வாருங்கள்”

பலராமர்
“தீர்த்தயாத்திரைக்காக
புறப்பட்ட எனக்கு
இன்றோடு 42
நாள்கள் ஆகிறது
புஷ்யத்தில் புறப்பட்டேன்
ச்ரவணத்தில்
திரும்பி வந்தேன்
நாரத முனிவர்
குருஷேத்திரப் போரின்
விவரத்தை சொன்ன
காரணத்தினால் நான்
இங்கு வந்திருக்கிறேன்
என்னுடைய
சீடர்களுடைய கதாயுத
சண்டையைப்
பார்ப்பதற்கு
ஆவலாக இருக்கிறேன்”

கிருஷ்ணன் :
“அண்ணா தாங்கள் இந்த
கதாயுதச் சண்டைக்கு
பார்வையாளராக
மட்டும் இருக்கப்
போவதில்லை”

பலராமர் :
“பிறகு”

கிருஷ்ணன் :
“கதாயுதச் சண்டையை
நீங்கள் தான் தலைமை
ஏற்று நடத்த
வேண்டும்
என்றும்
நீங்கள் தான் இந்த
கதாயுதச் சண்டைக்கு
நடுவராக இருந்து
நீங்கள் தான் தீர்ப்பு
சொல்ல வேண்டும்
என்றும்
இங்குள்ள அனைவரும்
விரும்புகின்றனர்”

“துரியோதனா உனக்கு
இதில் சம்மதம் தானே?”

துரியோதனன் :
“நடுநிலை
கொண்டவர்கள்;
நடுநிலை
தவறாதவர்கள்;
உண்மையாக நடந்து
கொள்பவர்கள் ;
உண்மையை
நேசிப்பவர்கள்
உண்மையைக்
கடைபிடிப்பவர்கள்
தர்மத்தை
பின்பற்றுபவர்கள்
தர்மத்தின்
வழி நடப்பவர்கள்
நடுவராக இருந்தால்
மட்டுமே தர்மம்
அழியாது என்று
ஆசைப்பட்டேன்”

“இத்தகைய
குணநலன்கள்
அனைத்தையும் கொண்ட
என்னுடைய குருநாதர்
பலாராமர் அவர்கள்
நடுவராக இருப்பதில்
எனக்கு எந்தவித
ஆட்சேபணையும்
இல்லை
கதாயுதச் சண்டைக்கு
தகுதி வாய்ந்தவர்
அவர் மட்டுமே “

“நடுவராக இருக்கட்டும்”


----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 19-07-2020
/////////////////////////////////

No comments:

Post a Comment