February 18, 2022

ஜபம்-பதிவு-682 (சாவேயில்லாத சிகண்டி-16)

 

ஜபம்-பதிவு-682

(சாவேயில்லாத

சிகண்டி-16)

 

பீமதேவன் :

அருவிகளின்

பாய்ச்சலினாலும்

நதிகளின்

ஓட்டத்தினாலும்

ஆறுகளின்

விரைவினாலும்

இயற்கை எழில்

கொஞ்சி

விளையாடியதால்

செழித்து விளங்கும்

காசி நாட்டின்

மன்னனாகிய நானும்

காசி நாட்டின்

மக்களும்

 

வந்தாரை வாழ

வைத்திருக்கிறோம்

வாழ விடாதவரை

வேரறுத்திருக்கிறோம்

 

அன்பு காட்டி

வருபவர்களுக்கு

ஆதரவு

அளித்திருக்கிறோம்

ஆணவத்தைக் காட்டி

வருபவர்களின்

ஆணவத்தை

அடக்கியிருக்கிறோம்

 

வாழ்விழந்தவர்களுக்கு

வாழ்வளித்திருக்கிறோம்

வாழ வழி

இல்லாதவர்களுக்கு

வாழ வழி

காட்டியிருக்கிறோம்

 

ஏழைகளின் துயரை

துடைத்திருக்கிறோம்

ஏற்றமிகு வாழ்வை

அவர்களுக்கு

அளித்திருக்கிறோம்

 

இல்லாமை இல்லை

என்ற நிலையை

உருவாக்கியிருக்கிறோம்

 

இதனால் இல்லாதவர்கள்

காசி நாட்டில்

இல்லை என்ற

சாதனையைப்

படைத்திருக்கிறோம்

 

இத்தகைய

சிறப்பு மிக்க

காசி நாட்டின்

சார்பாகவும்

காசி நாட்டு

மக்கள் சார்பாகவும்

காசி நாட்டு

மன்னன்

என்ற முறையில்

என்னுடைய சார்பாகவும்

என்னுடைய மூன்று

மகள்களான

அம்பை

அம்பிகை

அம்பாலிகை

சுயம்வரத்திற்கு

வருகை புரிந்திருக்கும்

அனைத்து தேசத்து

அரசர்களையும்

அரசப்

பிரதிநிதிகளையும்

காசி நாட்டு

மக்களையும்

சுயம்வரத்திற்கு

வருகை புரிந்திருக்கும்

அனைவரையும்

வருக வருக

என வணங்கி

வரவேற்கிறேன்

 

பெண்களை

தெய்வமாக

வணங்கும் நாடு

எங்கள் காசி நாடு

எங்கள் நாட்டில்

ஆண் பெண் என்ற

பேதம் கிடையாது

ஆண் உயர்ந்தவர்

பெண் தாழ்ந்தவர்

என்ற வேறுபாடு

எல்லாம் கிடையாது

காசி நாட்டில்

அனைவரும் சமம்

 

தங்கள் வாழ்க்கைத்

துணையை தானே

தேர்ந்தெடுக்கும்

உரிமையை

ஆண்கள் எப்படி

பெற்றிருக்கிறார்களோ

அப்படியே

பெண்களும்

தங்கள் வாழ்க்கைத்

துணையைத் தானே

தேர்ந்தெடுக்கும்

உரிமையைப்

பெற்றிருக்கின்றனர்

 

பணம் படைத்தவர்களும்

பதவியில்

இருப்பவர்களும்

அதிகாரத்தில்

இருப்பவர்களும்

தங்கள் வாழ்க்கைத்

துணையைத் தானே

தேர்ந்தெடுப்பதைப்

பார்க்கும் போது

 

சாதாரண நிலையில்

உள்ள பெண்களும்

எதற்கும் பயப்படாமல்

யாருக்கும் அஞ்சாமல்

தன்னுடைய

வாழ்க்கைத்

துணையைத் தானே

தேர்ந்தெடுக்கக்கூடிய

வலிமையை

அவர்களுடைய மனதில்

உண்டாக்க வேண்டும்

என்ற

காரணத்திற்காகத் தான்

என்னுடைய மூன்று

மகள்களின்

சுயம்வரத்தை

காசி நாட்டு மக்கள்

அனைவரும் காணும்

வகையில்

அரண்மனைக்கு அருகில்

இருக்கும்

இந்த மைதானத்தில்

உருவாக்கப்பட்ட

சுயம்வர மண்டபத்தில்

சுயம்வரத்தை

நடத்திக்

கொண்டிருக்கிறேன்

 

இந்த உலகத்தில்

விவாஹவிதி

எட்டு வகைகளாகப்

பிரிக்கப்பட்டிருக்கிறது

 

உத்தம

குணமுள்ளவர்களைக்

கன்யையின் பிதா

உபசரித்து அழைத்துத்

தன்னால் கூடிய

த்ரவ்யத்தைக்

கொடுத்துக்

கன்யையை

அலங்காரத்துடன்

அவனுக்குப்

பார்யையாகக் கொடுப்பது

ப்ராஹ்ம

விவாஹமாகும்

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////

No comments:

Post a Comment