February 18, 2022

ஜபம்-பதிவு-683 (சாவேயில்லாத சிகண்டி-17)

 

ஜபம்-பதிவு-683

(சாவேயில்லாத

சிகண்டி-17)

 

இரண்டு பசுக்களைச்

சுல்கமாய் வாங்கிக்

கொண்டு

கன்யையைக் கொடுப்பது

ஆர்ஷ

விவாஹமாகும்

 

குறிப்பிட்ட த்ரவியத்தைப்

பெற்றுக் கொண்டு

கன்யையைக் கொடுப்பது

ஆஸுர

விவாஹமாகும்

 

கன்யையும் வரனும்

ஒருவர்க்கொருவர்

ஆசை கொண்டு

மனஸ் ஒத்து

விவாஹஞ் செய்வது

காந்தர்வ

விவாஹமாகும்

.

கன்யை தூங்கிக்

கொண்டிருக்கும்

பொழுதும்

மயங்கியிருக்கும்

பொழுதும்

அவளை அபஹரித்துக்

கொண்டு போவது

பைசாச

விவாஹமாகும்

 

தாய் தகப்பனுடைய

அனுமதியைப் பெற்றுக்

கன்யையைத் தானே

விவாஹஞ் செய்து

கொள்வது

ப்ராஜாபத்ய

விவாஹமாகும்

 

வேதத்தில்

சொல்லியிருக்கும்

யக்ஞவிதிகளின்படி

கன்யையை

விவாஹஞ் செய்து

கொள்வது

தைவ

விவாஹமாகும்

 

கன்யையின்

பந்துக்களையும்

காவலாளிகளையும்

யுத்தத்தில் சிதறடித்து

அவளைப்

பலாத்காரமாய்க்

கொண்டு போவது

ராக்ஷஸ

விவாஹமாகும்

 

இந்த எட்டு முறைகளில்

ஷத்திரியர்களுக்கு உகந்த

பிரஜாபத்யம் எனப்படும்

 

தாய்

தகப்பனுடைய

அனுமதியைப் பெற்றுக்

கன்யையைத் தானே

விவாஹஞ் செய்து

கொள்ளும்

சுயம்வரம்

நடக்கப் போகிறது

 

வைகாசி

பௌர்ணமி நாளில்

இந்த சுயம்வரம்

நடக்கப் போகிறது

 

இளவரசிகள்

ஒவ்வொருவரும்

தங்கள் கைகளிலே

மண மலைகளை

ஏந்திக் கொண்டு

அவருக்கு யாரைப்

பிடித்திருக்கிறதோ

அவருக்கு

யார் தனக்கு

கணவராக வர

வேண்டும் என்று

நினைக்கிறாரோ

அவருக்கு

 

யார் தன்னை

கைவிடாமல்

கடைசிவரை

காப்பாற்றுவார் என்று

நினைக்கிறாரோ

அவருக்கு

மணமாலை

அணிவிப்பார்.

 

ஆன்றோரின் நெறிப்படி

முன்னோரின்

வார்த்தைகளின்படி

வரையறுக்கப்பட்ட

விதிமுறைகளின்படி

இளவரசி

எடுக்கும் முடிவே

இறுதி முடிவாகும்

அதுவே

அரசனான என்னுடைய

முடிவும் ஆகும்

இதில் எந்தவித

மாற்றுக் கருத்துக்கும்

இடமில்லை

 

என்னுடைய

அழைப்பை ஏற்று

பாரத நாட்டின்

அத்தனை ஷத்திரிய

குலங்களிலிருந்தும்

வீரம் நிறைந்த

மன்னர்கள்

அனைவரும்

வந்திருக்கிறார்கள்

அவர்கள்

அனைவரையும்

வரவேற்கிறேன்

 

சுயம்வரத்தைத்

தொடங்குவதற்கு

உத்தரவிடுகிறேன்

 

(பீமதேவன்

உத்தரவிட்டதும்

முரசுகள் ஒலிக்கத்

தொடங்கின

மணிகள் முழங்கத்

தொடங்கின

கணியர் பேசத்

தொடங்கினார்)

 

கணியர் :

சுயம்வரத்தில்

கலந்து கொள்வதற்காக

வந்திருக்கும்

மாமன்னர்களே

 

காசி நாட்டின்

மூன்று இளவரசிகளை

உங்களுக்கு அறிமுகம்

செய்து வைக்கிறேன்

 

காசி நாட்டு மன்னர்

பீமதேவன்

அவர்களின் மூத்த மகள்

அம்பை

 

அம்பை

ஆழ்ந்த அறிவைப்

பெற்றவர்

கருணை இதயம்

கொண்டவர்

இரக்கம் காட்டுவதில்

உயர்ந்தவர்

உதவி செய்வதில்

நல்லவர்

வாதம் செய்வதில்

வல்லவர்

 

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////

 

No comments:

Post a Comment