September 10, 2020

திருக்குறள்- உறங்குவது-பதிவு-2

 

திருக்குறள்-

உறங்குவது-பதிவு-2

 

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடலை

100 சதவீதம்

முழுமையாக

பிரிக்க முடியாது

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடலை

100 சதவீதம்

தனியாகப் பிரித்தால்

அதற்கு பெயர் மரணம்

மரணத்தில் மட்டுமே

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடலானது

100 சதவீதம் பிரிகிறது

 

நம்மால் நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடலை

99 சதவீதம் தான்

பிரிக்க முடியும்

1 சதவீதம்

சூட்சும உடலானது

ஸ்தூல உடலுடன்

பிணைக்கப்பட்டிருக்கும்

 

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடலைத்

தனியாகப் பிரித்து

எடுத்து வெளியே

இந்த பிரபஞ்சத்தில்

உள்ள எந்த ஒரு

இடத்திற்கும்

அனுப்பி

சூட்சும உடலை

செயல்பட வைத்தாலும்

ஸ்தூல உடலுடன்

சூட்சும உடலானது

மெல்லிய கயிறுடன்

பிணைக்கப்ட்டிருக்கும்

அவ்வாறு

பிணைக்கப்பட்டிருந்தால்

மட்டுமே

ஸ்தூல உடலானது

உயிர்பெற்று இருக்கும்

 

சூட்சும உடலானது

ஸ்தூல உடலுடன்

இவ்வாறு

மெல்லிய கயிறுடன் 

பிணைக்கப்படாமல்

இருந்தால்

ஸ்தூல உடலானது

இறந்து விடும்

 

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடலானது

தனியாகப் பிரிந்து

வெளியே செல்வதை

இரண்டு நிலைகளில்

பிரித்து விடலாம்

 

ஒன்று :

நாம் விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலை

நாமே பிரித்து

வெளியே

செயல்பட வைப்பது

 

இரண்டு :

நாம் விழிப்புணர்வு

அற்ற நிலையில்

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

தானே பிரிந்து

வெளியே சென்று

செயல்படுவது

 

நாம் விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

பிரிந்து செல்வது

என்றால்

நாம் உயிரோடு

இருக்கும் போது

அதாவது  

நாம் விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

இருக்கும் போது

அதாவது

நாம் உணர்வுகள்

பெற்ற நிலையில்

இருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலை

நாமே பிரித்து

வெளியே செல்ல

வைப்பது

என்று பொருள்

 

நாம் விழிப்புணர்வு

அற்ற நிலையில்

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

பிரிந்து செல்வது

என்றால்

நாம் விழிப்புணர்வு

அற்ற நிலையில்

இருக்கும் போது

அதாவது

நாம் உணர்வுகள்

அற்ற நிலையில்

இருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

தானே பிரிந்து

வெளியே செல்வது

என்று பொருள்

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------10-09-2020

//////////////////////////////////////////////////////

No comments:

Post a Comment