February 16, 2025

ஜபம்-பதிவு-1032 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-10

                                                        அர்ஜுனனைக் கொன்ற

                                           பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-10


அர்ஜுனன் நாகக் கன்னி உலூபியைச் சந்தித்து காதல் செய்து திருமணம் செய்து கொண்ட பிறகு தென்னாட்டினை அடைந்தான்.


திருவேங்கடமலை, திருக்காளத்தி, திருத்தணிகை, திருக்காஞ்சீபுரம்,

திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை, திருத்தில்லை,

சீர்காழி, புள்ளிருக்குவேளூர், மாயூரம், திருவிடைமருதூர்,

திருக்குடந்தை, திருவானைக்கா, திருவாவினன்குடி,

முதலிய திருத்தலங்களை சேவித்துக் கொண்டும்,

பாலாறு, சேயாறு, காவிரி முதலிய நதிகளில் முழுகிக் கொண்டும்,

திருவெண்ணீற்றால் முழுகிய திருமேனியுடன், உருத்திராட்சை அணிந்து,

நமசிவய என்ற ஐந்தெழுத்தை உச்சரித்துக் கொண்டு

மதுரையை அடைந்தான்


பாண்டியன் தலைநகராகிய மணலூர் வந்தடைந்தான் அர்ஜுனன்

பாண்டிய நாட்டிற்குள் காலடி எடுத்து வைத்து விட்டான் அர்ஜுனன்

பாண்டியர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறான் அர்ஜுனன்


வீரத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


வீரர்களுக்கு உதாரணமாக இருப்பவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


மரணத்தை நேருக்கு நேராக சந்திப்பவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


மாணத்திற்காக உயிரைக் கொடுக்கக் கூடியவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


நீதிக்காக உயிரைக் கொடுக்கக் கூடியவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


தமிழை வாழ வைக்க தன்னையே எரிக்கக் கூடியவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


ஏரும், போரும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழக் கூடியவர்கள் 

பாண்டியர்கள் என்பதையும்,


மானம் போனால் தன் உயிரையும் விட்டு விடுபவர்கள்

பாண்டியர்கள் என்பதையும்,


அன்புக் காட்டினால் அடங்கிப் போகிறவர்கள்

பாண்டியர்கள் என்பதையும்,


ஆணவத்தைக் காட்டினால் அடக்கி விட்டு போகிறவர்கள்

பாண்டியர்கள் என்பதையும்,


பாண்டியர்களைப் பார்த்து அர்ஜுனன்

இனி தான் தெரிந்து கொள்ளப்போகிறான்


அர்ஜுனனைப் பின்தொடருங்கள் 

நாமும் பாண்டியர்களைப் பற்றித்

தெரிந்து கொள்வோம்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

////////////////////////////////

No comments:

Post a Comment