September 10, 2020

திருக்குறள்- உறங்குவது-பதிவு-9

 திருக்குறள்-

உறங்குவது-பதிவு-9

 

(b)மரணம் :

மரணம் என்பது

நிகழும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

தானாவே பிரிந்து

வெளியே செல்லும்

நம்முடைய

சூட்சும உடலானது

தன்னிடம் பதிந்துள்ள

கர்ம வினைகளுக்கேற்ப

இந்த பிரபஞ்சத்தில்

சஞ்சரிக்கும்

தன்மையைப் பெறுகிறது

 

சூட்சும உடலில்

பதிந்துள்ள

கர்ம வினைகளுக்கேற்ப

சூட்சும உடலானது

இவ்வுலகில்

பிறப்பெடுப்பதற்காக

காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில்

தன்னுடைய

கர்ம வினைகளுக்கு

ஏற்றபடியான ஒரு

ஸ்தூல உடலை

தேடிக் கொண்டிருக்கிறது

 

தன்னுடைய

கர்ம வினைகளுக்குரிய

ஸ்தூல உடலானது

கிடைத்து விட்டால்

சூட்சும உடலானது

ஸ்தூல உடலுக்குள்

பிரவேசித்து இந்த

உலகத்தில் பிறக்கிறது

 

இறந்து போன

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து செல்லும்

சூட்சும உடலானது

தன்னிடம் பதிந்துள்ள

கர்ம வினைகளுக்கேற்ப

இப்பிரபஞ்சத்தில்

சஞ்சரித்து தன்னுடைய

கர்ம வினைகளுக்குரிய

ஸ்தூல உடல்

கிடைத்தவுடன்

அந்த

ஸ்தூல உடலுக்குள்

பிரவேசித்து பிறக்கிறது

 

விழிப்புணர்வு

அற்ற நிலையில்

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடல்

பிரிந்து செல்வது

உறக்கம் , இறப்பு

ஆகிய இரண்டு

நிலைகளில்

நடைபெறுகிறது

 

உறங்குவது போல்

சாக்காடு என்றால்

நாம் உறங்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலில்

உள்ள நம்முடைய

சூட்சும உடலானது

பிரிந்து வெளியே சென்று

எத்தகைய நிலைகளை

அடைகிறதோ - அதே

நிலைகளைத் தான்

நாம் இறந்தவுடன்

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து வெளியே செல்லும்

சூட்சும உடலும் அடைகிறது

என்று பொருள்

 

உறங்கி விழிப்பதும் போலும்

பிறப்பு என்றால்

நாம் உறங்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து வெளியே சென்ற

சூட்சும உடலானது

மீண்டும் எப்படி

ஸ்தூல உடலுக்குள்

குடியேறுகிறதோ

அப்படியே

நாம் இறந்த பின்பு

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து செல்லும்

சூட்சும உடலானது

தன்னுடைய

சூட்சும உடலில்

பதிந்துள்ள

கர்ம வினைகளுக்கேற்ப

இப்பிரபஞ்சத்தில்

பிரவேசித்து விட்டு

மீண்டும் வந்து

தன்னுடைய

கர்ம வினைகளைத்

தீர்ப்பதற்குரிய

ஸ்தூல உடலைத்

தேர்ந்தெடுத்து

அதில் பிரவேசித்து

குடியேறுகிறது

என்று பொருள்

 

நாம் உறங்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

தானாகவே

பிரிந்து சென்ற

சூட்சும உடலானது

இந்த பிரபஞ்சத்தில்

சஞ்சரித்து விட்டு

மீண்டும் நம்முடைய

ஸ்தூல உடலுக்குள்

எப்படி பிரவேசிக்கிறதோ

அப்படியே நாம்

இறந்து விட்டால்

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

தானாகவே பிரிந்து

செல்லும் நம்முடைய

சூட்சும உடலானது

தன்னிடம் பதிந்துள்ள

கர்ம வினைகளுக்கேற்ப

இப்பிரபஞ்சத்தில்

சுற்றித் திரிந்து விட்டு

தன்னுடைய

கர்ம வினைகளுக்கேற்ற

ஒரு ஸ்தூல உடலைத்

தேர்ந்தெடுத்து

அதில் பிறக்கிறது

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

உறங்கு வதுபோலும்

சாக்காடு உறங்கி

விழிப்பது போலும்

பிறப்பு என்ற

திருக்குறளின்

 

மூலம் தெளிவு

படுத்துகிறார்

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------10-09-2020

//////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment