April 03, 2020

பரம்பொருள்-பதிவு-175


              ஜபம்-பதிவு-423
            (பரம்பொருள்-175)

சந்திர பகவான்  :
“சந்திரனாகிய நானும்
சூரியனாகிய இவரும்
நாளை தான்
சந்திக்கிறோம்
அப்படி என்றால்
நாளை தானே
அமாவாசை “

கிருஷ்ணன் :
“நீங்கள் சொல்வது
எனக்கு புரியவில்லை
இன்னும் கொஞ்சம்
விளக்கமாக
சொல்லுங்கள் “

சந்திர பகவான் :
“சந்திரனாகிய நானும்
சூரியனாகிய இவரும்
நாளை தானே
நேருக்கு நேராக
சந்திக்கும் நாள் ;
அப்போது தானே
பூலோகத்தில்
அமாவாசை
ஏற்படுகிறது ;
அப்போது தானே
என்னுடைய நிழல்
பூலோகத்தில்
படாமல் இருக்கக்
கூடிய காலம் ; “

“அதனால் தான்
சொல்கிறேன்
நாளை தான்
அமாவாசை என்று “

கிருஷ்ணன்  :
“இல்லை இன்று
தான் அமாவாசை “

சந்திர பகவான்  :
“ஏன் இவ்வாறு
சொன்னதையே
திரும்ப
திரும்பச்
சொல்கிறீர்கள் “

கிருஷ்ணன்  :
“சூரிய பகவானும்
சந்திர பகவானும்
நேருக்கு நேராக
சந்திக்கும் போது
தானே அமாவாசை
ஏற்படுகிறது
என்கிறீர்கள் “

சந்திர பகவான்  :
“ஆமாம் !
அதைத் தான்
அமாவாசை
என்கிறோம் “

கிருஷ்ணன்  :
“நான் அதை
மறுக்கவே
இல்லையே “

“சந்திர பகவானாகிய
நீங்களும்
சூரிய பகவானாகிய
அவரும்
ஒருவொருக்கொருவர்
நேருக்கு நேராக
இப்போது
சந்தித்துக்
கொண்டு தானே
இருக்கிறீர்கள் “

(என்று பேசிக்
கொண்டே
சூரிய பகவானையும்
சந்திர பகவானையும்
பார்த்தார்
கிருஷ்ணன்  ;

சூரிய பகவானும்
சந்திர பகவானும்
நேருக்கு நேராக
நின்று கொண்டு
ஒருவரையொருவர்
பார்த்துக்
கொண்டிருந்தார்கள் ;
கிருஷ்ணன்
தன்னுடைய
பேச்சைத் தொடர்ந்தார்)

“அப்படி என்றால்
இன்று தானே
அமாவாசை “

“அதனால் தான்
சொன்னேன்
இன்று தான்
அமாவாசை என்று “

“அதனால்
தான் நான்
அமாவாசையன்று
அமாவாசைக்குரிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
செய்து
கொண்டிருக்கிறேன் “

“நான் எந்த
தவறான
செயலையும்
செய்யவில்லை “

“சரியான
செயலைத்
தான் செய்து
கொண்டிருக்கிறேன் “

(என்று கிருஷ்ணன்
சூரிய பகவானையும்
சந்திர பகவானையும்
பார்த்தார்)

“நீங்கள் இருவரும்
ஒருவரையொருவர்
இப்படி பார்த்துக்
கொண்டிருப்பதால்
ஒரு பயனும்
இல்லை  ;
இன்றைய
சதுர்த்தசி திதி தான்
அமாவாசையாக
மாறி விட்டதே !

“இன்று தான்
அமாவாசை
உண்டாகி விட்டதே “

“இன்று
நடைபெற
துவங்கி விட்ட
அமாவாசையை
யாராலும்
மாற்ற முடியாதே “

(சூரிய பகவானும்
சந்திர பகவானும்
ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டு
என்ன செய்வது
என்று  தெரியாமல்
அங்கிருந்து
சென்று விட்டனர்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-04-2020
//////////////////////////////////////////

No comments:

Post a Comment