February 18, 2022

ஜபம்-பதிவு-684 (சாவேயில்லாத சிகண்டி-18)

 ஜபம்-பதிவு-684

(சாவேயில்லாத

சிகண்டி-18)

 

வில் அம்பு

வாள் மட்டுமல்ல

பல்வேறு விதமான

போர்க்கருவிகளையும்

கையாளத் தெரிந்தவர்

 

குதிரை

யானை

ஆகியவற்றின்

மீது ஏறி

சவாரி மட்டுமல்ல

போர் செய்யும்

கலையையும் அறிந்தவர்

 

புராணங்கள்

இலக்கியங்கள்

சாஸ்திரங்கள்

தத்துவங்கள்

காவியங்கள்

ஆகியவற்றைக்

கற்றுக்

கல்வியில்

உயர்ந்தவர்

 

அழகு கொஞ்சும்

அழகு ராணியாகத்

திகழ்பவர்

வீரம் விளையாடும்

வெற்றி நாயகியாக

விளங்குபவர்

 

யாருக்கும் அஞ்சாத

நெஞ்சத்தை உடையவர்

எதற்கும் கலங்காத

உள்ளத்தைக் கொண்டவர்

 

அதுமட்டுமல்ல

இனி வருங்காலங்களில்

 

காலத்தை வென்று

காவியம் படைக்கப்

போகிறவர்

வரலாறு காணாத

சாதனையாளராகத்

திகழப் போகிறவர்

சாதனைகளை

சரித்திரத்தில் எழுதப்

போகிறவர்

 

எத்தனை ஜென்மம்

எடுத்தாலும் தன்னுடைய

கொள்கையை

நிலைநிறுத்துவதற்காக

தன்னையே

அர்ப்பணிக்கப் போகிறவர்

 

எடுக்கும் சபதங்களை

எத்தனை எதிர்ப்புகள்

வந்தாலும்

எதிர்த்து நின்று வெற்றி

பெறக்கூடியவர்

 

உண்மையின் உருவமாக

வாழப் போகிறவர்

 

வீரர்களையே மண்டியிட

வைக்கப் போகிறவர்

 

ஞானிகளே மிரளும்

ஆன்மீகத்தின்

உயர்நிலைகளை

அடையப் போகிறவர்

 

இளவரசி அம்பை

அவர்கள்

வருகிறார்

வருகிறார்

வருகிறார்

 

(இரண்டு

கைகளினாலும்

ஒரு

மணமாலையைப்

பிடித்துக் கொண்டு

இளவரசி அம்பா

சுயம்வர

மண்டபத்திற்குள்

நுழைந்து

அனைவரையும்

இருகரம் கூப்பி

வணங்கி விட்டு

ஒரு ஓரமாக போய்

நின்று கொண்டார்.)

 

கணியர் :

காசி நாட்டு

மன்னரின்

இரண்டாவது மகள்

அம்பிகை

 

இசையாகப் பிறந்தவர்

இசையாக வளர்ந்தவர்

இசையாகவே வாழ்பவர்

இசைக்கு அரசியாய்

திகழ்ந்து

கொண்டிருப்பவர்

 

இசையையே சுவாசக்

காற்றாக சுவாசிப்பவர்

இசையை உயிராய்

நேசிப்பவர்

இசைக்கு புதிய

இலக்கணம் வகுத்தவர்

இசையின் பல்வேறு

பரிமாணங்களைக்

கடந்தவர்

இசையினால்

எதிரிகளை வீழ்த்தும்

வித்தை படித்தவர்

ஏழு சுவரங்களில்

யாரும் கேட்காத

ராகங்களைப்

படைத்தவர்

என்ற சிறப்புகளைப்

பெற்றவர்

 

அதுமட்டுமல்ல

 

இளவரசி அம்பிகையின்

இதய ஒலி

எப்போதும்

இசையாகவும்

அவருடைய

எழுத்துக்கள் எப்போதும்

கவிதையாகவும்

அவருடைய

பேக்சுக்கள் எப்போதும்

பாடலாகவும்

தான் வெளிப்படும்

 

இசையே அவரது மூச்சு

இசையே அவரது பேச்சு

இயையே அவரது உயிர்

என்று வாழ்ந்து

கொண்டிருப்பவர்

 

காசி நாட்டு மன்னரின்

இரண்டாவது மகள்

அம்பிகை

வருகிறார்

வருகிறார்

வருகிறார்

 

(இரண்டு கைகளினாலும்

ஒரு

மணமாலையை

பிடித்துக் கொண்டு

இளவரசி அம்பிகை

சுயம்வர

மண்டபத்திற்குள்

நுழைந்து

அனைவரையும்

இருகரம் கூப்பி

வணங்கி விட்டு

அம்பையின்

அருகில் சென்று

நின்று கொண்டார்.)

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////

No comments:

Post a Comment