ஜபம்-பதிவு-1048
அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-26
அமைச்சர் : வடநாட்டில் வீரம் இல்லாதவர்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்று விட்டு சிறந்த வில்லாளி என்றால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
பாண்டியர்களுடன் சண்டையிட்டு வென்று காட்டு
அப்போது ஒத்துக் கொள்கிறோம் நீ சிறந்தவில்லாளி என்று
அர்ஜுனன் : நான் தயார்
அமைச்சர் : பாண்டியர்கள் தயார் இல்லை?
அர்ஜுனன் : ஏன் தயார் இல்லை?
அமைச்சர் : நீ குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளி. முதலில் நீ குற்றவமற்றவன் என்பதை நிரூபி அப்புறம் சண்டையிடலாம். காலம் வரும் போது சண்டையிடலாம். காலம் உனக்காகக் காத்துக் கொண்டு இருக்கிறது. நீ பாண்டியர்களுடன் சண்டையிடுவதைப் பார்க்க வேண்டும் என்று, நீ பாண்டியர்களுடன் சண்டையிட்டால் அது தான் நீ இந்த மண்ணில் வாழும் கடைசி நாளாக இருக்கும்.
அர்ஜுனன் : என்னை அழைத்து வந்து விட்டு, விசாரணை செய்யாமல் தேவையில்லாததை பேசிக் கொண்டிருக்கிறீர்கள்
நான் எதற்காக பாண்டிய நாட்டிற்கு வந்திருக்கிறேன் என்று தெரியுமா?
அமைச்சர் : தீர்த்த யாத்திரை வந்து இருக்கிறீர்கள்!
அர்ஜுனன் : அது தவறு. நான் எதற்காக வந்திருக்கிறேன் என்பது எனக்கும், என்னுடைய அண்ணனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியாத விஷயம். உலகத்திலேயே சிறந்த ஒற்றர்களைக் கொண்ட பாண்டியர்களால் கூட கண்டுபிடிக்க முடியாது.
அமைச்சர் : ஏன் முடியாது. பாண்டியர்களால் முடியாது என்பது இந்த உலகத்தில் எதுவும் இல்லை
அர்ஜுனன் : நான் எதற்காக பாண்டிய நாட்டிற்காக வந்திருக்கிறேன் என்பதை சொல்லி விட்டால், நான் ஒத்துக் கொள்கிறேன் பாண்டிய நாட்டின் ஒற்றர்கள் தான் உலகத்திலேயே திறமைசாலி ஒற்றர்கள் என்பதை .ஒத்துக் கொள்கிறேன். நான் ஒத்துக் கொள்கிறேன்.
அமைச்சர் : பஞ்சபாண்டவர்கள் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து இருக்கின்றனர். அவள் பெயர் பாஞ்சாலி. இவர்களுக்குள் சண்டை வரக்கூடாது என்ற காரணத்தினால் பஞ்ச பாண்டவர்களும், பாஞ்சாலியும் தங்களுக்குள் ஒரு விதியை உருவாக்கி வைத்து இருக்கின்றனர்.
பஞ்சபாண்டவர்களில் ஒவ்வொருவரும் சுழற்சி முறையில் குடும்பம் நடத்த வேண்டும். அவ்வாறு குடும்பம் நடத்துபவருக்கு மட்டுமே பாஞ்சாலி மனைவியாக இருப்பாள். பாஞ்சாலியும், பாஞ்சாலியுடன் குடும்பம் நடத்துபவரும் தனித்து ஒரு அறையில் தனிமையில் இருக்கும் போது யாராவது அந்த அறையில் மீறி நுழைந்தால் அவர் 12 மாதங்கள் வனவாசம் செல்ல வேண்டும்.
பசுவைக் களவாடிச் சென்ற கொள்ளையர்களிடமிருந்து பசுக்களை மீட்டுக் கொடுப்பதற்காக அர்ஜுனன் வில்லை எடுக்க தர்மனும், பாஞ்சாலியும் தனிமையில் இருந்த அறைக்குள் நுழைந்து வில்லை எடுக்கும் போது அர்ஜுனனை தர்மன் மட்டுமே பார்த்தான். பாண்டவர்களுக்கும், பாஞ்சாலிக்கும் இடையே போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை மீறிய காரணத்தினால் அர்ஜுனன் காடு செல்ல செல்ல வேண்டும். அதனால் அவன் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு வந்திருக்கிறான். பாண்டிய நாட்டின் காட்டிற்குள் வந்திருக்கிறான். இளவரசியை துரத்திச் சென்றிருக்கிறான்.
அர்ஜுனன் : அற்புதம். எதிரியாக இருந்தாலும் திறமைசாலியாக இருந்தால் ஒத்துக் கொள்ள வேண்டியது தான். எனக்கும், என்னுடைய அண்ணனுக்கும் மட்டுமே தெரிந்த விஷயத்தை சொல்லி விட்டீர்கள். நான் ஒத்துக் கொள்கிறேன். பாண்டிய நாட்டின் ஒற்றர்கள் உலகத்திலேயே மிகச் சிறந்த ஒற்றர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் இளவரசியை நான் துரத்திச் செல்லவில்லை. அவருடைய விருப்பத்தின் பேரிலேயே சென்றேன். என்னை மட்டுமே விசாரித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இளவரசியை கூப்பிடுங்கள். நான் குற்றவாளி இல்லை என்பது தெரியும்.
அமைச்சர் : அதை நீ சொல்லக் கூடாது. நீ குற்றவாளி இல்லை என்பதை நீ சொல்லக்கூடாது. இளவரசி நேரில் வந்து நடந்த உண்மையை சொன்ன பிறகு தான் நீ குற்றவாளியா? இல்லையா? என்பது தெரிய வரும். இளவரசியை அழையுங்கள்.
(இளவரசி வந்து அவையின் முன்பு நிற்கிறார். அமைச்சர் பேசுகிறார்.)
-----ஜபம் இன்னும் வரும்.
----06-04-2025. ----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////////////
No comments:
Post a Comment