April 03, 2020

பரம்பொருள்-பதிவு-173


               ஜபம்-பதிவு-421
             (பரம்பொருள்-173)

சூரிய பகவான் :
“நடக்கும்
விஷயங்களைப்
பார்த்தீர்களா ? “

சந்திர பகவான் :
“ஆமாம்!  பார்த்துக்
கொண்டு தான்
இருக்கிறேன்
மக்கள் அனைவரும்
ஏன் இவ்வாறு செய்து
கொண்டிருக்கிறார்கள்
என்று தெரியவில்லை “

சூரிய பகவான் :
“தாங்கள் செய்து
கொண்டிருக்கும்
செயலை
சரி என்று
நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள் “

சந்திர பகவான் :
“சரி என்று
நினைப்பதால் தானே
தவறு செய்து
கொண்டிருக்கிறார்கள் “

சூரிய பகவான் :
“எது சரி
எது தவறு 
என்று புரிந்து
கொள்ள முடியாத
நிலையிலா
மக்கள்
இருக்கிறார்கள் “

சந்திர பகவான் :
“மக்களை
குறை சொல்லி
ஒரு பயனும்
இல்லை - இத்தனை
தவறுகளுக்கும்
காரணம்
பரமாத்மா
கிருஷ்ணன் தான் “

சூரிய பகவான் :
“ஆமாம் !
பரமாத்மா
கிருஷ்ணன் தான்
இத்தனை
தவறுகளுக்கும்
காரணம் - அவர்
ஏன் இவ்வாறு செய்து
கொண்டிருக்கிறார்
என்று தெரியவில்லை “

“தவறான செயலை
செய்து கொண்டு
மக்களையும்
தவறான செயலை
செய்வதற்கு வழி
நடத்திக்
கொண்டிருக்கிறார் “

சந்திர பகவான் :
“பரமாத்மா
கிருஷ்ணன்
எதற்காக
இத்தகைய தவறான
ஒரு செயலை செய்து
கொண்டிருக்கிறார்
என்று எனக்குத்
தெரியவில்லை  ;
ஆனால் ஒன்று
மட்டும் எனக்கு
நன்றாகத் தெரிகிறது “

“பரமாத்மா
கிருஷ்ணன்
எந்த செயலைச்
செய்தாலும் சரியான
செயலாகத் தான்
இருக்கும் என்ற
நினைப்பில் தான்
மக்கள் அனைவரும்
பரமாத்மா
கிருஷ்ணனைப்
பின்பற்றி தவறை செய்து
கொண்டிருக்கிறார்கள் “

சூரிய பகவான் :
“தொடர்ந்து தவறுகள்
நடைபெறாமல்
தடுக்க வேண்டும் “

சந்திர பகவான் ;
“வழி ஏதேனும்
இருக்கிறதா
தடுப்பதற்கு “

சூரிய பகவான் :
“ஒரே ஒரு வழி
தான் இருக்கிறது “

சந்திர பகவான் :
“என்ன வழி ? “

சூரிய பகவான் :
“நாம் இருவரும்
பரமாத்மா
கிருஷ்ணனை
நேரில் சந்தித்து
அமாவாசை என்பது
நாளை தானே !
அமாவாசை
என்பது
நாளை தானே
வரப்போகிறது “

“அப்படி
இருக்கும் போது
எதற்காக
சதுர்த்தசி திதியான
இன்று
அமாவாசையன்று
செய்யக் கூடிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
ஏன் செய்கிறீர்கள்  
என்று கேட்போம் “

சந்திர பகவான் :
“நீங்கள் சொல்வது
சரிதான் ;
உங்களுடைய
கருத்தை நானும்
ஏற்றுக் கொள்கிறேன்  

“நாம் இருவரும்
இப்போதே
பூலோகம் செல்வோம் ;
பரமாத்மா
கிருஷ்ணனை
நேரில் சந்திப்போம் ;
அவர் செய்து
கொண்டிருக்கும்
செயலுக்குரிய
விளக்கத்தைக்
கேட்போம் ; “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment